March 22, 2025
  • March 22, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • போலீஸ் தேடும் இந்த விஜய் ரசிகர்களை புடிச்சுக் குடுங்க…
November 12, 2018

போலீஸ் தேடும் இந்த விஜய் ரசிகர்களை புடிச்சுக் குடுங்க…

By 0 1007 Views

இங்கே வீடியோவில் இடம் பெற்றிருக்கும் இருவரும் தங்களை விஜய் ரசிகர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். கையில் ஆளுக்கொரு அரிவாளும் வைத்திருக்கிறார்கள்.

சென்னை காசி தியேட்டரில் சர்கார் பேனரைக் கிழித்த அதிமுகவினருக்கு சவால் விட்டு ஏகவசனத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசும் இவர்கள் குறித்து விவரம் கேட்டிருக்கிறது காவல்துறை.

இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் 044-23452348 மற்றும் 044-23452350 ஆகிய எண்ணுக்கோ அழைத்துத் தெரிவிக்கலாம் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அறிவித்துள்ளது.

ஆனால், நேற்று சர்கார் சக்சஸ் பார்ட்டியில் இலவச மிக்ஸி, கிரைண்டர் பொம்மை போட்டு கேக் வெட்டி அதிமுகவினரை வம்புக்கிழுத்த ஏ.ஆர்.முருகதாஸ், விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் டீமுக்கு இருந்த, புத்திசாலித்தனம் இவர்களுக்கு இல்லை.