தமிழ்சினிமாவின் தீராத தலைவலியாகியிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் அடுத்தடுத்து புதிய படங்களைத் தன் தளத்தில் வெளியிட்டு வருகிறது.
தீபாவளிக்கு வெளியான சர்காரை அன்றே வெளியிடுவோம் என்று அறிவித்து அதன்படியே வெளியிட்டது. சினிமாவுக்குள் விரலை உயர்த்தி முஷ்டியை மடக்கி உலகுக்கே சவால் விடும் ஹீரோக்களாலும், தங்கள் சாதுர்யத்தால் அரசியலைப் பிரித்து மேயும் இயக்குநர்களாலும் கூட தமிழ் ராக்கர்ஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
Tamilrockers 2PointO Challenge
தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர்கள் சங்க செயலாளருமான விஷாலின் தலையாய கொள்கைகளில் ஒன்றே இந்த தமிழ் ராக்கர்ஸை முடக்குவதுதான். ஆனால், இந்த நாள் வரை அதற்கு எதிராக இரு அங்குலம் கூட முன்னேற முடியவில்லை.
இந்நிலையில் சர்காருக்கு அடுத்து ரஜினி ஷங்கர் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘2 பாய்ண்ட் ஓ’ படத்தைக் குறிவைத்துள்ளனர் தமிழ்ராக்கர்ஸ். அவர்களின் வலைதளத்தில் இதற்கான அறிவிப்பு வர, அதை லைக் செய்தும், ரிட்வீட் செய்தும் இருக்கிறார்கள் அதன் ரசிகர்கள்.
அதைவிட தமிழ்ராக்கர்ஸை ஆதரித்து மீம்ஸும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த மக்களின் ஆதரவுதான் தமிழ் ராக்கர்ஸின் பெரும் பலமாக இருக்கிறது.