July 2, 2025
  • July 2, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கூர்கா படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக கனடா மாடல்..?
October 22, 2018

கூர்கா படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக கனடா மாடல்..?

By 0 1029 Views

‘சாம் ஆண்டன்’ இயக்கும் ‘கூர்கா’ படத்தில் வெளிநாட்டு நடிகை நடிக்கிறார் என்று கடந்த சில நாட்களாகவே ஒரு செய்தி இருந்தது. தற்போது அது அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கனடா மாடல் எலிஸ்ஸா, அமெரிக்க தூதர் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகம் ஆகிறார். இயக்குனர் சாம் ஆண்டன் இந்த கதாபாத்திரத்திற்காக பல சர்வதேச முகங்களை பார்த்து, இறுதியாக எலிஸ்ஸா தான் சரியான தேர்வு என்று அவரை தேர்வு செய்திருக்கிறார்.

இது குறித்து சாம் ஆண்டன் கூறும்போது, “எலிஸ்ஸா மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எல்லோரும் நினைப்பது போல, அவர் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. காதல் காட்சிகளிலும் நடிக்கவில்லை..!” என்றார்.

டிசம்பரில் தொடங்கும் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முழுமூச்சில் முடிக்க, மொத்த குழுவும் முன் தயாரிப்பு பணிகளில் இருக்கிறது. நாய் ஒன்று இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், படம் முழுக்க நாயகனோடு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.