September 25, 2026
  • September 25, 2026
Breaking News

மீண்டும் ஃபுல் ஃபார்முக்கு வந்த விஷால்

By on March 6, 2022 0 615 Views

வீரமே வாகை சூடும்’  படத்திற்கு பிறகு ‘லத்தி’ என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார். 

வழக்கம் போல் அறிமுக இயக்குனர் வினோத்தின் டைரக்‌ஷனில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை சுனைனா நாயகியாக நடித்து வர. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழியில் வெளியாக இருக்கிறது.

சி.முருகானந்தம் என்கிற போலீஸ் ரோலில் விஷால் நடித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் பிரபல ஸ்டண்ட் மாஸ்ட பீட்டர் ஹெய்ன் தலைமையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஃபிளாட்-டில் ஃபைட் சீன் படமாக்கப்பட விஷாலுக்கு எதிர்பாரா விதமாக கையில் காயமும், எலும்பு முறிவும் ஏற்பட்டது.

இதையடுத்து கேரளாவில் உள்ள குருகிருபா ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் ஒரு மாதமாக நடிகர் விஷால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இந்த சிகிச்சை முடிநது இன்று வீடு திரும்பியுள்ளார். 

இதைத்தொடர்ந்து நாளை நடைபெற்றும் ‘லத்தி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விஷால் கலந்துக்கொள்ள உள்ளாராம்.