July 19, 2026
  • July 19, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிவகார்த்திகேயன் மகளுடன் பாடிய பாடல் 5 கோடி பார்வைகளைக் கடந்தது
October 18, 2018

சிவகார்த்திகேயன் மகளுடன் பாடிய பாடல் 5 கோடி பார்வைகளைக் கடந்தது

By 0 1234 Views

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மூலம் ‘கனா’ படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கும் செய்தி அனைவருக்கும் தெரிந்ததுதான்.

சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் தர்ஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கனா’ படத்தின் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அதில் சிவகார்த்திகேயனும், அவர் மகள் ஆராதனா மற்றும் வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார்கள்.

இதுபற்றி சிவகார்த்திகேயன் இப்படி சிலாகிக்கிறார்.

“சில நேரங்களில், நாம் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அப்படி வாயடைத்து போகும் அளவுக்கான அன்பை ரசிகர்கள் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடலுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

தந்தை, மகள் உறவைச் சொல்லும் இந்த பாடல் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மற்றும் பாடலாசிரியர் ஜி.கே.பி ஆகியோரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. அதோடு, என் மகள் ஆராதனாவுடன் எனக்கு இருக்கும் உறவை காலம் முழுக்க நினைக்க, கிடைத்த இந்த பாடலுக்காக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பாடல் இப்போது யூடியூபில் 50 மில்லியனை தாண்டியிருப்பதும், பலருக்கு பிடித்தமான பாடலாக இருப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பாடலை பாடிய வைக்கம் விஜயலட்சுமி அவர்களுக்கு நன்றி. ஆராதனாவின் அழகிய குரல் இந்த பாடலின் இனிமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக என்னையும், என் மகள் ஆராதனாவையும் இந்த ஒரே பாடலில் பாடவைக்கும் யோசனையை கொண்டு வந்த என் நண்பரும் திரைப்பட இயக்குனருமான அருண்ராஜா காமராஜிற்கு நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன்..!”

‘கனா’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. படத்தின் டிரெய்லர் மிக விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

5 கோடி பார்வைகளைக் கடந்த பாடல் வீடியோ கீழே…