October 6, 2026
  • October 6, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

எனக்கு ரொம்ப பிடிச்ச டைரக்டர் – விஜய் சேதுபதி வாக்குமூலம்

by by Oct 9, 2018 0

‘ஆரண்ய காண்டம்’ என்றொரு படம். பாக்ஸ் ஆபீஸில் பெருத்த நஷ்டம். எனினும், விமர்சகர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. அதிலிருந்து எந்த நிகழ்வில் அந்தப்படம் திரையிட்டாலும் சரி, பெருத்த கூட்டம் கூடிவிடும். ரசிகர்கள் நின்று கொண்டே பார்க்கவும் தயங்காத வரவேற்பு பெற்ற படமானது.

அதன் இயக்குநர் ‘தியாகராஜன் குமாரராஜா’ இன்றளவும் சிறந்த இயக்குநர்கள் வரிசயில் வைத்துக் கொண்டாடப்படுகிறார். அவரது அடுத்த படம் பற்றி வருடக் கணக்கில் தகவல் இல்லாத நிலையில் விஜய் சேதுபதியை வைத்து ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை…

Read More

கூத்தன் படம் பாருங்க… ஒரு பவுன் தங்கம் அள்ளுங்க..!

by by Oct 8, 2018 0

நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் நீல்கிரீஸ் முருகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதியதிரைப்படம் ‘கூத்தன்’.  இப்படத்தை எழுதிஇயக்குகிறார் A L வெங்கி.

அறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி)நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை,கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி,மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயாகிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி,கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமேநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டைன்மெண்ட்ன்பிரமாண்ட தயாரிப்பில் வரும் 11 தேதி இப்படம்திரைக்கு வருகிறது. 

சமீபத்த்ல் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டுவிழாவிலேயே பட டிக்கெட் விற்பனையை புதியமுறையில் தொடங்கி  பரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர் நீல்க்ரீஸ் முருகன் இப்போது படபார்க்க வரும் ரசிகர்களுக்கு தங்கப்பரிசு அறிவித்துஆச்சர்யப்படுத்துகிறார். 

இப்படம் வெளியாகும் தமிழ்நாட்டின் ஒவ்வொருதியேட்டரிலும் ஒரு கூப்பன் பெட்டி வைக்கப்படும். அங்கு வைக்கப்பட்டிருக்கும் கூப்பனில்  படடிக்கெட்டின் நம்பரையும் ரசிகர்கள் தங்கள் போன் நம்பர் முகவரி விவரத்தையும் எழுதி கூப்பன்பெட்டியில் போட வேண்டும். 

தமிழகம் முழுதும்  அப்பெட்டிகளில் உள்ள கூப்பன்களிலிருந்து 18 அதிர்ஷ்டசாலிகள்தேர்ந்தெடுக்கப்பட்டு தனியாக கூத்தன் பட வெற்றிவிழாவில் ஒவ்வொருவருக்கும் 1பவுன் தங்கம்வீதம் 18 பவுன் அளிக்கப்படும்.

 

                                           

Read More

விஜய் ரசிகர்களுடன் மோதல் – காமெடி கருணாகரன் போலீஸ் கமிஷனரிடம் புகார்

by by Oct 8, 2018 0

‘சர்கார்’ பாடல்கள் வெளியீட்டு விழாவில் விஜய பேசியதைக் கமெண்ட் செய்த காமெடி நடிகர் கருணாகரனை பிடி பிடியென்று விஜய் ரசிகர்கள் பிடித்து விட, பதிலுக்கு கருணாகரனும் அவர்களுடன் மல்லுக்கட்ட கடந்த நாள்களாக ட்விட்டரில் ஆவி பறக்கும் செய்தி இதுவாகத்தான் இருக்கிறது.

ஆனால், இது சர்கார் பாடல் வெளியீட்டுடன் தொடங்கிய பிரச்சினை இல்லை. மார்ச் மாதம் சினிமா ஸ்டிரைக் நடந்தபோது சிறப்பு அனுமதி பெற்று சர்கார் ஷூட்டிங் நடந்தபோதே அதை விமர்சித்து கருணாகரன் பிரச்சினையைத் தொடங்கியிருந்தார். அதன் தொடர்ச்சிதான்…

Read More

சாதீய பிரச்சினை படம் பைரவ கீதா மூலம் தமிழுக்கு வரும் ராம்கோபால் வர்மா

by by Oct 7, 2018 0

மிகச்சிறந்த இயக்குநராக ராம்கோபால் வர்மா அறியப்பட்டது ஒரு காலம். இன்றைக்கும் அவரது படங்கள் பாலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அடிக்கடி ட்விட்டர் மூலம் வம்புகளில் சிக்கினாலும் அவரது படைப்புத் திறன் வியக்க வைப்பதாகவே இருக்கும்.

ஆர்ஜிவி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ராம்கோபால் வர்மா இப்போது புதுமுகங்கள் நடிக்கும் ‘பைரவா கீதா ’ என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தயாரித்து வெளியிடுகிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் படங்களை இயக்கி தனக்கென…

Read More

விஜய்யுடன் மோதும் விஜய் ஆன்டனி..!

by by Oct 7, 2018 0

இந்த வருட ஆரம்பத்தில் தீபாவளிக்கு வரும் படங்களாக விஜய், அஜித், சூர்யா படங்கள் கருதப்பட்டாலும் தயாரிப்பு அடிப்படையில் அஜித்தும் சூர்யாவும் பின் தங்க விஜய்யின் ‘சர்கார்’ மட்டுமே வெளியாவதாக அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டது.

அதற்கு முதல் காரணம் தயாரிபாளர்களான சன் பிக்சர்ஸ். திட்டமிடுவதில் கெட்டிக்காரர்களான அவர்கள் வெளியிடும் தேதியை முடிவு செய்தே படத்தை முடித்து வெளியீட்டுக்குத் தயாராக்கி விட்டார்கள். அவர்களின் திட்டமிடுதலுக்கேற்ப ஏ.ஆர்.முருகதாஸும் படத்தை முடித்துக் கொடுத்து விட்டார்.

Thimiru...
</p srcset=

Read More

யார் பாரம் தாங்குவார்களோ அவர்கள்தான் உயர முடியும் – விஜய் சேதுபதி

by by Oct 6, 2018 0

‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ சார்பில் எஸ். நந்தகோபால் தயாரித்து வெளியான திரைப்படம் 96. ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார்.

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திரிஷா நடித்திருக்கும் இந்தப் படம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

விழாவில் விஜய் சேதுபதி பேசுகையில்,‘தமிழ் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. ‘பரியேறும் பெருமாளி’ன் வெற்றி கொண்டாடப்படுகிறது. சாதியின் தீவிரத்தையும், அதன் தீவிரவாதத்தையும்…

Read More

டோக்கியோ பட விழாவில் ராஜீவ் மேனன் இயக்கி ஜி.வி நடித்த ‘சர்வம் தாளமயம்’

by by Oct 6, 2018 0

‘மின்சார கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ வெற்றிப் படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் தற்போது ஏ.ஆர்.ரஹமான் இசையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிய ‘சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கியுள்ளார்.

ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையைக் கற்று கொள்ள விரும்பும் ஒரு இளைஞன் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான்.

இன்றைய காலகட்டத்தில் சாதி மத பிரச்சினைகளைத் தாண்டி அவனது இசை ஆசை வென்றதா என்பதே படத்தின் கதை.

தற்போது இப்படம் 31வது டோக்கியோ…

Read More

96 பட விவகாரம் – விஜய் சேதுபதி பொறுப்பேற்ற தொகையை விஷால் திருப்பித் தருகிறார்

by by Oct 5, 2018 0

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ‘96’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது. இந்நிலையில்,தயாரிப்பாளர் திரு.நந்தகோபாலுக்கு ரூ.1.50 கோடி தொகையை பைனான்ஸ் மூலம் நடிகர் விஷால் தரப்பில் வாங்கிக்கொடுக்கப்பட்டது .

அந்தத் தொகையை தயாரிப்பாளர் நந்தகோபால் ‘96’ பட ரிலீஸின்போது திரும்பத் தறுவதாக கூறியதால் நேற்று பட ரிலீஸுக்கு முன்பு வரை அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சரியான முடிவை எட்டாததை அடுத்து ‘96’ படத்தின் நாயகன் விஜய்சேதுபதி அந்தத் தொகையை தருவதாகக் கூறியபிறகு பிரச்னை…

Read More

வாசித்தால்தான் எழுத்துக்கு கற்பனை செய்ய முடியும் -கூகை நூலகத் திறப்பில் பா.இரஞ்சித்

by by Oct 5, 2018 0

இயக்குனர் பா.இரஞ்சித் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு உதவும் வகையில் கூகை திரைப்பட இயக்கம் எனும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதற்காக பெரும் நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் நண்பர்கள் உதவியோடு அந்த முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்.

சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் கூகை திரைப்பட இயக்கம் அமைப்பின் அலுவலகத்தை ‘சாய்ரட்’ பட இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைக்க இயக்குனர் ராம், லெனின் பாரதி, மாரிசெல்வராஜ் உள்ளிட்ட திரைத்துறை சார்ந்த இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில்…

Read More

கடைசிவரை பா.ரஞ்சித் அண்ணா கூடவே இருப்பேன் – மாரி செல்வராஜ்

by by Oct 4, 2018 0

சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக ‘பரியேறும் பெருமள்’ படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா RK, கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர்…

Read More