April 26, 2025
  • April 26, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ‘தில்லுக்கு துட்டு 2’ மூலம் மீண்டு(ம்) வரும் சந்தானம்
October 24, 2018

‘தில்லுக்கு துட்டு 2’ மூலம் மீண்டு(ம்) வரும் சந்தானம்

By 0 1213 Views

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், ராம்பாலா இயக்கத்தில், 2016ம் ஆண்டு சந்தானம் கதாநாயகனாக நடித்த வெற்றிபெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’.

இதில் கதாநாயகியாக ஏஞ்சல் சிங் நடித்திருந்தார். இவர்களுடன் ஆனந்தராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி, கருணாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். பாடல்களுக்கு இசை S.தமனும், பின்னணி இசை கார்த்திக் ராஜாவும் அமைத்திருந்தனர்.

இப்படம் நகைச்சுவைக் கலந்த பேய் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ‘தில்லுக்கு துட்டு 2’ வெளிவரவுள்ளது.

சந்தானம் தான் இதிலும் கதாநாயகனாக நடிக்கிறார். முதல் பாகத்தைவிட இரண்டு மடங்கு நகைச்சுவையோடு எடுக்கப்பட்டுள்ளதாம்.

இப்படம் நகைச்சுவை கலந்த காமெடி படமாக மட்டுமல்லாமல் பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டும், ஷிர்த்தா சிவதாஸ் நடிப்பிலும் அமைகிறதாம்.

முதல் பாகத்தில் நடித்த குழுவுடன் ‘கலக்கப்போவது யாரு’ புகழ் ராமர் மற்றும் தனசேகர், கேரளாவில் ‘standup காமெடி’யில் புகழ்பெற்ற அய்யப்பா பைஜூவும் மற்றும் பலரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஹாண்ட்மேட் பிலிம்ஸ்-ன் (Handmade films) N.சந்தானம்  தயாரிக்கிறார். ‘சாகா’ மூலம் புகழ்பெற்ற ஷபீர் இசையமைக்கிறார். தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய, மாதவன் எடிட்டிங் செய்கிறார்.

‘தில்லுக்கு துட்டு 2’ டீஸர் வருகிற அக்டோபர் 29ம் தேதி வெளியிடப் போவதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.