October 6, 2026
  • October 6, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் காஞ்சி காமாட்சி கோவிலுக்குச் சென்றது ஏன்..?

by by Nov 2, 2018 0

ஏ.ஆர்.முருகதாஸும் இன்றைக்கு செய்திகளை உருவாக்குபவர் ஆகிவிட்டார். அவர் நின்றாலும் செய்தி… நடந்தாலும் செய்தி என்று ஆகிவிட்ட நிலையில் நேற்று அவர் காஞ்சி காமாட்சி கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு வந்தார்.

அதன் காரணமாகக் கூறப்படுவது ‘சர்கார்’ படத்தின் வெற்றிக்காக என்றுதான். ஆனால், ‘சர்கார்’ கதைப் பிரச்சினை சாதகமாக அமைய வேண்டிக் கொண்டதன் அடிப்படையிலும் அவர் கோவிலுக்கு வந்ததாக ஒரு வட்டாரம் செய்தி சொல்கிறது.

A.R.Murugadoss in Kamatchi Temple

Read More

சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமம் ரத்து

by by Nov 1, 2018 0

ஒவ்வொரு பெரிய நடிகரின் படம் ரிலீசாகும்போதும் ரசிகர்களின் ஆர்வத்தை மூலதனமாக்கி தியேட்டர்காரர்கள் டிக்கெட்டின் விலையைக் கணிசமாக உயர்த்தி அநியாய லாபம் பார்த்துவிடுகிறார்கள்.

ரசிகர்களும் என்ன விலை கொடுத்தாவது தங்கள் ஆதர்ச ஹீரோவின் படத்தை முதல்நாளே முதல் ஷோவே பார்த்துவிடத் துடிக்கிறார்கள்.

இப்போது தீபாவளி ரிலீசாக விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ வெளியாகும் நிலையில், மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்துசெய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க…

Read More

96 கதை விவகாரம் – பிரேம்குமாரின் விளக்கத்தை ஏற்பாரா பாரதிராஜா..?

by by Nov 1, 2018 0

இது காப்பியடித்த கதைகளுக்கு காப்புரிமை கோரும் சீசன். ‘சர்கார்’ கதை சமரசத்துக்கு வந்த நேரத்தில் ’96’ படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார். பாரதிராஜாவும் அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார்.

இதில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர்…

Read More

சோனா அழைத்தால்தான் கரு.பழனியப்பன் வருவாரா?

by by Oct 31, 2018 0

‘அக்கூஸ் புரொடக்ஷன்’ சார்பில் பி.டி. சையது முகமது தயாரித்து ஏ.வசந்தகுமார் இயக்கியுள்ள படம் ‘ராஜாவுக்கு ராஜா’ .

இப்படத்தின் பாடல்களை நடிகர் – இயக்குநர் தியாகராஜன் வெளியிட இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ் , கரு.பழனியப்பன் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் கரு.பழனியப்பன் பேசும் போது

“இப்போதெல்லாம் பிரச்சினைகளை ஆடியோ விழாவில்தான் பேசவேண்டியுள்ளது.

இன்று ‘மீ டூ’ பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? ராஜலட்சுமிக்கு நேர்ந்த அந்தக் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? ‘மீ டூ’ என்பது இரண்டு…

Read More

ஏ.ஆர்.முருகதாஸிடம் நீதி கேட்டு உண்ணாவிரதம் தொடங்கினார் உதவி இயக்குநர்

by by Oct 31, 2018 0

‘தாக பூமி’ என்ற குறும்படத்தை இயக்கியவர் சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கும் அன்பு ராஜசேகர். அதை வைத்துதான் ‘கத்தி’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்ததாக வழக்கும் தொடர்ந்திருக்கிறார் அவர். அதற்கு நீதி கேட்டு இன்று காலை முதல் மாலை வரை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார் அவர்.

நேற்று சர்கார் சமரச அறிவிப்பு வந்ததும் அவர் ஊடகங்களிடம் தன் உண்ணாவிரதம் பற்றி அவர் தெரிவித்த விபரங்கள்…

“உதவி இயக்குநராக நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். நான் நான்கு வருடங்களாக…

Read More

உங்க மனசுக்கு சரின்னு பட்டதைச் செய்யுங்க என்றார் விஜய் – கே.பாக்யராஜ்

by by Oct 30, 2018 0

‘சர்கார்’ கதை விவகாரம் ஒரு வழியாக கோர்ட் மூலம் தீர்க்கப்பட்ட நிலையில் ஒருபுறம் ஏ.ஆர்.முருகதாஸ் ‘வதந்திகளை நிறுத்துங்கள்…’ என ட்விட்டரில் கூறிக்கொண்டிருக்கிறார்.

(அப்படியானால் வதந்தி பரப்பக் காரணமே அவர்தானே..? கே.பாக்யராஜ் கூறிய அறிவுரையின் பேரில் கோர்ட்டுக்கு வெளியிலேயே சுமுகமாக இப்போது முடித்த பிரச்சினையை அப்போதே முடித்திருந்தால் ஏன் வதந்தி பரவப் போகிறது..? இப்போதும் கோர்ட் தலையிட்டதால்தானே அவர் சமரசத்துக்கு வந்திருக்கிறார்..?)

Vijay at santhanus marriage…

Read More

சர்கார் ‘கதை நாயகன்’ வருண் ராஜேந்திரன் – பணிந்தார் முருகதாஸ்

by by Oct 30, 2018 0

கடந்த சில நாள்களாக கேஸ், பெட்ரோல் விலை உயர்வைத்தாண்டி ‘மீடூ’வைத்தாண்டி ஊடகங்களில் பரபரப்புக்குள்ளான விஷயம் இந்த ‘சர்கார் கதைத் திருட்டு’ விஷயம்தான்.

ஒவ்வொரு முறையும் ஏ.ஆர்.முருகதாஸின் கதைகள் திருட்டு முத்திரை குத்தப்படுவதும் அவர் அதிலிருந்து வெளியே வந்து அதைத் தன் கதையாகவே நம்ப வைத்துவிடும் சாதுர்யமும் அவரை மேலும் மேலும் தவறுகள் செய்யும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டிருந்தது எனலாம்.

அவர் காப்பியடித்த நபர்களில் ஹாலிவுட்டின் ‘கிறிஸ்டபர் நோலனி’ல் இருந்து ‘சர்கார் கதை நாயகன்’ வருண் ராஜேந்திரன் வரை எல்லா ரேஞ்சிலும்…

Read More

இளைஞரின் கைப்பேசியைத் தட்டி விட்டது எதனால்? – சிவகுமார் விளக்கம்

by by Oct 29, 2018 0

“செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் கொடைக்கானல் ஏரி, ஊட்டி தொட்டபெட்டா போன்ற இடங்களுக்கு சென்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அது பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.

ஆனால் பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள் பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 பேர் கைபேசியை வைத்துக் செல்பி…

Read More

அப்பா மீதான அவதூறு குறித்து முதல்முறையாக மனம் திறக்கிறார் கபிலன் வைரமுத்து

by by Oct 28, 2018 0

ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன்.

வெறுப்புணர்ச்சியை மையப்படுத்தாமல் தீர்வை மையப்படுத்துவதுதான் ஒரு முற்போக்கு இயக்கத்தின் முதல் வெற்றி. நான் என்பது மேற்கத்தியம். நாம் என்பது இந்தியம். நாடு எப்படி போனாலும் நான் நன்றாக இருக்கவேண்டும் என்பது மேற்கத்திய வாழ்க்கை முறை. நாடு நிம்மதியாக இருந்தால்தான் நாம் நிம்மதியாக…

Read More

ரஜினியின் 2.o பட டிரைலர் பற்றி ஷங்கர் அறிவிப்பு

by by Oct 28, 2018 0

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கிடக்கும் ஷங்கர் – ரஜினி – அக்க்ஷய் குமார் காம்பினேஷனில் உருவாகும் 2.ஓ படத்தின் முதல் பார்வை மற்றும் டீஸர் இந்திய சினிமா ரசிகர்களைக் கவர்ந்து டிரென்டிங்கில் கலக்கியது.

இந்நிலையில் படத்தின் டிரைலரைப் பார்க்க அத்தனைபேரும் ஆவலாகக் காத்திருக்கும் நிலையில் அதற்கான முன்னறிவிப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

அதன்படி நவம்பர் 3-ம்தேதி படத்தின்…

Read More