July 6, 2025
  • July 6, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் போட்டியிடும் சூரரைப் போற்று
December 20, 2020

கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் போட்டியிடும் சூரரைப் போற்று

By 0 698 Views

சுதா கொங்கரா இயக்கத்தில், தனது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பாக நடிகர் சூர்யா தயாரித்து நாயகனாக நடித்த தமிழ் திரைப்படமான சூரரைப் போற்று, 2020ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று.

உலகம் முழுவதும் தமிழ் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட சூரரைப் போற்று, தற்போது 78வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் போட்டியிடவுள்ளது.

இந்தச் சாதனை ஏன் இன்னும் விசேஷமானது என்றால், இந்த பெருமைக்குரிய விருது வழங்கு விழாவில் போட்டியிட அனுமதி பெற்ற முதல் நேரடி ஓடிடி வெளியீடுத் திரைப்படம் இதுவே. பிப்ரவரி 2021ல், பெவர்லு ஹில்டன், பெவர்லி ஹில்ஸில் இந்த விழா நடைபெறவுள்ளது.

கரோனா நெருக்கடி காரணமாக இந்த விழாவில் போட்டியிடும் திரைப்படங்களுக்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களும் கோல்டன் க்ளோப் மற்றும் அகாடமி விருதுகளில் போட்டியிட தகுதி பெற்றுள்ளன.

இந்தத் தகவலை 2டி நிறுவனத்தைச் சேர்ந்த ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண் டியன் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.