June 21, 2026
  • June 21, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

தீயவர் குலை நடுங்க திரைப்பட விமர்சனம்

by by Nov 22, 2025 0

சமீபத்திய ட்ரெண்டான ஒன்றுக்கு மேற்பட்ட கொலைகளும் அது தொடர்பான விசாரணையும், உண்மை தெரியும்போது நமக்கு ஏற்படும் நெகிழ்ச்சியும்தான் இந்தப் படத்திலும் கதை.

மாஸ்க் அணிந்த நபரால் எழுத்தாளர் ஒருவர் கொலை செய்யப்பட, விசாரணை அதிகாரி அர்ஜுன் அது பற்றி துப்பு துலக்குகிறார்.

நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஆசிரியையாக வருகிறார். அவருக்கும் பிரவீன் ராஜாவுக்கும் ஏற்படும் தொடர்பு அவர்களைக் காதலில் தள்ளுகிறது. 

மேற்படி வேறுபட்டுச் செல்லும் இரண்டு நிகழ்வுகளுக்கும் ஒரு தொடர்பு பிரவீன் ராஜா குடியிருக்கும்…

Read More

யெல்லோ திரைப்பட விமர்சனம்

by by Nov 20, 2025 0

வாழ்வில் பயணமும், காதலும் என்றுமே அலுக்காதவை. அதிலும் பயணத்தில் ஒரு காதலைக் கண்டுபிடிப்பது அதீத இன்பம் தரும் அனுபவம். இந்த லைனை வைத்து ஒரு இனிமையான திரைக்கதையைப் பின்னி இருக்கிறார் இயக்குநர் ஹரி மகாதேவன்.

அப்படி காதல் மற்றும் வாழ்வில் அதிருப்தி ஏற்பட்ட நிலையில், தன் கடந்தகால தோழமைகளைத் தேடி ஒரு துரிதப் பயணம் மேற்கொள்கிறார் நாயகி பூர்ணிமா ரவி. அந்த அனுபவங்கள்தான் கதை.

சின்னத்திரை மற்றும் யூடியூப் வழியாக பூர்ணிமா…

Read More

ப்ரண்ட்ஸ் படப்பிடிப்பில் சூர்யா ஜோதிகா காதலுக்கு தூது போனேன்..! – ரமேஷ் கண்ணா

by by Nov 18, 2025 0

*மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா*

ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B. வினோத் ஜெயின் வெளியீட்டில் மீண்டும் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு…

Read More

கும்கி 2 திரைப்பட விமர்சனம்

by by Nov 17, 2025 0

வனத்தில் வழி தவறிய யானைக் குட்டி ஒன்று பள்ளத்தில் விழுந்து விடுகிறது. அதேபோல் அதே வனத்தின் ஊருக்குள் பெற்றவர்கள் சாராய வியாபாரிகளாக இருக்க, அவர்களின் மகனும் தனிமையை உணர்கிறான். 

இந்த இருவரின் தனிமையும் ஒன்று சேர்ந்து கூட்டாளிகளாக, அந்த நட்பு பந்தம் தொடர்கிறது. 

சிறுவன் இளைஞராக வளர்ந்ததும் அந்த வேடத்தில் அறிமுக நாயகன் மதி தோன்றுகிறார்.

ஒரு கட்டத்தில் அந்த யானைக்குட்டி தொலைந்து போக நாயகன் மதியும் மேல் படிப்புக்காக வெளியூர் செல்ல வேண்டி வருகிறது. ஐந்து வருடம் கழித்து…

Read More

மதறாஸ் மாஃபியா கம்பெனி திரைப்பட விமர்சனம்

by by Nov 16, 2025 0

வில்லனாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் காமெடியும் செய்ய வேண்டும் என்கிற பாத்திரத்தில் சென்ற தலைமுறைக்கு அசோகன் இருந்தார். அந்த இடத்தை இப்போது நிரப்பிக் கொண்டிருப்பவர் ஆனந்தராஜ். 

அவரை எத்தனை மிரட்டலாகவும் காட்டலாம் அதே நேரத்தில் அவரைக்காட்டி சிரிக்கவும் வைக்கலாம். இந்த விஷயமே இயக்குனர் ஏ. எஸ்.முகுந்தனை அவரை நோக்கித் திருப்பி விட்டிருக்கிறது.

சென்னையின் முக்கிய ரவுடியாக இருக்கும் ஆனந்தராஜ், ஏரியா ஏரியாவுக்கு ஆட்களைப் பிரித்து அவர்களுக்கு அசைன்மென்ட் கொடுத்து, அமௌன்ட்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தாதாயிசத்தை ஒரு ப்ரொபஷனல்…

Read More

தாவுத் திரைப்பட விமர்சனம்

by by Nov 16, 2025 0

வடசென்னையின் சினிமா வழக்கப்படியே தாதாயிச செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் சாய் தீனா மற்றும் அபிஷேக்.

இவர்களின் உபரி தொழில்களை தாண்டி முக்கியமான தொழில் மும்பையில் இருக்கும் தாவுத் என்பவர் கைமாற்றச் சொல்லும் போதை மருந்தைக் கை மாற்றி விடுவது. 

அப்படி தாவுதின் பொருள்களை தவறாக கையாடல் செய்தால் அவர்களுக்கு கிடைக்கும் பரிசு மரணம்தான். அத்தனை கொடூரமான தாவுத் யார் என்பதை அறிய ஒரு பக்கம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தாவுதின் கைமாற்றும் அசைன்மெண்டை சீனியரான சாய்…

Read More

அதர்ஸ் திரைப்பட விமர்சனம் 3.5/5

by by Nov 7, 2025 0

ஒரு வேன் விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் எரிந்து சாகிறார்கள். விசாரணை செய்யத் தொடங்குகிறார் உதவி காவல் ஆணையர் வேடம் ஏற்றிருக்கும் நாயகன் ஆதித்யா மாதவன்.

பிரேதப் பரிசோதனையில் மூன்று பெண்களும் மாற்றுப் பார்வைத் திறன் கொண்டவர்கள் என்பதுடன் அவர்களைக் காணவில்லை என்று யாரும் புகார் செய்யவில்லை என்றும்  தெரிவதால்,  அவர்கள் கடத்தப்பட்டனரா என்ற கேள்வி எழுகிறது.

எனவே ஆதரவற்றோர் விடுதிகளில் கணக்கெடுத்து விசாரித்ததில் ஒரு விடுதிப் பதிவேட்டில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்க, விசாரிக்கப்போனால் விடுதியின்…

Read More

பரிசு திரைப்பட விமர்சனம்

by by Nov 6, 2025 0

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிறைய நடந்து வரும் இந்தக் காலகட்டத்திற்குத் தேவையான படம். 

ஆண்கள் என்றால் நாட்டுக்கு… பெண்கள் என்றால் வீட்டுக்கு… என்கிற தத்துவத்தை மாற்றி பெண்களால் வீட்டையும், நாட்டையும் ஒரு சேரக் காக்க முடியும் என்ற கருத்தைக் கொண்டு பெண்மணியான கலா அல்லூரி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரித்தும் இருக்கும் படம் இது. 

கல்லூரியில் படிக்கும் புதுமுகம் ஜான்விகாவை அவரது தந்தை ஆடுகளம் நரேன் பல வித்தைகளையும் கற்பித்து வீரமுள்ள பெண்ணாக வளர்க்கிறார். 

காலை…

Read More

வட்டக்கானல் திரைப்பட விமர்சனம்

by by Nov 6, 2025 0

கொடைக்கானல் மலையில் இருக்கும் எழில் மிகு வட்டக்கானல் பகுதியில் நடக்கும் கதை. ஆனால், கதை அந்த அழகைப் பற்றியதல்ல..!

அங்கே விளையும் போதைக் காளானைக் கைப்பற்றி காலம் காலமாக விற்று ஒரு போதை சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் ஆர்.கே.சுரேஷ். அவரது எல்லா அடாவடி வேலைகளுக்கும் அவர் எடுத்து வளர்த்த துருவன் மனோ, கபாலி விஸ்வந்த், விஜய் டிவி சரத் காவலர்களாக இருக்கிறார்கள். ஆனால், ஆர்.கே.சுரேஷைக் கொல்ல எப்போதும் வித்யா பிரதீப் முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் பின்னணி…

Read More

தேசிய தலைவர் திரைப்பட விமர்சனம்

by by Nov 3, 2025 0

பல தலைவர்களுக்கும் அவர்கள் சார்ந்திருந்த இனத்தின் குறியீடாக அடையாளம் இருக்கும். ஆனால், ‘ இவர் அப்படிப்பட்டவர் அல்ல, இந்த தேசத்துக்கே சொந்தமானவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்…’ என்பதை பல்வேறு நிகழ்வுகளின் மூலம் நிறுவுகிறார் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் ஆர்.அரவிந்தராஜ்.

இந்திய சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கும் கதையில் சுதந்திர தாகத்துடன் அதற்கான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த முத்துராமலிங்க தேவர், சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியாவில் காங்கிரசிலிருந்து விலகி ஃபார்வேர்டு பிளாக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தனது…

Read More