April 18, 2024
  • April 18, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பாரதிராஜா, சசிகுமாரை பெண்கள் கபடிக் குழுவுக்கு அழைத்து வரும் சுசீந்திரன்
October 23, 2018

பாரதிராஜா, சசிகுமாரை பெண்கள் கபடிக் குழுவுக்கு அழைத்து வரும் சுசீந்திரன்

By 0 919 Views

இயக்குனர் சுசீந்திரன் தற்போது ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் போன்ற படங்களை இயக்கி முடித்திருக்கிறார். இவற்றுள் ஜீனியஸ் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகிறது.

இதைத் தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன், சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் ‘கென்னடி கிளப்’ என்ற படத்தை இயக்குகிறார். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் படம் இது. பி. நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தாய் சரவணன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

Kennedy Club

Kennedy Club

இதில் மீனாட்சி , காயத்ரி , நீது , சௌமியா , ஸிம்ரிதி , சௌந்தர்யா, சூரி , முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இப்படத்துக்காக பாலிவுட் வில்லனை தேடிவருகிறார் சுசீந்திரன்.

‘பாண்டியநாடு’, ‘பாயும் புலி’ மற்றும் ‘மாவீரன் கிட்டு’ படத்துக்குப் பின் டி. இமான், இயக்குனர் சுசீந்திரன் கூட்டணி இப்படத்தில் இணைகிறது. ஒளிப்பதிவு குருதேவ்.

‘வெண்ணிலா கபடிக்குழு’வுக்குப் பின் ஏன் மீண்டும் கபடி பக்கம் வருகிறார் சுசீந்திரன்..?

Kennedy Club

Kennedy Club

இயக்குனர் சுசீந்திரனின் தந்தை புகழ்பெற்ற கபடிக்குழுவின் நிறுவனர். அவர் 40 வருடமாக அந்தக் கபடி குழுவை நடத்தி பயிற்சியளித்து வருகிறார். அவரிடம் பயிற்சி பெற்ற பலர் தேசிய மற்றும் உலகளாவிய போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்கள் வென்றுள்ளனர். அந்தத் தாக்கம்தான் அவரை மீண்டும் பெண்கள் கபடியின் பக்கம் வரவழைத்திருக்கிறது.

படத்தில் நிஜ பெண் கபடி வீராங்கனைகள் நடிக்கிறார்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

பழனியை கதைக்களமாக வைத்து உருவாகவுள்ள இப்படம். வருகிற தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகவுள்ளது.