June 21, 2026
  • June 21, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

சல்லியர்கள் திரைப்பட விமர்சனம்

by by Jan 2, 2026 0

‘ மேதகு’ படத்தை இயக்கியதன் மூலம் உலகளாவிய தமிழர்களின் இதயத்தில் இடம் பெற்ற இயக்குனர் கிட்டு இப்படத்தின் மூலம் நாம் அதிகம் அறியாத தமிழ் ஈழப் போரில் முக்கிய அங்கம் வகித்த மருத்துவப் பணிகள் பற்றி நமக்குத் தெரிவிக்கிறார்.

போர் நடந்து கொண்டிருக்கும் இடத்திலேயே காயம் பட்டவர்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சிகிச்சை வேண்டி அங்கங்கே பூமியில் பதுங்கு குழிகள் அமைத்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பணிகளும் அதற்கான சவாலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன.

அப்படி மருத்துவப் பணிகளை மேற்கொண்டவர்களே சல்லியர்கள்…

Read More

டியர் ரதி திரைப்பட விமர்சனம்

by by Jan 2, 2026 0

பெண்கள் என்றாலே ஒதுங்கிப் போகும் ஃபோபியா உள்ள ஒருவனுக்கும் ஆண்களுடனேயே காலத்தை கழிக்க நேரும் பாலியல் தொழிலாளி ஒருத்திக்கும் ஒரு நாள் பொழுது உண்மைக் காதலைப் புரிய வைப்பதுதான் கதை.

இதை நேரடியான திரைக்கதை உத்தியில் சொல்லாமல் மாற்று சினிமாவாக தந்திருக்கிறார் இயக்குனர் பிரவீன் கே.மணி. அத்துடன் டார்க் காமெடியையும் முயற்சித்து இருக்கிறார்.

அப்படி பெண்களைக் கண்டால் நடுங்கும் சரவண விக்ரமின் பதட்டத்தை போக்க, பாலியல் தொழிலாளியான ஹஸ்லி அமானுடன் ஒரு நாளைக் கழிக்க நண்பன் ஒருவன் ஏற்பாடு…

Read More

பருத்தி சினிமா விமர்சனம்

by by Dec 26, 2025 0

ஊருக்கு வெளியே தனிமையில் வசிக்கும் சோனியா அகர்வால் மனதில் பலவிதமான குழப்பங்களுடன் வாழ்கிறார் என்பது படத்தின் ஆரம்பமாக இருக்கிறது. 

ஊருக்குள் தனது இரண்டு பேரன்களை வைத்துக்கொண்டு படாத பாடுபட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பாட்டியம்மா. 

இன்னொரு பக்கம் சற்றே வசதியான குடும்பத்தில் ஆதிக்க சாதியை சேர்ந்த அண்ணன் ஜாதி வெறி கொண்டவராகவும் தம்பி சமத்துவத்துடன் வாழ்பவராகவும் இருக்கிறார்கள்.

சமத்துவ விரும்பியின் மகளும் பாட்டியம்மாவின் இரண்டாவது பேரனும் ஒரே பள்ளியில் படித்து வருவதுடன் நட்புடனும் முளைவிடும் காதலுடனும்…

Read More

ரெட்ட தல திரைப்பட விமர்சனம் 3/5

by by Dec 26, 2025 0

தலைப்பைப் பார்த்தாலே படத்தின் கதை புரிந்து போகும். ஆனால் ரெண்டு தலைக்கும் என்ன பிரச்சனை என்பது படத்தைப் பார்த்தால் மட்டுமே தெரியும்.

உலக சினிமா வழக்கப்படியே ஒரு தல கோடீஸ்வரர். இன்னொருவர் ஏழை. ஆனால், தோற்றத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. தலைவலி வந்தால் அவர் ஏழை. ஒரு கால் இல்லாமல் செயற்கைக் காலோடு வந்தால் அவர் கோடீஸ்வரர். அதுதான் வித்தியாசம்!

இரண்டு தலைகளும் அருண் விஜய்தான் என்று சொல்லத் தேவையில்லை. பணம் இல்லாதவர் சித்தி இத்னானியை சிறுவயது முதலே…

Read More

ஹார்ட்டிலே பேட்டரி (ஜீ 5 ஒரிஜினல் சீரிஸ்) விமர்சனம்

by by Dec 14, 2025 0

எம்ஜிஆர் நடித்த பறக்கும் பாவை படத்தில் காதலை புரிந்து கொள்ள முடியாத நாயகி சரோஜாதேவி, “அழகை காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ..?” என்று ஒரு பாடலை பாடுவார்…

அப்படி ஒருவர் மனதில் உள்ள காதலை கண்டுபிடிக்கும் கருவியை இந்த தொடரின் நாயகி பாடினி குமார் கண்டுபிடிக்கிறார். அதன் விளைவாக அந்தக் கருவியை வைத்து சோதித்தால் காதலிப்பவர்களில் யார் மெய்யாக இருக்கிறார்கள், யார் பொய்யாக இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து விட இயலும். அப்படி இரண்டு காதல்களில் சோதிக்க…

Read More

மகாசேனா திரைப்பட விமர்சனம்

by by Dec 12, 2025 0

யானை வளர்க்கும் நாயகர்களை பற்றிய கதைகள் சமீபத்தில் தமிழ் படங்களில் நிறைய வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வரிசையில் இதிலும் பழங்குடியின தலைவராக வரும் நாயகன் விமல் ஒரு யானையை வளர்க்கிறார்.

அதன் பெயர் சேனா. அந்த யானைக்கு திடீரென்று மதம் பிடித்து காட்டுக்குள் சென்று விடுகிறது. அதுமட்டுமல்லாமல் இன்னொருநக்குழுவின் பகைமையும் விமலை, அவரது இனத்தையும் சூழ்ந்து நிற்கிறது.

இது ஒரு புறம் இருக்க விமல் வசிக்கும் மலை கிராமத்து கோவிலில் இருக்கும் யாளிஸ்வரன் சிலையை வனத்துறை அதிகாரி ஜான் விஜய்…

Read More

ஒண்டிமுனியும் நல்லபாடனும் திரைப்பட விமர்சனம்

by by Nov 25, 2025 0

மகன் உயிர் பிழைக்க வேண்டி காவல் தெய்வம் ஒண்டிமுனிக்கு ஒரு கிடாயை பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார் விவசாயி நல்லபாடன் (அந்த வேடத்தை ஏற்றிருக்கிறார் பரோட்டா முருகேசன்.)

அதன்படியே மகன் பிழைத்து விட, ஒரு கிடா குட்டியை வாங்கி வளர்த்து வருகிறார். மகனும் கிடாவும் வளர்ந்து நிற்க ஒண்டிமுனிக்கு அதை காணிக்கையாக்கும் வேளை மட்டும் வரவே இல்லை. 

அதற்குக் காரணம் அந்த ஊரில் பகைமை பாராட்டித் தெரியும் இரண்டு பன்னாடிகள். ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருப்பதால் இருவரும் ஒன்றுபட்டு கோயில்…

Read More

SISU Road to Revenge ஹாலிவுட் பட விமர்சனம்

by by Nov 25, 2025 0

இரண்டாம் உலகப் போரை அடியொற்றி அனேக படங்கள் வந்து விட்டன. அதில் 2022 டில் இதன் முதல் பாகம் வெளியானது.

போரின் பின்விளைவுகளால் தன் குடும்பத்தினரை இழந்த ஒரு போர் வீரர், தனித்து வாழ்ந்து வரும் தருணத்தில் இயற்கையின் பரிசாகக் கிடைத்த தங்க புதையலை எடுத்துக்கொண்டு பயணிக்கிறார். வழியில் வெறி கொண்டு அலையும் சில வீரர்களின் கையில் சிக்காமல் இருக்க, கடுமையான எதிர் தாக்குதல் நிகழ்த்துகிறார்.

இப்படி கதையைக் கொண்ட முதல் பாகம் அதிரி புதிரியான வெற்றியை அடைந்துவிட…

Read More

மாஸ்க் திரைப்பட விமர்சனம்

by by Nov 22, 2025 0

எப்படியாவது காசு சேர்க்க வேண்டும் என்கிற ஆசையில் நாயகன் கவின் ஒரு டிடெக்டிவாக பேர் பண்ணிக்கொண்டு அதை வைத்து பிளாக் மெயில் செய்து சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்.

அதேபோல் இன்னொரு பக்கம் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் பெண்களை வைத்து வியாபாரம் செய்யும் ஆண்ட்ரியா சூப்பர் மார்க்கெட் ஒன்றையும் நடத்தி வருகிறார். 

இவர்கள் இருவரையும் தூக்கிச் சாப்பிடும் விதமாக திடீர் எம் எல் ஏ வாக மாறிய பவன், எதிர்வரும் தேர்தலுக்காக மக்களுக்கு கொடுக்க வேண்டிய 440 கோடி…

Read More

இரவின் விழிகள் திரைப்பட விமர்சனம்

by by Nov 22, 2025 0

இது சமூக வலைதளங்களின் காலம். அதிலும் இக்காலத்தை யூட்யூப் யுகம் என்றே சொல்லலாம். அதில் நல்ல விஷயங்கள் ஒரு பக்கம் வந்தாலும் இன்னொரு பக்கம் தங்களுடைய பார்வையாளர்களைப் பெருக்கிக் கொள்வதற்காக பொதுமக்களை பாதிக்கும் விஷயங்களும் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. 

அப்படி சமூகத்தைக் கெடுப்பவர்களை தேடித் தேடிக் கொல்கிறார் ஒரு கொலையாளி. அவரிடம் யூ டயூப் ஜோடியான மகேந்திரனும் லீமா ரேவும் மாட்டிக்கொள்ள கொலையாளியிடம் இருந்து அவர்கள் தப்பினார்களா? அதன் பின்னணி என்ன என்பதுதான் கதை.

யூ டியூபராக மஹேந்திரன்…

Read More