சிக்லெட்ஸ் திரைப்பட விமர்சனம்
மறக்குமா நெஞ்சம் திரைப்பட விமர்சனம்
96 படம் வெளிவந்து வெற்றி அடைந்தாலும் அடைந்தது, அதற்குப்பின் பல ரி-யூனியன் கதைகள் வந்துவிட்டன. ஆனாலும் அவை அலுக்கவில்லை என்பதன் காரணம் எல்லோருக்குள்ளும் இருக்கும் பள்ளிப் பருவ நினைவுகளைக் கிளறி விடுவதே ஆகும்.
இங்கே அப்படி ஒரு ரி – யூனியனை தந்திருக்கிறார் இயக்குனர் ராக்கோ யோகேந்திரன். ஆனால், இது வழக்கமான ரி-யூனியனாக இல்லாமல் அதற்கு ஒரு ஆச்சரியமான களத்தையும் கண்டுபிடித்து இருப்பதுதான் இந்த படத்தின் தனிச் சிறப்பு.
இதுவும் 90ஸ் கிட்ஸ் சம்பந்தப்பட்ட கதைதான். 2008 ஆம்…
Read More
ஜெய் விஜயம் திரைப்பட விமர்சனம்
உங்கள் வீட்டில் உள்ள அப்பா, மனைவி, தங்கை என்று எல்லா உறவுகளும் உங்களை ஏமாற்றுவதாக நீங்கள் ஒருநாள் உணர்ந்தால் என்ன ஆகும்..?
இதுதான் இந்த படத்துக்காக இயக்குனர் ஜெய சத்தீஸ்வரன் நாகேஸ்வரன் எடுத்துக் கொண்டிருக்கும் லைன்.
அப்படியான ஒரு நிலைதான் நாயகன் ஜெய் ஆகாஷுக்கு ஏற்படுகிறது. தன்னுடைய அப்பாவாக இருப்பவர் உண்மையான அப்பா தானா, மனைவி நிஜம்தானா, தங்கை எப்படிப்பட்டவள் என்றெல்லாம் புரிந்து கொள்ள முடியாத ஹலுசினேஷன் என்று சொல்லக்கூடிய பழைய நினைவுகளை மறந்த நிலையில் இருக்கும் அவர்…
Read More
தூக்கு துரை திரைப்பட விமர்சனம்
ஓடுகிற குதிரை மேல் பணம் கட்டி விட்டால் போதும், அது எப்படி ஓடினாலும் பரவாயில்லை என்கிற எண்ணத்தில் ரேசுக்கு பந்தயம் கட்டியது போன்ற முயற்சி.
அப்படி யோகி பாபுவை நாயகனாகக் காட்டிவிட்டால் படம் ஓஹோ என்று ஓடிவிடும் என்று கணக்குப் போட்டு இருக்கிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்.
கிராமத்து விசேஷங்களுக்கு படம் காட்ட ஃபிலிம் சுருளுடன் வருபவர் யோகிபாபு. அப்படி கதை நடக்கும் கைலாசம் (கண்டிப்பாக நித்யானந்தா கிராமம் இல்லை) கிராமத்துக்கு வரும் யோகி பாபு அந்த ஊர்…
Read More
ப்ளூ ஸ்டார் திரைப்பட விமர்சனம்
திறமைக்கும், ‘தகுதி’க்கும் இடையில் நிலவும் ஏற்றத் தாழ்வு அரசியல்தான் கதைக்களம்.
அதை ஒரு 30 வருடங்கள் முன்னோக்கிப் புரட்டிப் பார்த்து நாம் அதிகம் அறிந்த / அறிந்திடாத அரக்கோணம் பகுதிகளில் வைத்துக் கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜெயக்குமார்.
அங்கே, ஊருக்குள்ளும், காலனிக்குள்ளும் தலா ஒரு கிரிக்கெட் டீம் இருக்க, இருவருக்குள்ளும் நிலவும் பேதம் கிரிக்கெட்டிலும் எதிரொலிக்கிறது… அது மட்டும்தான் கதையா என்றால்… இல்லை, அதற்கு மேலும் நிலவும் அடுத்த அடுக்கின் பேதங்களையும் திறமையால் உடைக்க உரக்கச் சொல்கிறது…
Read More
சிங்கப்பூர் சலூன் திரைப்பட விமர்சனம்
“மயிரைக் கட்டி மலையை இழுப்பது…” என்பார்கள். அப்படி ஒரு முயற்சியை ஆர்.ஜே. பாலாஜியை வைத்து இயக்குனர் கோகுல் செய்திருக்கிறார்.
எதற்காக மலையைப் போய் மயிரில் கட்டி இழுக்க வேண்டும் என்றால், ‘வந்தால் மலை… போனால் …’ என்கிற காரணத்தினால்தான். ஆனாலும், இதில் இவர்கள் சொல்லியிருப்பது எதைக் கட்டி இழுத்தாலும் அர்ப்பணிப்பும், கொள்கையில் உறுதியும் இருந்தால் மலை வந்தே ஆகும் என்பதைத்தான்.
பால்ய பருவத்தில் மனதில் பதியும் ஆசைகள் காலத்துக்கும் மறக்க முடியாததாக இருக்கும். அப்படித் தங்கள் ஊரில் முடி…
Read More
முடக்கறுத்தான் திரைப்பட விமர்சனம்
கொரோனா காலகட்டத்தில் இயற்கை வைத்தியத்தின் மூலம் எண்ணற்ற உயிர்களை காப்பாற்றிய சித்த மருத்துவர் வீரபாபு இயக்கி நாயகனாக நடித்திருக்கும் படம் இது.
சோகங்களில் கொடுமையானது புத்திர சோகம் என்பார்கள். பெற்ற குழந்தைகள் இறந்து போவதை விட கொடுமையான விஷயம் அவர்கள் காணாமல் போவது தான்.
அப்படி குழந்தைகளை கடத்தும் ஒரு கும்பலை பற்றிய கதை இது.
அன்றாடம் சாலையில் பயணிக்கும் போது ஒவ்வொரு சிக்னலிலும் கையில் வாடிய குழந்தையுடன் ஒரு பெண் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். அவள் யார்…
Read More
ஹனு மான் திரைப்பட விமர்சனம்
சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் என்றெல்லாம் அசாத்திய சக்தி படைத்த மனிதர்களை ஹாலிவுட் வழங்குவதை பார்த்து கிட்டத்தட்ட அதே பாணியில் ஹனு மான் (Hanu Man) என்ற பெயர் வைத்திருக்கும் சூப்பர் ஹீரோவின் கதை இது.
மிகவும் புத்திசாலித்தனமாக அமைக்கப்பட்ட திரைக்கதை இந்தப் படத்தின் பலமாக அமைந்திருக்கிறது. அத்துடன் இப்போதைய ராமராஜ்ய காலத்தில் படத்தை வெளியிட்டு பேரைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா.
படத்தின் ஆரம்பத்தில் ஒரு சிறுவன் சூப்பர் ஹீரோ ஆக பல…
Read More
மிஷன் சாப்டர் 1 திரைப்பட விமர்சனம்
தொடக்கத்தில் மறைந்த கேப்டனுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். தொடர்ந்து வரும் படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி கதை உள்ளே வர இதுவும் ஒரு கேப்டன் கதைதான் என்று புரிந்து விடுகிறது.
ஒரு காஷ்மீரிய கிராமத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து இருப்பது தெரிய வருகிறது. அவர்கள் ஏதோ திட்டத்துடன் இந்தியாவுக்கு வந்திருப்பது புரிகிறது.
இங்கே மனைவியை இழந்த அருண் விஜய் தன் மகளின் உடல்நலப் பிரச்சனையை தீர்ப்பதற்காக லண்டனுக்கு போகிறார். அங்கே மருத்துவமனைக்கு பணம் புரட்டும் முயற்சியில் போலீஸில் சிக்கி சிறைக்கு…
Read More
கேப்டன் மில்லர் திரைப்பட விமர்சனம்
நாட்டுக்கு ராஜாவாக இருக்க முடியாதவர்கள் தன் பெயரை ராஜா என்று வைத்துக் கொண்டு திருப்திப்படுவது போல இந்தப் படத்தில் நாயகனாக வரும் தனுஷ், ராணுவத்தில் சேர்ந்த அன்றே தன்னை கேப்டனாக நிறுவிக் கொள்கிறார்.
சுதந்திரத்திற்கு முன்பான இந்தியாவில் நடக்கிறது கதை. அப்போதெல்லாம் ஒவ்வொரு இந்தியனுக்கும் வெள்ளைக்காரர்கள் மட்டும்தான் எதிரிகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு. உள்நாட்டில் ராஜாக்களாக செயல்படும் ஜமீன்தார்கள்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் எதிரி என்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.
அப்படி சாதி ஏற்றத்தாழ்வால்…
Read More