February 15, 2025
  • February 15, 2025
Breaking News

Tag Archives

எம்ஜிஆர் எங்கிருந்தோ என்னை வாழ்த்துகிறார் – விஷால் பரவசம்

by on January 17, 2025 0

12 வருடங்களுக்கு முன் தயாரான ஒரு படம் சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிறது என்றால் இது சினிமா வரலாற்றிலேயே இதுவரை நிகழாத அதிசயம்.. அதை நிகழ்த்தி காட்டி இருக்கிறது இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘மதகஜராஜா’ திரைப்படம். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, விஜய் ஆண்டனி (இசை) உள்ளிட்டோரின் கூட்டணியில் பாரம்பரியம் மிக்க ஜெமினி […]

Read More

ரத்னம் திரைப்பட விமர்சனம்

by on April 27, 2024 0

ஒரு படத்தை சற்றே நீளமாக எடுத்துவிட்டு அதை மூன்றாகக் கத்தரித்து இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் என்றெல்லாம் வெளியிடுவது இன்றைய ட்ரெண்ட்.  ஆனால் இதில் இயக்குனர் ஹரி முற்றிலும் மாறுபட்டவர். மூன்று பாகங்களுக்குத் தேவையான ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டு அதை எடிட்டோ எடிட் செய்து ஒரு படமாகச் சுருக்குவதில் கை தேர்ந்தவர். அதனாலேயே அவர் படங்கள் இறக்கை கட்டி பறக்கும் வேகம் கொள்கின்றன. கதைகளைப் பிடிப்பதிலும் அவர் லைன் பிடிக்கும் விதமே அலாதியானது. இந்தப் படத்தில் […]

Read More

அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நான் அரசியலுக்கு வர மாட்டேன் – விஷால்

by on April 19, 2024 0

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜன் உடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள ‘ரத்னம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து பணியாற்ற, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்க, இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பாளர்களாக […]

Read More

விமானத்தில் வைத்து லத்தி விஷாலுக்கும் சுனைனாவுக்கும் வாழ்த்து சொன்ன விஜய்

by on July 25, 2022 0

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் பிரமாண்ட டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரிக்கிறார்கள். அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். நடிகர் விஷால் பேசும்போது, லத்தியால் நான் அடி வாங்கியதில்லை. ஆனால், பீட்டர் ஹெயின் தவிர இந்த படத்தில் […]

Read More

மீண்டும் ஃபுல் ஃபார்முக்கு வந்த விஷால்

by on March 6, 2022 0

வீரமே வாகை சூடும்’  படத்திற்கு பிறகு ‘லத்தி’ என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார்.  வழக்கம் போல் அறிமுக இயக்குனர் வினோத்தின் டைரக்‌ஷனில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை சுனைனா நாயகியாக நடித்து வர. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழியில் வெளியாக இருக்கிறது. சி.முருகானந்தம் என்கிற போலீஸ் ரோலில் விஷால் நடித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் பிரபல ஸ்டண்ட் […]

Read More

இந்தியாவின் 1500 திரை அரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் விஷாலின் வீரமே வாகை சூடும்

by on February 2, 2022 0

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில், நடிகர் விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கியுள்ள “வீரமே வாகை சூடும்” படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மொழிகளில், பிரமாண்ட வெளியீடாக 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது. அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டத்தைக் களமாக கொண்டு உருவாகியுள்ளது இப்படம். நீண்ட இடைவேளைக்கு இப்படத்தில் பாண்டியநாடு பட பாணியில் மாறுபட்ட நடிப்பில் மிரட்டியிருக்கிறாராம் நடிகர் விஷால். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக […]

Read More

என்னுடன் நடித்த ரவீனாவுக்கு நிறைய தொந்தரவு கொடுத்தேன் – விஷால்

by on January 17, 2022 0

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், விஷால் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் படம் ‘வீரமே வாகை சூடும். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு படக் குழுவினர் பேசியதாவது நடிகர் மாரிமுத்து பேசும்போது… “விஷாலுடன் இது எனக்கு 5வது படம். இயக்குனர் து .ப.சரவணனின் முதல் படம். ட்ரைலர் பாக்கும் போது நல்ல கதை என்று தெரிந்திருக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு முதுகெலும்பாக இருக்கு. விஷாலின் அப்பா ஒருமுறை கை குலுக்கினார். […]

Read More

எனிமி திரைப்பட விமர்சனம்

by on November 7, 2021 0

ஆல் இன் ஆல் தியேட்டர்கள் பிடித்த ‘அண்ணாத்த’ படத்தை எனிமியாக அறிவித்து அதன் மூலம் தீபாவளி ரேஸில் புகுந்த படம் இது. ஆனால், படம் தனக்குத் தானே எனிமியாகப் போனதை படம் பார்த்திராதவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.   இரண்டு ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து நடிக்கிறார்கள் என்றால் அந்த ஸ்கிரிப்ட் அத்தனை வலிமை பொருந்தியதாக இருக்க வேண்டும். ஆனால், தாங்கள் ஸோலோ ஹீரோவாக நடிக்கும் படங்களிலேயே நல்ல ஸ்கிரிப்டை இனம் காணத் தெரியாத விஷாலும், ஆர்யாவும்  சேர்ந்து நடிக்கும் […]

Read More

பாக்ஸிங் கற்றுக் கொண்டு வந்த ஆர்யா என்னை வெளுத்து விட்டான் – விஷால்

by on October 29, 2021 0

தீபாவளிக்கு விஷால் ஆர்யா நடிப்பில் பிரமாண்ட திரில்லர் திரைப்படமாக பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிறது “எனிமி” திரைப்படம். படவெளியீட்டை ஒட்டி இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால்,ஆர்யா, மிருணாளினி, இயக்குநர் ஆனந்த் சங்கர், கருணாகரன், தயாரிப்பாளர் வினோத்குமார் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் விஷால் பேசியதாவது: என்னுடைய நல்ல நண்பர் கன்னட பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் இறந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும், கன்னட திரைப்பட உலகத்திற்கும் எனது ஆழ்ந்த ஆறுதல்கள். […]

Read More

தீபாவளிக்கு தியேட்டர் கிடைக்க போராடுவேன் – எனிமி தயாரிப்பாளர் வேதனை ஆடியோ

by on October 22, 2021 0

விஷால், ஆர்யா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள எனிமி படம் தீபாவளிக்கு வெளிவர இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். தீபாவளிக்கு பிரமாண்ட படம் வர இருப்பதால், இந்த படத்திற்கு போதுமான தியேட்டர்கள் தராமல் படம் வெளிவருவதை தடுக்கிறார்கள் என்று தயாரிப்பாளர் வினோத் குமார் வேதனையுடன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், எனிமி படத்தை தயாரித்துள்ளேன். நவ.,4ல் ரிலீஸ் செய்ய உள்ளோம். ஆனால் பல ஏரியாக்களில் இப்போது நடக்கும் பிரச்னை என்னவென்றால் ஒரு பெரிய […]

Read More