September 14, 2026
  • September 14, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஏ.ஆர்.முருகதாஸ் காஞ்சி காமாட்சி கோவிலுக்குச் சென்றது ஏன்..?
November 2, 2018

ஏ.ஆர்.முருகதாஸ் காஞ்சி காமாட்சி கோவிலுக்குச் சென்றது ஏன்..?

By 0 1189 Views

ஏ.ஆர்.முருகதாஸும் இன்றைக்கு செய்திகளை உருவாக்குபவர் ஆகிவிட்டார். அவர் நின்றாலும் செய்தி… நடந்தாலும் செய்தி என்று ஆகிவிட்ட நிலையில் நேற்று அவர் காஞ்சி காமாட்சி கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு வந்தார்.

அதன் காரணமாகக் கூறப்படுவது ‘சர்கார்’ படத்தின் வெற்றிக்காக என்றுதான். ஆனால், ‘சர்கார்’ கதைப் பிரச்சினை சாதகமாக அமைய வேண்டிக் கொண்டதன் அடிப்படையிலும் அவர் கோவிலுக்கு வந்ததாக ஒரு வட்டாரம் செய்தி சொல்கிறது.

A.R.Murugadoss in Kamatchi Temple

A.R.Murugadoss in Kamatchi Temple

எப்படியோ எல்லாம் ‘சர்கார்’ சம்பந்தமாகத்தான் வந்து வழிபாடு நடத்திச் சென்றிருக்கிறார் ஏ.ஆர்.எம். ஆனால், அவர் கூட நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் கோவில் குருக்கள்.

அது தப்பில்லைதான்… ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்துக்கான கதை ரெடி பண்ணும்போது “அவர் கோவிலுக்கு வந்தபோது கோவிலின் தல புராணம் சொன்னேன். அதை வைத்துதான் இந்தக் கதையை அவர் எழுதியிருக்கிறார். இந்த மண்டபத்தில் வைத்துதான் அந்தக் கதையைச் சொன்னேன்..” என்று புது பிரச்சினையைக் கிளப்பாமலிருந்தால் சரி

கதை விஷயத்தில் ‘அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும், அந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்…’ என்ற நிலைதான் இப்போது..!