June 10, 2026
  • June 10, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஷாலினி பாண்டே ஜோடி சேர அக்னி சிறகுகள் விரிக்கும் விஜய் ஆண்டனி
November 2, 2018

ஷாலினி பாண்டே ஜோடி சேர அக்னி சிறகுகள் விரிக்கும் விஜய் ஆண்டனி

By 0 1153 Views

‘மூடர் கூடம்’ படம் மூலம் வெள்ளித்திரையில் வித்தியாச இடத்தைப் பிடித்த இயக்குநர் நவீன் இயக்கத்தில் ‘விஜய் ஆண்டனி’யின் அடுத்த படம் அமைகிறது. அர்ஜுன் ரெட்டி திரைப் படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் இடையே மிகப் பிரபலமான ஷாலினி பாண்டே இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.தமிழ் திரை உலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை தக்க வைத்து இருக்கும் நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் 23ஆவது திரைப் படம் இது. 

இவர்களுடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் அருண் விஜய். பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு,சென்றாயன் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்த படத்துக்கு ‘அக்னி சிறகுகள்’ என்ற தலைப்பு இடப்பட்டு உள்ளது.

கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் ஷங்கர் இசை அமைக்க, நவீன் கதை, தவிர திரைக்கதை அமைத்து , வசனம் இயற்றி, இயக்கும் இந்த படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்குமாம்.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை கமல் வெளியிட்டார்.

Agni Siragugal

Agni Siragugal

‘அக்னி சிறகுகள்’ என்கிற தலைப்பில் இருக்கும் வீரியம் படம் முழுக்க வெளிப்படும். விஜய் ஆண்டனிக்கென்றே பிரத்தியேகமாக செய்த கதை இல்லை இது. கதை உருவான பிறகுதான் இந்தக் கதாபாத்திரத்துக்கு விஜய் ஆண்டனி மட்டுமே பொருந்துவார் என தோன்றியது.

அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்கு என்று ஒரு படம் இயக்குவது ஒவ்வொரு இயக்குனருக்கும் பெருமையே. நட்சத்திரத் தேர்வு, கதைக் களத் தேர்வு , என எல்லாவற்றிலும் தயாரிப்பாளர் டி சிவா சாருடைய பங்களிப்பு அதிகம். அருண் விஜய் இந்த படத்துக்கு பிறகு தமிழ் திரை உலகில் தனக்கென்று தனி இடத்தை நிர்ணயம் செய்து கொள்வார்.

என்னுடன் தொடர்ந்து பணியாற்றும் அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களும் மீண்டும் இந்த படத்தில் என்னுடன் இணைகின்றனர்.தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும், கொல்கத்தா மற்றும் கோவா ஆகிய இடங்களிலும் நடக்க உள்ளது.

சண்டை காட்சிகள் வெளி நாட்டில் படமாக்கப்பட இருக்க விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது..!” என்றார் இயக்குனர் நவீன்.