December 1, 2021
  • December 1, 2021
Breaking News

Tag Archives

தொரட்டி மாரிமுத்து இயக்கும் படத்தில் சசிகுமார்

by on November 19, 2021 0

தனது யதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சசிகுமார். தற்போது பலரின் பாராட்டையும், சர்வதேச விருதுகளையும் பெற்ற ‘தொரட்டி’ படத்தின் இயக்குனர் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்கின்றார். Standard Entertainments சார்பாக G.M.டேவிட் ராஜ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம்.C.S இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. தேனி, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் […]

Read More

மீண்டும் உண்மைச் சம்பவத்தை படமாக்கும் விருமாண்டி நாயகனாக சசிகுமார்

by on January 19, 2021 0

உண்மைச் சம்பவங்களைப் படமாக்குவது எப்போதுமே அவ்வளவு எளிதான விஷயமல்ல. அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பார்க்கும் போது, அவர்களது நினைவுகள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். அப்படியொரு உண்மைச் சம்பவத்தை ‘க/பெ ரணசிங்கம்’ என்ற பெயரில் இயக்கி அதில் மாபெரும் வெற்றி பெற்றவர் விருமாண்டி. அந்தப் படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் விருமாண்டியை வெகுவாகப் பாராட்டினார்கள். அதற்குப் பிறகுத் தனது அடுத்த படத்துக்கான கதையை முடிவு செய்து, திரைக்கதை எழுதி வந்தார் விருமாண்டி. இதுவும் ஒரு உண்மைச் சம்பவம் […]

Read More

தமிழின் அடுத்த சாதனைப்படம் வெற்றி மாறன் சசிக்குமார் கதிரேசன் கூட்டணியில்

by on November 4, 2020 0

பத்தாண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசனும் இணைகிறார்கள். ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘பொல்லாதவன்’ படம் மூலம் s.கதிரேசன் தயாரிப்பாளராகவும் , டைரக்டராக வெற்றிமாறனும் திரைத்துறையில் அறிமுகமானார்கள். இதை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் இயக்க ‘ஆடுகளம்’ படத்தை தயாரித்தார்,எஸ்.கதிரேசன். இப்படம் 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது. மேலும் ‘நய்யாண்டி’,’ ஜிகர்தண்டா’ போன்ற பல படங்களைத் தயாரித்தார். டைரக்டர் வெற்றிமாறன், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனத்தைத் […]

Read More

36 வருடங்களுக்குப் பின் தயாராகும் முந்தானை முடிச்சு பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்

by on September 19, 2020 0

ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த திரைப்படம் முந்தானை முடிச்சு. 1983-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அப்போது திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றி பெற்றது. மேலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதே படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஊர்வசி, தீபா, கே.கே.சௌந்தர், தவக்களை சிட்டிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 36 வருடங்களுக்கு பின்னர் ரீமேக் செய்யப்பட இருப்பதாக […]

Read More

அய்யப்பனும் கோஷியும் தமிழில் சரத்குமாரும் சசிகுமாரும்

by on March 22, 2020 0

சமீபத்தில் நடிகர் ப்ரித்வி ராஜ் மற்றும் பிஜு மேனன் இணைந்து நடித்து வெளியான மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. கேரள, தமிழ் நாட்டின் எல்லைப் பகுதியில் சந்தித்துக் கொள்ளும் இருவருக்கிடையே நடக்கும் ஈகோ உள்ளிட்ட சண்டையை மிகவும் வித்யாசமான கோணத்தில் காண்பிக்கும் இந்த திரைப்படத்திற்கு இருமாநிலத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியிருப்பது தெரிந்த விஷயம். அதில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் […]

Read More

சூர்யா தயாரிக்கும் அடுத்தபடம் சசிகுமார் ஜோதிகா நடிக்க தொடங்கியது

by on November 28, 2019 0

தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் தரமான வெற்றிப்படங்களை தந்து வரும் நடிகர் சூர்யாவின் 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த பட பூஜை, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் இன்று  காலை (நவம்பர் 28) நடத்தப்பட்டது. மிக வித்தியாசமான படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர்கள் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி கூட்டணியில் சூரி, கலையரசன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கிறார்கள்.   கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக இந்தப் படம் […]

Read More

எம்ஜிஆர் மகன் ஆகும் சசிகுமார் ஷூட்டிங் தொடக்கம்

by on September 25, 2019 0

கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றி பெற்றவர் இயக்குநர் பொன்.ராம். அவரோடு இப்போது சசிகுமார் கைகோர்த்துள்ளார். இந்தக் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தேனியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. ’எம்.ஜி.ஆர் மகன் ‘என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக களமிறங்கிறார் மிருணாளினி ரவி. கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆகிய பணிகளைக் கவனிக்கிறார் […]

Read More
  • 1
  • 2