April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிரசாத் ஸ்டுடியோ மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார் இளையராஜா
December 22, 2020

பிரசாத் ஸ்டுடியோ மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார் இளையராஜா

By 0 455 Views

ஐகோர்ட்டில் பிரசாத் ஸ்டுடியோவின் தரப்பில், நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் இளையராஜாவை அனுமதிக்க தயார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு முன்னதாக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் 50 லட்சம் இழப்பீடு கேட்டு, தங்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

பிரசாத் ஸ்டுடியோவுக்கு சொந்தமான நிலத்தை உரிமை கோர கூடாது. ஒரு உதவியாளர், ஒரு இசைக்கலைஞர் மற்றும் வழக்கறிஞர் மட்டுமே உடன் வர வேண்டும்.

இந்த நிபந்தனைகளை ஏற்று இன்று (செவ்வாய்) மாலைக்குள் தனது கைப்பட இளையராஜா நீதிமன்றத்தில் உத்திரவாத மனு தாக்கல் செய்தால் அனுமதிப்போம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி.

இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் வழக்கை வாபஸ் பெறுவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்ததுடன் ஸ்டூடியோ இடத்தில் உரிமை கோர மாட்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஸ்டூடியோவில் உள்ள தமது பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா கோரிக்கை வைத்துள்ளார்.

பிரசாத் ஸ்டூடியோவில் தியானம் செய்ய மட்டும் இளையராஜா அனுமதி கோரியிருந்தது குறிப்பிடத் தக்கது.

தொடர்ந்து ஒருநாள் காலை 9 டு 4 மணிவரை பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா இருக்கலாம் என்று சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்தது.