March 28, 2024
  • March 28, 2024
Breaking News
July 15, 2019

இந்துஜாவை நடிக்க வைத்த இயக்குநரின் விடாமுயற்சி

By 0 632 Views

‘ஃப்ளக்ஸ் பிலிம்ஸ்’ சார்பில் இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா, இந்துஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஜூலை 13 அன்று நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் ஏகே, நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா, படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதிரத்னம், சுந்தர்ராம், இசை அமைப்பாளர் திவா கரா தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத்தொகுப்பாளர் வேல்முகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன்,அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் படக் குழுவினர் பேசியதிலிருந்து…

விழாவில் இயக்குநர் அருண் கார்த்திக் –

“இதை ஒரு சாதாரண காமெடி படமாகத்தான் ஆரம்பித்தோம் .ஆனால் அப்படியே இருக்கக்கூடாது என்று யோசித்தோம்.பலவித வண்ணங்களையும், வாசனைகளையும் கலந்து இதை வேறு வகையான படமாக உருவாக்கி இருக்கிறோம்.

இதில் பலரது உழைப்பு இருக்கிறது .ஒரு புதிய படக்குழு செய்துள்ள புதிய முயற்சி இது .ஊடகங்கள் ஆதரவு தர வேண்டும்.  பொதுவாகக் கண்டிப்பவர்களை யாருக்கும் பிடிக்காது அப்பாவாக இருந்தாலும் சரி, அம்மாவாக இருந்தாலும் சரி. ஆனால் ஊடகங்கள்தான் கண்டிக்கிறபோதும் நண்பர்களாக இருப்பவர்கள். இப்படத்திற்கு அவர்களின் ஆதரவு வேண்டும்..!”

நாயகன் துருவா-

“இயக்குநர் ஏ .கே ஒன்மேன் ஷோ வாக பலவற்றை படத்தில் செய்திருக்கிறார். 90 களில் சிம்ரன் இருந்த மாதிரி கவர்ச்சியாகவும் இருக்கிறார்.நல்ல நடிப்பையும் கொடுத்திருக்கிறார் இந்துஜா.

இதில் எங்களுடன் இணைந்து நடித்திருக்கும் ஷாரா, ஆதித்யா நல்ல பெயர் பெறுவார்கள். ஒரு படத்திற்குக் கதை தான் முக்கியம் என்றாலும் விநியோகம் மிக முக்கியம் என்று இப்போது மாறியிருக்கிறது. இன்று சின்ன படம் பெரிய படம் என்றில்லை . வெற்றிப்படம் தோல்விப்படம் என்று மட்டுமே பேசப்படுகிறது..!”

நாயகி இந்துஜா –

“இயக்குநரின் விடாமுயற்சியால் இப்படத்தில் நடித்தேன். இந்தப் படக்குழு குறும்பட உலகத்தில் இருந்து வந்தாலும் தங்கள் பணியை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். குறும்படக் கலைஞர்கள் இருப்பதைக் கொண்டு சிறப்பாக செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அப்படி இதிலும் செய்திருக்கிறார்கள்..!”

லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்திரன் –

“நானும் குறும்பட உலகத்திலிருந்து பெரும் படத்துக்கு பல கனவோடுவந்தவன். நிகழ்ச்சிக்கு இங்கே வந்துள்ள இந்த டி.சிவா சார் அன்று என்னை ஊக்கப்படுத்தியவர். அவர் இங்கிருக்கிறார். எனக்குத் தொழில்நுட்ப ரீதியில் ஆலோசனைகள் வழங்கிய ஜே எஸ்கே சதீஷ் சார் இங்கே இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது .

இந்தப் படக்குழுவினரைப் பார்க்கும்போது ஒரு நம்பிக்கை வருகிறது. டிரைலரைப் பார்க்கும்போது பாசிட்டிவ் எனர்ஜி வருகிறது. படத்திலும் அதில் இருக்கும் என நம்புகிறேன். படத்தை எனக்குப் பிடித்து இருந்தால் நிச்சயமாக நான் வாங்கி வெளியிடுவேன்.

நான் பெரும்பாலும் புதுவித படக்குழுவுடன் தான் பணியாற்றுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கே உள்ள சினிமா வெளியீடு மற்றும் வியாபார விஷயங்கள் எனக்குத் தெரியாமல் இருந்தது .அது புரிவதற்கு ஏழு வருடங்களானது. நேற்று வெளியான ‘கூர்கா’ படத்தை நான் முதன்முதலில் வெளியிட்டுள்ளேன். பெரிய விலை கொடுத்துவிட்டதாகவும் பலரும் சொன்னார்கள் .கதையை மட்டும் பார்த்தேன் .படமும் வெற்றிகரமாக ஓடுகிறது.

ஒரு படத்தை உருவாக்க நினைக்கும் போது கிடைக்கும் தோல்வியில் இருந்து எழுந்து போராடி கிடைக்கும் வெற்றி அளவில் பெரியதாக இருக்கும்..!”

Super Duper Audio Launch

Super Duper Audio Launch