
கொரோனா என்ற வார்த்தை அனைவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விஷயத்தில் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால், சிலர் கொரோனா காலத்தையே தங்களுக்கு சாதகமாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
அதில் இயக்குநர் கார்த்திக் ராஜுவும் ஒருவர். கொரோனா அச்சுறுத்தலா அவர் இயக்கி வந்த ‘சூரப்பனகை’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.
பரபரப்பாக ஓடிக்கொண்டே இருந்த கலைஞர்களுக்கு எப்போதுமே சும்மா வீட்டில் உட்கார்ந்திருப்பது பிடிக்காது.
கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியவுடன், குறைந்த குழுவினர் கொண்டு பணிபுரியும் வகையில் கதையொன்றை யோசித்து எழுதினார் கார்த்திக் ராஜு. அது நல்லதொரு…
Read Moreகொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தொலைக்காட்சி, திரைப்படப் படப்பிடிப்புகளுக்கும் தடை இருந்தது.
தற்போது பல கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியின் 12-வது சீஸன் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாம்.
‘தங்கல்’ திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கும் கோன் பனேகா க்ரோர்பதியின் இந்த சீஸனுக்கான போட்டியாளர்கள் தேர்வு முழுக்க முழுக்க டிஜிட்டலாக இணையம் மூலம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் முறையான சிகிச்சை பெற்று மீண்டு எழுந்த…
Read Moreபழம்பெரும் மலையாள பட இயக்குனரும் , நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்களின் தந்தையுமான ஏ.பி.ராஜ் தனது 95 வயதில் நேற்று (23 ஆகஸ்டு 2020 ) காலமானார்.
ஆரம்பத்தில் சிங்களப் படங்களை இயக்கியவர். மொத்தம் 10 சிங்கள மொழி படங்களை இயக்கி இருக்கிறார்.
மலையாளத்தில் மட்டும் 65 படங்களை இயக்கியிருக்கிரார். தமிழில் ‘கை நிறைய காசு’ உள்ளிட்ட ஒன்றிரண்டு படங்களை இயக்கியவர்.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது மலையாளப் படவுல கம்..!
Read Moreவழக்கமாக நடிக நடிகையர் தங்கள் குடும்பப் படங்களை வெளியே காட்டிக்கொள்ள ஆசைப்படுவதில்லை. அத்துடன் எப்போதும் பிஸியாக இருக்கும் அவர்களுக்கு குடும்பத்துடன் செலவழிக்க நேரமும் கிடைப்பதில்லை.
ஆனால் இந்த கொரோனா லாக் டவுன் எல்லா வரலாற்றையும் மாற்றிப் போட்டுவிட்டது. எல்லா இந்திய ஹீரோக்களும் அவரவர் வீடுகளில் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.
அப்படி தனுஷ் தன்னுடைய மகன்களுடன் நேரத்தை செலவழித்து வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தனுஷ் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்துக்கு சென்று…
Read Moreபல வெற்றி படங்களில் நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘கனா’ படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
“Article 15” (ஹிந்தி) படத்தின் உரிமையை முறையே பெற்று அப்படத்தின் தமிழ் பதிப்பாக இப்படம் உருவாகவுள்ளது.
Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க Romeo Pictures சார்பாக ராகுல் தயாரிக்கின்றார்.
மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
Read Moreஅமேசான் ப்ரைம் வீடியோ சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் வேர்ல்ட் பிரீமியரை அறிவித்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர்.
சூரரைப்போற்று அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் திரையிடப்படப்போகிறது.
சுதா கொங்கரா (இறுதி சுற்று) இயக்கத்தில், சூர்யாவே தயாரித்து மோகன் பாபு மற்றும் அபர்ணா…
Read More