September 16, 2026
  • September 16, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • எனக்கு ரொம்ப பிடிச்ச டைரக்டர் – விஜய் சேதுபதி வாக்குமூலம்
October 9, 2018

எனக்கு ரொம்ப பிடிச்ச டைரக்டர் – விஜய் சேதுபதி வாக்குமூலம்

By 0 1284 Views

‘ஆரண்ய காண்டம்’ என்றொரு படம். பாக்ஸ் ஆபீஸில் பெருத்த நஷ்டம். எனினும், விமர்சகர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. அதிலிருந்து எந்த நிகழ்வில் அந்தப்படம் திரையிட்டாலும் சரி, பெருத்த கூட்டம் கூடிவிடும். ரசிகர்கள் நின்று கொண்டே பார்க்கவும் தயங்காத வரவேற்பு பெற்ற படமானது.

அதன் இயக்குநர் ‘தியாகராஜன் குமாரராஜா’ இன்றளவும் சிறந்த இயக்குநர்கள் வரிசயில் வைத்துக் கொண்டாடப்படுகிறார். அவரது அடுத்த படம் பற்றி வருடக் கணக்கில் தகவல் இல்லாத நிலையில் விஜய் சேதுபதியை வைத்து ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை அறிவித்தபோது அத்தனை பேரின் கவனமும் அந்தப் பக்கம் திரும்பியது.

Super Deluxe First Look

Super Deluxe First Look

அதிலும் விஜய் சேதுபதி அதில் திருநங்கையாக நடிப்பதாகத் தகவல் பரவியதும் அது தொடர்பான புகைப்படங்கள் அங்கங்கே பரவலாக வெளியான நிலையில் ஒட்டுமொத்தத் திரையுலகமும் அந்தப் படத்தை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறது.

இந்நிலையில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் முதல் பார்வை நேற்று வெளியானதும் மீண்டும் பரபரப்பு பற்றிக் கொண்டது. அதிலும் அந்த ‘ஃபர்ஸ்ட் லுக்’கை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட விஜய் சேதுபதி, “இது எனக்கு ரொம்பப் பிடிச்ச டைரக்டர்’ என்று ‘தியாகராஜன் குமாரராஜா’வைக் குறிப்பிட்டு ட்வீட் செய்ய படத்தின் எதிர்பார்ப்பு பலமடங்காகி விட்டது.

இயக்குநர்களே கொண்டாடும் விஜய் சேதுபதியே ஒரு இயக்குநரைக் கொண்டாடினால்..? வேறென்ன… படமும் ‘சூப்பர் டீலக்ஸ்’ கேட்டகரிதான்..!