January 21, 2025
  • January 21, 2025
Breaking News
October 12, 2018

வேற லெவல் ஆக்‌ஷனில் விஜய் ஆண்டனி..!

By 0 1014 Views

தீபாவளிக்கு தில்லாகக் களத்தில் இறங்கும் விஜய் ஆண்டனி, அதே தில்லுடன் முதல்முறையாகக் காக்கிச்சட்டை போட்டுக் காவல் அதிகாரியாகிறார் களமிறங்கும் ‘திமிரு புடிச்சவன்’ (டைட்டிலைக் காட்டியே டைரக்டர் சான்ஸ் வாங்கியிருப்பார் போல…) படத்தில்.

யு டியூபில் இரண்டே தினங்களில் 15 லட்சம் பார்வைகளைக் கடந்த இந்த டிரைலரே இரு தினங்களாக ட்ரென்டிங்கில் முதலிடத்திலும் இருக்கிறது. இதற்குக் காரனம் விஜய் ஆண்டனியின் ‘வேற லெவல்’ ஆக்‌ஷன்தான். இதுவரை சாதுவான பாத்திரங்களிலேயே அவரைப் பார்த்துவந்த நமக்கு இத்தனை எமோஷனலாக வசனம் பேசியும், அதிரடியான ஆக்‌ஷன் காட்டியும் அவர் நடித்துப் பார்த்ததில்லை.

எனக்கு ‘சிங்க’ முகமும் காட்ட முடியும் என்று அவர் நிரூபித்திருக்கும் இந்தப்படம் டிரைலரைப் போலவே வெற்றியடையும் என்று எதிர்பார்க்கலாம்.

விஜய் ஆண்டனி கார்ப்பரேஷனுக்காக ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் நிவேதா பெத்துராஜ் ஜோடி சேர்கிறார். அதிரடி டிரைலர் கீழே…