April 26, 2024
  • April 26, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

பீட்ஸா 3 தி மம்மி திரைப்பட விமர்சனம்

by by Jul 29, 2023 0

ஒரு படத்தினுடைய வெற்றி அதே தலைப்பில் இன்னும் சில படங்களைத் தயாரிக்க வைத்து விடுகிறது. அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் ‘பீட்ஸா 3 – தி மம்மி.’

தமிழ்த் திரையுலகில் எந்தப் பெரிய தயாரிப்பாளரும் செய்யாத சாதனையாக தயாரிப்பாளர் சி.வி.குமார் பல திறமையான இயக்குனர்களைத் தந்தார். அவரது பிராண்ட் வேல்யூ அதுதான்.

அப்படித்தான் மோகன் கோவிந்த் இயக்கி இருக்கும் இந்தப் படத்தையும் அதிக எதிர்பார்ப்புடன் பார்க்க நேர்ந்தது.

பட ஆரம்பத்தில் ஒரு மம்மி பொம்மையைக் காட்டுகிறார்கள். அந்த பொம்மை இருக்கும்…

Read More

எல்ஜிஎம் திரைப்பட விமர்சனம்

by by Jul 29, 2023 0

எல் ஜி.எம் என்றால்..? ‘லெட்ஸ் கெட் மேரிட்..!’ அப்படி என்றால்… “நாம கல்யாணம் கட்டிக்கலாம்..!” என்பதுதான். தலைப்பில் இவ்வளவு காம்ப்ளிகேஷன் இருந்தாலும் கதை என்னவோ சிம்பிளான லைன்தான்.

ஐடி துறையில் வேலை பார்க்கும் அம்மா பிள்ளையான ஹரிஷ் கல்யாணும், இவானாவும் காதலர்களாக இருக்க, திருமணம் செய்து கொள்ள ஒரு கட்டத்தில் முடிவெடுக்கின்றனர். அப்போதுதான் இவானா ஒரு ஹீலியம் குண்டைத் தூக்கிப் போடுகிறார்.

அதாவது கல்யாணம் ஆன பின் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள தனியாகத்தான் வாழ வேண்டும்…

Read More

லவ் திரைப்பட விமர்சனம்

by by Jul 27, 2023 0

படம் தொடங்கியது முதல் எண்டு கார்டு வரை இந்தப் படத்துக்கு ‘ லவ் ‘ என்று ஏன் தலைப்பு வைத்தார்கள் என்பது புரியவில்லை. யாரும் யாரையும் லவ்வவே இல்லை.

அப்பாவின் பிசினஸ்ஸை கவனித்துக் கொள்ளும் கோடீஸ்வரி வாணி போஜன் சொந்தத் தொழில் செய்து தோற்றுப் போன பரத்தை நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் மூலம் திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் ‘ லவ் ‘ பண்ணவில்லை என்பதைக் குறித்துக் கொள்க.

இரண்டு பேரின் குடும்பங்கள் குறித்தோ நண்பர்கள் குறித்தோ எந்தவிதமான குறிப்பும்…

Read More

டைநோசார்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Jul 26, 2023 0

தலைப்பைப் பார்த்துவிட்டு இது ஏதோ ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் டைனோசர் படம் போல இருக்கிறது என்று குடும்பத்தோடு போக திட்டமிட்டு விடாதீர்கள்.

இந்த டைனோசர்ஸின் விஷயமே வேறு. Die No Sirs என்று இதற்கு விளக்கமும் வருகிறது படத்தில். அதாவது “நான் சாக விரும்பவில்லை சார்வாள் …” என்பதுதான் தலைப்பின் பொருள். 

அது மட்டும் இல்லாமல் ஊரையே நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கிற தாதாவானாலும் அவருக்குத் தலை வணங்காத ஒரு சுள்ளான் அவர் கண்களுக்கு டைனோசராக தெரியக்கூடும் என்பதுதான் படத்தின் கரு.

வடசென்னைதான்…

Read More

ஓப்பன்ஹைமர் (ஹாலிவுட்) திரைப்பட விமர்சனம்

by by Jul 23, 2023 0

உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக வந்திருக்கிறது யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கும் ‘ஓப்பன் ஹைமர்’. காரணம் இதன் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் என்பதுதான்.

அமெரிக்காவில் தயாரான முதல் அணுகுண்டின் தந்தையான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை சரிதமாக இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஓப்பன்ஹைமர் வேடத்தில் புகழ்பெற்ற நடிகர் சில்லியன் மர்பி நடித்திருக்கிறார்.

இயல்பில் அமெரிக்க கம்யூனிஸ்டாக அறியப்பட்ட ஓபன்ஹைமர் இரண்டாம் உலகப் போரின் போது அணுகுண்டு தயாரிப்பில் பல நாடுகளும் ஈடுபட்டிருக்கும் வேளையில் அமெரிக்கா அதில் முதல் நிலை பெற…

Read More

எக்கோ திரைப்பட விமர்சனம்

by by Jul 23, 2023 0

“நாம் செய்த வினை பூமராங் போல – திரும்ப வந்து நம்மையே தாக்கும்…” என்பார்கள். அதையே கொஞ்சம் மாற்றி ‘நாம் செய்த வினையின் எதிரொலி (Echo) நம்மையே தாக்கும்…’ என்கிறார் இந்தப் பட இயக்குனர் நவீன் கணேஷ்.

அவ்வப்போது திரையில் தலை காட்டும் ஸ்ரீகாந்த், இந்தப் படத்தின் நாயகன் ஆகி இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் படத்தின் வில்லனும் அவரேதான். அதனாலேயே இப்படி ஒரு பாத்திரத்தை அவர் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும்.

காதல் மனைவியைக் கைப்பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும்…

Read More

சத்திய சோதனை திரைப்பட விமர்சனம்

by by Jul 22, 2023 0

நல்லவன் என்ற வார்த்தைக்கு வாழ்க்கை அகராதியில் பொருள் தேடினால் பிழைக்கத் தெரியாதவன் என்றுதான் வரும். அப்படி அப்பாவியாக இருக்கும் நல்லவனான பிரேம்ஜி நல்லது செய்யப் போய் எப்படி சோதனைக்கு உள்ளாகிறார் என்பதுதான் படத்தின் கதை.

சங்குப்பட்டி என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் வசிக்கும் பிரேம்ஜி வழியில் போய்க் கொண்டிருக்கும் போது ஒருவரை கொலை செய்து போட்டிருப்பதைப் பார்த்து, வெயிலில் கிடக்கும் அவரை நிழலில் இழுத்துப் போட்டுவிட்டு அவரது உடைமைகளை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் செல்ல, எதிர்பாராத விதமாக…

Read More

கொலை திரைப்பட விமர்சனம்

by by Jul 21, 2023 0

காட்சி வடிவமான சினிமாவில் படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஒரு கதையைக் கொலை செய்பவர்களுக்கு மத்தியில் ஒரு கொலையைப் பற்றிய கதையை அழகியலுடன் ரசிக்கத்தக்க வகையில் படமாக்கி அளித்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி குமார்.

முதல் காட்சியிலேயே கதை சொல்ல ஆரம்பித்து விடும் விதம் அருமை. 

மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியான மீனாட்சி சவுத்ரி சென்னையில் வந்து தங்கி இருக்கும் போது கொலை செய்யப்படுகிறார். ஏன், எதற்கு என்று புலனாய்வு செய்ய காவல் அதிகாரி ரித்திகா சிங்கை களம் இறக்குகிறது…

Read More

அவள் அப்படித்தான் 2 திரைப்பட விமர்சனம்

by by Jul 19, 2023 0

1978-இல் ருத்ரய்யா இயக்கத்தில் வெளிவந்த ‘அவள் அப்படித்தான்’ திரைப்படம் தமிழ் பட உலகில் என்றென்றும் பேசப்படத்தக்கது. பெண் என்பவள் யாருடைய எதிர்பார்ப்புக்கும் உருவக வடிவமைப்புக்கும் உட்படாதவள் என்கிற சுதந்திர சிந்தனையை விதைத்தது அந்தப் படம். அந்த சிந்தனையின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற முயற்சியில் 2023-ல் வந்திருக்கிறது இந்தப் படம்.

இப்படத்தை இரா.மு. சிதம்பரம் எழுதி இயக்கியுள்ளார். யுன் ப்ளிக்ஸ் (Yun Flicks) சார்பில் செய்யது அபுதாஹிர் தயாரித்துள்ளார்.

சின்ன லைன்தான் படத்தின் கதை.

மஞ்சு ஒரு தனியார் பள்ளி…

Read More

சக்ரவியூஹம் திரைப்பட விமர்சனம்

by by Jul 16, 2023 0

துப்பறியும் கதைகளுக்கு உலகம் முழுவதும் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்திய மொழிப்படங்களிலும் பல்வேறு வெற்றிப்படங்கள் துப்பறியும் கதைக்களத்தில் வெற்றிபெற்றிருக்கின்றன.

அந்த வரிசையில் நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்து சேத்குரி மதுசூதன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “சக்ரவியூஹம்”.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள்.

கதையின் நாயகனாக அஜய் நடித்திருக்க, படத்தில் விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு…

Read More