September 14, 2025
  • September 14, 2025
Breaking News

Currently browsing விமர்சனம்

சப்தம் திரைப்பட விமர்சனம்

by by Mar 1, 2025 0

தலைப்பே படத்தின் கதையைச் சொல்லிவிடுகிறது. மொழிகள் தோன்றுவதற்கு முன்னால், பல வகையில் எழுப்பப்படும் ஒலிகள்தான் தகவல்களைக் கொண்டு சேர்த்தன. மொழியே கூட ஒலியின் அடிப்படையில் அமைந்ததுதான்.

ஆக தகவல் பரிமாற்றத்துக்கு சப்தம் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது என்ற லைனைப் பிடித்து நம்மை ஒரு திகிலோடு கூடிய ரசிக அனுபவத்துக்குள் இட்டுச் செல்கிறார் இயக்குனர் அறிவழகன்.

அறிவழகன் படத்தில் என்னவெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்த்துச் செல்கிறோமோ அவை எல்லாமே இருக்கின்றன – கூடவே இதுவரை நம் செவிகள் திரையரங்கிற்குள் கேட்காத…

Read More

சுழல் 2 அமேசான் பிரைம் சீரிஸ் விமர்சனம்

by by Feb 28, 2025 0

அமேசான் பிரைமில் சுழல் முதல் சீசன் வெளிவந்தபோதே அது பெரும் வரவேற்பைப் பெற்றதற்குக் காரணம் வழக்கமான சீரிஸ்கள் போல் அல்லாமல் இது திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைத் தந்ததுதான்.

அந்த அனுபவம் கொஞ்சமும் குறையாமல் இந்த சீசன் 2 சுழல் வெளிவந்திருக்கிறது.

முதல் சீசனுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் ஆனால் அதிலிருந்து விலகி இருக்கும் இன்னொரு கருப்பொருளைத் தொட வேண்டும் என்கிற சவாலுடன் இந்த இரண்டாவது சீசனில் களம் இறங்கி இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் புஷ்கரும் காயத்ரியும். 

எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த…

Read More

டிராகன் திரைப்பட விமர்சனம்

by by Feb 23, 2025 0

குறுக்கு வழியில் முன்னேறுபவர்களால் நேர்வழியில் நியாயமாக முன்னேறுபவர்களின் வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதைக் குறுக்கு புத்திக் காரர்களின் மனசாட்சியைப் பிடித்து உலுக்கி எடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.

அத்துடன் கல்விதான் எல்லா முன்னேற்றங்களுக்கும் அடிப்படை என்பதையும் சொல்லியிருக்கிறார். 

கேட்பதற்கு பழமைவாதம் போலத் தோன்றினாலும் அதை இன்றைய இளைஞர்களுக்குப் பிடித்த நவீனங்களுடன் சொல்லி இருப்பதால் அதிரி புதிரியாகி இருக்கிறது படம்.

லவ் டுடே படத்தில் இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்த பிரதீப் ரங்கநாதன்தான் ஹீரோ என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அவருக்கான தகுதித்…

Read More

ராமம் ராகவம் திரைப்பட விமர்சனம்

by by Feb 22, 2025 0

சமுத்திரக்கனிக்கு மகன் பிறப்பதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. ‘ மகனை சான்றோன் ஆககுதல் தந்தையின் கடனே…’ என்கிற வார்த்தைக்கேற்ப மகனை அருமையாகவும் பாசத்துடனும் வளர்க்கிறார். 

ஆனால் அப்படி வளர்த்த மகன் உருப்படாமல் வளர்ந்து நின்றால் ஒரு தந்தைக்கு எப்படி இருக்கும்..? தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை செய்வதெல்லாம் தவறான வேலை என்று இருக்கையில் அந்தத் தந்தைக்கும் மகனுக்குமான உறவு எப்படி சென்று முடிந்தது என்பதுதான் படத்தின் கதை. 

தமிழ் சினிமாவில் நல்ல தந்தை என்றாலும், நேர்மையானவர் என்றாலும் அது…

Read More

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்பட விமர்சனம்

by by Feb 22, 2025 0

இது வழக்கமான காதல் கதைதான் என்று ஆரம்பத்திலேயே நமக்குத் தெளிவுபடுத்தி விடுவதிலேயே இயக்குனர் தனுஷின் கெத்து தெரிகிறது

சமையல் கலையைக் கல்வியாகப் பயிலும் நடுத்தர வர்கத்து நாயகன் பவிஷ் நாராயண், கோடிஸ்வர பெண்ணான அனுகா சுரேந்திரனை அது தெரியாமலேயே காதலிக்கிறார். 

அனிகாவின் தந்தையான சரத்குமாரை சந்திக்கும் வரை நன்றாக போய்க் கொண்டிருந்த அவர்களது காதல் ஒரு முடிவுக்கு வருகிறது. ஒன்பது மாதங்கள் கழிந்த பிரேக் அப் பிரிவில் அனிகா தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட, பவிஷுக்கு வீட்டில்  பிரியா…

Read More

அது வாங்குனா இது இலவசம் திரைப்பட விமர்சனம்

by by Feb 16, 2025 0

தலைப்பைப் பார்த்துவிட்டு “எது வாங்குனா எது இலவசம்..?” என்றுதானே யோசிக்கிறீர்கள்..? வேறு என்ன வினைதான். ஒரு வேண்டாத வினையை நீங்கள் விலை கொடுத்து வாங்கப் போனால் அதன் விளைவு உங்கள் பின்னாலேயே இலவசமாய் துரத்திக் கொண்டு வரும் என்பதைத்தான் இயக்குனர் எஸ்கே.செந்தில் ராஜன் சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை மாவட்டங்களையும் கலவர பூமியாகக் காட்டி ஆயிற்று, இனி வேறு என்ன மீதி இருக்கிறது என்று இயக்குநர் யோசித்து இருப்பார் போல. அதனால், இதுவரை இல்லாத விதமாக இதில்…

Read More

2கே லவ் ஸ்டோரி திரைப்பட விமர்சனம்

by by Feb 16, 2025 0

காதலும், நட்பும்தான் காலம் உள்ளவரை சினிமா ரசிகர்களைக் கவர்ந்து இழுக்கக் கூடிய காரணிகளாக இருக்கும். இதை சரியாக புரிந்து வைத்திருக்கும் இயக்குனர் சுசீந்திரன் இந்தக் கால இளைஞர்களுக்காக காதலையும், நட்பையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார்.

குழந்தைப் பருவத்திலிருந்து நட்புடன் பழகி வரும் ஜெகவீரும், மீனாட்சி கோவிந்தராஜனும் பருவ வயது வந்தும் அதே நட்புடன் பழகி வருகிறார்கள். ஊர் உலகம், நண்பர்கள் ஏன் ஒரு கட்டத்தில் அவர்களது பெற்றோரே கூட அவர்கள் இருவரும் காதலிப்பதாக நினைக்கிறார்கள். 

ஆனால் ஜெகவீரோ மீனாட்சியின்…

Read More

பேபி & பேபி திரைப்பட விமர்சனம்

by by Feb 15, 2025 0

“அதென்ன பேபி & பேபி..?” என்று யோசிக்கிறீர்களா? கதைப்படி இரண்டு பேபிகள் தான் படத்தை நகர்த்திச் செல்கின்றன. எனவேதான் பேபி & பேபி..!

ஒரு பக்கம் பெரிய ஜமீன்தாராக இருக்கும் சத்யராஜ் தன் மகன் ஜெய்க்கு பெரிய இடத்தில் திருமணம் முடித்து தன் ஜமீனைக் கட்டி ஆள அவருக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

ஆனால், அப்பாவின் விருப்பத்திறகு மாறாக காதல் திருமணம் புரியும் ஜெய், சத்யராஜின் கோபத்துக்கு ஆளாகி வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார்.

இன்னொரு பக்கம்…

Read More

தினசரி திரைப்பட விமர்சனம்

by by Feb 14, 2025 0

அவ்வப்போது குடும்பத்தினருக்கு புத்திமதி மற்றும் ஆலோசனைகள் சொல்லும் முகமாக படங்களை எடுத்து வந்தவர் இயக்குநர் வி.சேகர்.

அவரது படங்கள் இப்போது வராத குறைக்கு இந்தப் படத்தில் இன்றைய இளைஞர்களுக்கு சில அறிவுரைகளைச் சொல்லி இருக்கிறார் இந்தப் பட இயக்குனர் ஜி.சங்கர்.

நடுத்தர வர்க்க எம்எஸ் பாஸ்கர் – மீரா கிருஷ்ணா தம்பதியின் மகனாக இருக்கும் நாயகன் ஸ்ரீகாந்த் ஐடி கம்பெனியில் போதுமான அளவு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் என்னதான் சம்பாதித்தாலும் எட்டடி வீட்டுக்குள் குடித்தனம் நடத்துவது அவருக்கு வெறுப்பைத்…

Read More

ஃபயர் திரைப்பட விமர்சனம்

by by Feb 14, 2025 0

1996 இல் இந்தியில் இதே தலைப்பில் ஒரு படத்தை தீபா மேத்தா இயக்கியிருந்தார். அந்த நெருப்பு பெண்ணுக்கும், பெண்ணுக்கும் பற்றிக் கொள்வதாய் இருந்தது. 

முதல் முதலில் இந்தியாவில் லெஸ்பியன்கள் பற்றிய விஷயங்களைப் பிட்டுப் பிட்டு வைத்த படமாய் அது இருந்தது. ஆனால் இந்த ஃபயர் அப்படி இல்லை. பெண்கள் எச்சரிக்கையாய் இருந்து கொள்ள வேண்டும் என்கிற கருத்தை ஒரு காமுகனை வைத்து பிட்டு பிட்டாய் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜே எஸ் கே.

நாகர்கோவிலில் நடந்த ஒரு உண்மைச் …

Read More