April 24, 2024
  • April 24, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 96 பட விவகாரம் – விஜய் சேதுபதி பொறுப்பேற்ற தொகையை விஷால் திருப்பித் தருகிறார்
October 5, 2018

96 பட விவகாரம் – விஜய் சேதுபதி பொறுப்பேற்ற தொகையை விஷால் திருப்பித் தருகிறார்

By 0 756 Views

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ‘96’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது. இந்நிலையில்,தயாரிப்பாளர் திரு.நந்தகோபாலுக்கு ரூ.1.50 கோடி தொகையை பைனான்ஸ் மூலம் நடிகர் விஷால் தரப்பில் வாங்கிக்கொடுக்கப்பட்டது .

அந்தத் தொகையை தயாரிப்பாளர் நந்தகோபால் ‘96’ பட ரிலீஸின்போது திரும்பத் தறுவதாக கூறியதால் நேற்று பட ரிலீஸுக்கு முன்பு வரை அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சரியான முடிவை எட்டாததை அடுத்து ‘96’ படத்தின் நாயகன் விஜய்சேதுபதி அந்தத் தொகையை தருவதாகக் கூறியபிறகு பிரச்னை தீர்ந்து ‘96’ படம் ரிலீஸானது.

இது தொடர்பாக தற்போது விஷால் தரப்பில் விசாரித்தபோது, 

விஷால் தொடர்ந்து பைனான்ஸ் ரீதியாக பல வலிகளைச் சந்தித்து வருகிறார். அந்தமாதிரி ஒரு வலியை நடிகர் விஜய்சேதுபதிக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. இந்த சம்பவத்துக்கு பிறகு நேற்று இரவு முழுக்க அவர் உறங்கவும் இல்லை.

ஆகவே, விஜய்சேதுபதி கொடுப்பதாகக் கூறியுள்ள ரூ.1.50 கோடி தொகையைத் தர வேண்டாம். அதுக்கான பொறுப்பை மீண்டும் விஷாலே ஏற்றுக்கொள்கிறார். திரு.நந்தகோபால் அவருக்கு பைனான்ஸ் மூலம் வாங்கிக்கொடுத்த ரூ1.50 கோடி தொகையை விஷால், நந்தகோபாலிடமே பெற்றுக் கொள்வார். அதுவரை அந்த தொகைக்கு விஷால் வட்டியும் கட்டுவார்.

ஆகவே, பைனான்ஸ் விஷயத்தில் தான் சுமக்கும் வலியை திரு. விஜய்சேதுபதி சுமக்க வேண்டாம் என்று விஷால் நினைக்கிறார். மேலும், இந்த பிரச்சினையிலிருந்து விஜய்சேதுபதி எந்த வலியும் இல்லாமல் வெளியே வர வேண்டும். பொருளாதார ரீதியாக அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்..! என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் வெளியாகியுள்ள 96 படம் வெற்றியடைய வாழ்த்துகளையும் விஷால் தெரிவித்தாராம்..! நல்ல கிளைமாக்ஸ்..!