January 21, 2025
  • January 21, 2025
Breaking News
October 10, 2018

விஷாலுக்கு சவால் விடும் வரலட்சுமி சரத்குமார்

By 0 1238 Views

தன் 25வது படமாக விஷால் நடித்துத் தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. விஷாலுடன் இதில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார் , ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் உற்சாகமாக இருக்கும் டீமில் வரலட்சுமி சரத்குமாரிடம் பேசியதிலிருந்து…

“சண்டக்கோழி2 படத்தில் வேலை பார்க்கும் போது நிறைய சந்தோஷமான சூழலே இருந்தது. லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். சண்டக்கோழி2-வில் நான் என்னுடய வழக்கமான பாத்திரப்படைப்பிலிருந்து வெளியேவந்து நடித்திருக்கிறேன்.

Sandakozhi 2

Sandakozhi 2

நாங்கள் திண்டுக்கல் , காரைக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்தோம். அங்கே நிறைய தொடர்ச்சியான அழகான வீடுகள் இருக்கும். படத்தின் பல முக்கியமான காட்சிகளை அங்கேதான் எடுத்தோம். கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு அது விருந்தாக இருக்கும்.

வெயிலில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் எனக்கு முகம் மற்றும் உடலில் தோல் டேன் ஆகிக் கருத்து விட்டது. ஆனால், படத்தில் நான் நிறைய சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். அதற்கு இது உதவியாக இருந்தது..!”

‘சவால்’ விஷாலுக்குதானே..?