March 24, 2025
  • March 24, 2025
Breaking News
March 5, 2019

ஓவியா கைதாவாரா 90 எம் எல் பரபரப்பு

By 0 1103 Views

பரபரப்பாக வெளியான 90 எம் எல் படம் ஒரு புறம் ஒரு சாராரின் பாராட்டுகளையும், இன்னொரு புறம் கடுமையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. 

பாராட்டுபவர்கள் இன்றைக்கு இருக்கும் நிலையை படம் எடுத்துக் காட்டுவதாக சொல்கிறார்கள். ஆனால், எதிர்ப்பவர்கள் பெண்களை தவறாக சித்திரிப்பது மட்டுமல்லாமல் அவர்களைத் தவறான வழியில் செல்ல படம் தூண்டுவதாகவும் கூறுகிறார்கள்.

இந் நிலையில், 90 எம்.எல் படத்தில் பெண்களை இழிவு படுத்தும் வகையில் நடித்த ஓவியாவை கைது செய்ய வலியுறுத்தி இந்திய தேசிய லீக் கட்சியினர் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

சென்சார் செய்யப்பட்டு வெளியான படங்களில் இதுவரை இது போன்ற புகார்களுக்காக பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. அதனால் ஓவியா கைது செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு குறைவாகவே உள்ளது.

என்ன நடந்தாலும் அது படத்துக்கான பப்ளிசிட்டியாகவே பார்க்கப்படுகிறது..!