May 27, 2020
  • May 27, 2020
Breaking News
  • Home
  • Director Suseendran

Tag Archives

சாம்பியன் திரைப்பட விமர்சனம்

by on December 14, 2019 0

வடசென்னைக் கதைகள் என்றாலே கால்பந்து விளையாடுவதும், வன்முறைக் களத்தில் ஈடுபடுவதும்தான் என்ற இலக்கணம்தான் தமிழ் சினிமாவில் எடுத்தாளப்படுகிறது. இதிலும் அதேதான் என்றாலும் இளைஞர்களின் கால்பந்தாட்டக் கனவையும், வன்முறைக் களத்தையும் உள்ளது உள்ளபடி நடப்பது நடந்தபடி காட்டியிருப்பதுடன் இன்றைய தலைமுறை அந்த அடையாளங்களிலிருந்து மீண்டு சாதிக்க விரும்புவதைக் காட்டியிருக்கிறார் தமிழில் அதிக பட்ச விளையாட்டுப் படங்கள் எடுத்த இயக்குநர் சுசீந்திரன்..  இதில் ‘சாம்பியன்’ என்ற தலைப்புக்கு அவர் சொல்ல வரும் பொருளே வேறு. அடுத்த வேளைச் சோற்றுக்கும், அடுத்து […]

Read More

பிகிலுக்கு முன்பே தொடங்கிய படம் சாம்பியன்

by on December 12, 2019 0

தமிழில் ஸ்போர்ட்ஸ் படங்கள் வருவதே அபூர்வம் என்றிருக்க, ‘வெண்ணிலா கபடிக்குழு’ மூலமாகவும், ‘ஜீவா’, ‘கென்னடி கிளப்’ படங்கள் மூலமாகவும் விளையாட்டு மற்றும் விளையாட்டின் அரசியல் பற்றியும் தெளிவாக புரிந்து கொள்ளவும், விவாதிக்கவும் வைத்தவர் இயக்குநர் சுசீந்திரன். அவர் நாளை ‘சாம்பியன்’ என்ற கால் பந்தாட்டப் படம் மூலம் இன்று வெள்ளித்திரைக்கு வருகிறார். கால்பந்தாட்டத்தை முன்வைத்து ஒரு சூப்பர் ஹீரோவின் பின்னணியில் இல்லாமல் இந்தப்படத்தில் ‘விஷ்வா’ என்ற புதுமுகத்தை அறிமுகம் செய்கிறார் ‘தில்’லான சுசீ. சாம்பியன் ஹீரோ உண்மையிலேயே […]

Read More

அடுத்த தனுஷ் இவர்தானாம் சொல்கிறார் சுசீந்திரன்

by on December 2, 2019 0

களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாம்பியன்’. நடுத்தர மக்களின் வாழ்வியலோடு இணைந்த, வட சென்னை மக்களின் கால்பந்து விளையாட்டை அதன் அத்தனை இயல்புகளோடும் மக்களின் வாழ்வியலை கலந்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் சுசீந்திரன். விஷ்வா இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். மிருணாளினி, சௌமிகா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மனோஜ், நரேன், ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டில் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியதிலிருந்து… டி.ராஜேந்தர் பேசியதாவது… […]

Read More

பெண்களுக்கு புத்திமதி சொல்லப்போகும் சுசீந்திரன்

by on June 19, 2019 0

புதுமையான, சிக்கலான கதையோட்டங்களை வணிக அம்சங்களுடன் கலந்து கொடுக்கும் திறனுக்காகவும், குறுகிய காலத்தில் திரைப்படங்களை முடித்து கொடுப்பதிலும் இயக்குனர் சுசீந்திரன் கவனிக்க வைக்கிறார். அடுத்து வரவிருக்கும் அவரது ‘ஏஞ்சலினா’ திரைப்படம் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள காரணம், அவரது முந்தைய திரைப்படங்களில் ஒன்றான ‘ஆதலால் காதல் செய்வீர்’ இதே மாதிரி இளமைத்தன்மையை கொண்ட , ஒரு அழுத்தமான கருத்தை அதன் முடிவில் கொண்டிருந்தது. சமீபத்தில் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தில் நடித்ததற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் சுசீந்திரன் […]

Read More

கபடி வீராங்கனைகளுக்கு பாரதிராஜா வீட்டில் விருந்து

by on March 17, 2019 0

நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’.   இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்திலும் பல ஊர்களிலும் நடத்தப்பட்டு வந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர்.   பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். மார்ச் 14-ம் தேதியுடன் பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த […]

Read More

சசிகுமார் படங்களில் அதிக பட்ஜெட் 2 கோடியில் இறுதிக் காட்சி

by on March 11, 2019 0

சசிகுமார், இயக்குனர் பாரதிராஜா, இணைந்து  நடிக்க பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கென்னடி கிளப். சசிகுமார் இதுவரை நடித்ததிலேயே இந்த படம் தான் அதிக பட்ஜெட் கொண்ட படம். 15 கோடி செலவில் உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. தற்போது விழுப்புரத்தில் உள் விளையாட்டு அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக இந்தியாவில் இருந்து 16 குழுக்கள் வந்துள்ளது. ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், […]

Read More

ஜீனியஸ் விமர்சனம்

by on October 30, 2018 0

‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ பார்க்கும்போது மகன் வீராட் கோலி ஆக வேண்டும் என்றும், விஜய் டிவி பார்த்து “என் மகன் சூப்பர் சிங்கரா ஆகணும்…” என்றும், அடுத்த வீட்டுப் பையன் அமெரிக்காவில் செட்டில் ஆனதைக் கேட்டு என் பிள்ளை ஆஸ்திரேலியாவில் ஆஸ்தி சேர்க்க வேண்டும் என்றும் அதற்கான அத்தனை முயற்சிகளிலும் இறங்குபவரா நீங்கள்..? உங்களுக்காகத்தான் இந்தப் படம். கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் பெற்றோர் இந்த ரகம்தான். ஆக, ஒட்டுமொத்த பெற்றோருக்கான ஒரு பாடம்தான் இந்தப்படம். அறிவாளியான குழந்தையைப் பெற்றவர்கள் […]

Read More

விஜய் ஜெயம் ரவி நடிக்க முடியாமல் போன படம் ஜீனியஸ் – சுசீந்திரன்

by on October 24, 2018 0

தன் படங்களில் சமுதாயம், கல்வி, விளையாட்டு என்று சமூகத்தின் மீதான அத்தியாவசிய அக்கறையுடன் படங்களை எடுத்து வருபவர் இயக்குநர் சுசீந்திரன். இப்போது சுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து நடிக்கும் ‘ஜீனியஸ்’ படத்தை இயக்கியுள்ளார். வரும் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் இப்படம் பற்றி சுசீந்திரன் கூறியது… “பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு டீ கடையில் ஒரு ஸம்பவம் நடந்தது. ‘ஐடி’ துறையில் வேலை செய்பவரை போல் நன்றாக உடை அணிந்துக்கொண்டு டீ ஆர்டர் செய்த ஒரு நபர் அதைக் […]

Read More
  • 1
  • 2