April 22, 2021
  • April 22, 2021
Breaking News

Tag Archives

சர்கார் விஜய் பாணியில் ஓட்டுப்போட்ட நெல்லைவாசி

by on April 19, 2019 0

தளபதி விஜய் நடிப்பில் A .R முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த சர்கார் திரைப்படம் மாபெரும் வெற்றியையும் , வசூல் சாதனையும் படைத்தது.   இந்தப் படத்தில் ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டுவிட்டால் , 49 P தேர்தல் விதிப்படி தேர்தல் அலுவரின் உத்தரவின் பேரில் வாக்களிக்கலாம் என்ற செய்தி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டது.   இதே போன்ற நிகழ்வு தற்போது நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.   நெல்லை மாவட்டம் பணகுடி வாக்கு சாவடி எண் […]

Read More

போலீஸ் தேடும் இந்த விஜய் ரசிகர்களை புடிச்சுக் குடுங்க…

by on November 12, 2018 0

இங்கே வீடியோவில் இடம் பெற்றிருக்கும் இருவரும் தங்களை விஜய் ரசிகர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். கையில் ஆளுக்கொரு அரிவாளும் வைத்திருக்கிறார்கள். சென்னை காசி தியேட்டரில் சர்கார் பேனரைக் கிழித்த அதிமுகவினருக்கு சவால் விட்டு ஏகவசனத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசும் இவர்கள் குறித்து விவரம் கேட்டிருக்கிறது காவல்துறை. இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் 044-23452348 மற்றும் 044-23452350 ஆகிய எண்ணுக்கோ அழைத்துத் தெரிவிக்கலாம் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அறிவித்துள்ளது. ஆனால், நேற்று சர்கார் சக்சஸ் பார்ட்டியில் […]

Read More

சர்கார் அடுத்து 2.O வுக்கு சவால் விடும் தமிழ்ராக்கர்ஸ்

by on November 10, 2018 0

தமிழ்சினிமாவின் தீராத தலைவலியாகியிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் அடுத்தடுத்து புதிய படங்களைத் தன் தளத்தில் வெளியிட்டு வருகிறது. தீபாவளிக்கு வெளியான சர்காரை அன்றே வெளியிடுவோம் என்று அறிவித்து அதன்படியே வெளியிட்டது. சினிமாவுக்குள் விரலை உயர்த்தி முஷ்டியை மடக்கி உலகுக்கே சவால் விடும் ஹீரோக்களாலும், தங்கள் சாதுர்யத்தால் அரசியலைப் பிரித்து மேயும் இயக்குநர்களாலும் கூட தமிழ் ராக்கர்ஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர்கள் சங்க செயலாளருமான விஷாலின் தலையாய கொள்கைகளில் ஒன்றே இந்த தமிழ் ராக்கர்ஸை முடக்குவதுதான். […]

Read More

ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப்படுகிறாரா – கோர்ட்டில் முன் ஜாமீன் மனு

by on November 9, 2018 0

‘சர்கார்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிக்ளை நீக்க வேண்டுமென்று ஆளும் கட்சியினர் போராட்டங்களை நடத்துவதைத் தொடர்ந்து அந்தக் காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் மீடியாக்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால், இது குறித்து சர்கார் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்தோ, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் தரப்பிலிருந்தோ எந்த விளக்கமும் இல்லை. ஆனால், சர்காருக்கு எதிரான போராட்டங்கள் குறித்து கமலும், ரஜினியும் தணிக்கை செய்யப்பட்ட படத்தின் மீதான போராட்டங்கள் தேவையில்லை என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் இன்று […]

Read More

விஜய் சர்கார் அமைத்தாரா இல்லையா – விமர்சனப் பார்வை

by on November 7, 2018 0

ஒரு ஸ்டாரை உசுப்பேற்றி முதல்வராக்க எத்தனையோ கதைகளை இதுவரை சினிமா இயக்குநர்கள் யோசித்திருக்கிறார்கள்… இது அதில் ஒரு வகை. இந்தப் படத்தைப் பார்த்தபோது மூன்று கேள்விகள் எழுந்தன. 1.ஒரு மாநில முதல்வராக இத்தனை எளிதாக முயற்சி செய்தால் போதுமானதா..? அல்லது 2. சினிமாக்காரர்களின் அரசியல் அறிவு இவ்வளவுதானா..? அல்லது 3. ரசிகர்களால் இவ்வளவு மலிவாக சொன்னால்தான் புரிந்துகொள்ள முடியும் என்று ரசிகர்களின் அறிவை மட்டமாக நினைத்து இப்படி படமெடுக்கிறார்களா..? ஏற்கனவே கே.பாக்யராஜ் விலாவாரியாக சொல்லி அரவக்குறிச்சி முதல் […]

Read More

சர்கார் படத்துடன் கூடிய ஹர்பஜன் சிங்கின் தமிழ் தீபாவளி வாழ்த்து

by on November 6, 2018 0

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் தமிழ் ரசனை பற்றியும் அவரது தமிழ் ட்வீட்டுகளையும் தமிழகம் நன்றாகவே அறியும். இந்நிலையில் இன்று இந்தியாவெங்கும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினாலும் தமிழ் நாட்டு மக்களுக்காக தமிழில் தீபாவளி வாழ்த்துச் சொல்லி ட்வீட் செய்திருக்கிறார் ஹர்பஜன். அதில் சர்க்கார் படத்தையும் சேர்த்துக்கொண்டு அதில் வாழ்த்தியிருப்பதுதான் ஹைலைட். அந்த ட்வீட் கீழே… #தீபாவளி திருநாள் வாழ்த்துகள் தமிழ் உறவுகளே.புத்தாடையுடன் புன்னகையும் இனிப்புடன் மகிழ்ச்சியும் பரிமாறும் முன்னே சரவெடியோடு ஆரம்பமாகும் #தீபஒளி ஆனந்தம்.செந்தமிழ் […]

Read More

சர்கார் எதிரொலி – எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் ராஜினாமா

by on November 2, 2018 0

சர்கார் கதை ஏற்படுத்திய பரபரப்பில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர சங்கத் தலைவராக இருந்த கே.பாக்யராஜ் எடுத்த அதிரடி முடிவுகள் அவர் மீதான நன்மதிப்பை உயர்த்தின. கதைக்கு சொந்தம் கொண்டாடிய வருண் ராஜேந்திரன் நீதி மன்றத்தை அணுகி சாதகமான சமரசத்துக்கு வர, பாக்யராஜின் உறுதிதான் மூலகாரணமாக இருந்தது. இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர சங்கத் தலைவர் பதவியை இன்று திடீரென்று ராஜினாமா செய்தார் கே.பாக்யராஜ். நான் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் படாமல் நேரடியாக தலைவர் பதவிக்கு வந்தவன். நேரடியாக […]

Read More

ஏ.ஆர்.முருகதாஸ் காஞ்சி காமாட்சி கோவிலுக்குச் சென்றது ஏன்..?

by on November 2, 2018 0

ஏ.ஆர்.முருகதாஸும் இன்றைக்கு செய்திகளை உருவாக்குபவர் ஆகிவிட்டார். அவர் நின்றாலும் செய்தி… நடந்தாலும் செய்தி என்று ஆகிவிட்ட நிலையில் நேற்று அவர் காஞ்சி காமாட்சி கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு வந்தார். அதன் காரணமாகக் கூறப்படுவது ‘சர்கார்’ படத்தின் வெற்றிக்காக என்றுதான். ஆனால், ‘சர்கார்’ கதைப் பிரச்சினை சாதகமாக அமைய வேண்டிக் கொண்டதன் அடிப்படையிலும் அவர் கோவிலுக்கு வந்ததாக ஒரு வட்டாரம் செய்தி சொல்கிறது. எப்படியோ எல்லாம் ‘சர்கார்’ சம்பந்தமாகத்தான் வந்து வழிபாடு நடத்திச் சென்றிருக்கிறார் ஏ.ஆர்.எம். ஆனால், அவர் […]

Read More

சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமம் ரத்து

by on November 1, 2018 0

ஒவ்வொரு பெரிய நடிகரின் படம் ரிலீசாகும்போதும் ரசிகர்களின் ஆர்வத்தை மூலதனமாக்கி தியேட்டர்காரர்கள் டிக்கெட்டின் விலையைக் கணிசமாக உயர்த்தி அநியாய லாபம் பார்த்துவிடுகிறார்கள். ரசிகர்களும் என்ன விலை கொடுத்தாவது தங்கள் ஆதர்ச ஹீரோவின் படத்தை முதல்நாளே முதல் ஷோவே பார்த்துவிடத் துடிக்கிறார்கள். இப்போது தீபாவளி ரிலீசாக விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ வெளியாகும் நிலையில், மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்துசெய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை […]

Read More
  • 1
  • 2