January 14, 2025
  • January 14, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • லீனா மணிமேகலையைத் தொடர்ந்து சுசி கணேசன் மீது அமலாபால் பாலியல் புகார்…
October 24, 2018

லீனா மணிமேகலையைத் தொடர்ந்து சுசி கணேசன் மீது அமலாபால் பாலியல் புகார்…

By 0 1091 Views

ஏற்கனவே இயக்குநர் சுசி கணேசன் மீது கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை ‘மீ டூ’ பதிவில் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அதற்கு மறுப்புத் தெரிவித்த சுசி கணேசன், லீனா மீது வழக்குத் தொடர்வதாக அறிவித்தார்.

இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத நிலையில் நடிகை அமலாபால் இயக்குநர் சுசி கணேசன் மீதான பாலியல் புகாரைத் தெரிவித்திருக்கிறார். சுசி இயக்கிய ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் அமலா பால். இதுகுறித்து அவர் கூறியது…

“திருட்டுப் பயலே 2ம் பாகத்தில் என்னிடம் இரட்டை அர்த்தம் தொணிக்கும் விதத்தில் பேசினார் சுசி. படப்பிடிப்பில் காரணம் இல்லாமல் உரசிப் பேசும் வழக்கம் உள்ளவர் அவர்.

கொடுமைகளை வெளியில் சொன்ன லீனா மணிமேகலைக்குப் பாராட்டுகள். அவர் சுசியிடம் என்ன கொடுமையை அனுபவித்திருப்பார் என்று நான் அறிகிறேன்.

அரசாங்கமும், நீதித்துறையும் பெண்களுக்குப் தொழில் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த வேண்டும்..!”

இது சுசி கணேசனுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.