April 16, 2021
  • April 16, 2021
Breaking News
  • Home
  • 2d Entertainment

Tag Archives

கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் போட்டியிடும் சூரரைப் போற்று

by on December 20, 2020 0

சுதா கொங்கரா இயக்கத்தில், தனது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பாக நடிகர் சூர்யா தயாரித்து நாயகனாக நடித்த தமிழ் திரைப்படமான சூரரைப் போற்று, 2020ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று. உலகம் முழுவதும் தமிழ் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட சூரரைப் போற்று, தற்போது 78வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் போட்டியிடவுள்ளது. இந்தச் சாதனை ஏன் இன்னும் விசேஷமானது என்றால், இந்த […]

Read More

அருண் விஜய்யின் மகனை தன் தயாரிப்பில் அறிமுகப்படுத்தும் நடிகர் சூர்யா

by on December 14, 2020 0

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்து தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க, ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், மற்றும் RB Films S.R.ரமேஷ் பாபு, இணை தயாரிப்பு செய்கின்றனர். இப்படத்தை இயக்குபவர் சரோவ் சண்முகம். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் K […]

Read More

சூரரை போற்று வெளியீடு தள்ளிப் போகிறது – சொல்கிறார் சூர்யா

by on October 22, 2020 0

சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கி சூர்யா நாயகனாக நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று ‘.  இப்படம் இந்திய விமானியின் சாதனையை பற்றியது. இதில் நடிப்பதற்காக சூர்யா தன் உடலை வருத்தும் மற்றும் பல்வேறு பயிற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடி இருக்கும் இந்த நேரத்தில் சூரரை போற்று படத்தை ஓ டி டி தளத்தில் வெளியிட முதலில் ஆர்வம் காட்டி வந்த சூர்யா பிறகு தியேட்டர்களிலும் அதனை வெளியிட […]

Read More

2 கோடி பார்வைகளைக் கடந்தது அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ டிரெய்லர்

by on May 28, 2020 0

ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது. இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக இது […]

Read More

ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸ்

by on March 1, 2020 0

திருமணத்துக்குப்பின் தனஞ்ஜெயன் தயாரித்த ’36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகுக்குத் திரும்பினார் ஜோதிகா. அப்போதும் எவ்வளவு வாய்ப்புகள் வந்தாலும் ஒரே சமயத்தில் பல்வேறு படங்களில் நடிக்காமல், ஒரு படத்தை முடித்துவிட்டு, அடுத்த படம் என திட்டமிட்டு நடித்து வருகிறார். அந்த வகையில் புதுமுக இயக்குநர் ஜே.ஜே பிரட்ரிக் இயக்கி வந்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடி க்க ஜோ நாயகியாக நடித்து வந்தார். சூர்யாவின் […]

Read More

வானத்தில் வெளியிடப்பட்ட சூரரைப் போற்று பாடல் – வீடியோ

by on February 13, 2020 0

சூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ மற்றும் குணீத் மோங்காவின் ‘சிக்யா எண்டர்டெயின்மெண்ட்’ இணைந்து தயாரிக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க, சுதா கொங்கரா இயக்குகிறார். நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். பாலிவுட் நடிகர் ஜாகி ஷெராப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஊர்வசி, மோகன் பாபு, பரேஷ் ராவல், கருணாஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படம் ஏர்டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைக் கூறும் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் பெரும்பகுதி விமானத்தில் நடப்பதால், […]

Read More

சூர்யா வழங்கும் சில்லுக்கருப்பட்டி – சக்தி பிலிம் பேக்டரி சிறப்பு வெளியீடு

by on December 16, 2019 0

சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் கமர்ஷியல் படங்களை மட்டும் தயாரிப்பதோடல்லாமல், நல்ல திரைப்பட முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறது. தரமான நல்ல படங்களை தொடர்ந்து தயாரித்தும், சில நல்ல கருத்துள்ள படங்களை கண்டறிந்தும், அவற்றை வாங்கி வெளியிட்டும் மாறுபட்ட சினிமா அனுபவங்களுக்கு தங்களது ஆதரவை தொடர்ந்து தந்து வருகிறது. அந்த வகையில் மிக நல்ல படமாக இயக்குநர் ஹலிதா சமீம் இயக்கியுள்ள ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தின் மீதான ஈர்ப்பில் அப்படத்தின் உரிமையை பெற்றுள்ளார் 2D Entertainment நிறுவன […]

Read More

சூர்யா தயாரிக்கும் அடுத்தபடம் சசிகுமார் ஜோதிகா நடிக்க தொடங்கியது

by on November 28, 2019 0

தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் தரமான வெற்றிப்படங்களை தந்து வரும் நடிகர் சூர்யாவின் 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த பட பூஜை, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் இன்று  காலை (நவம்பர் 28) நடத்தப்பட்டது. மிக வித்தியாசமான படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர்கள் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி கூட்டணியில் சூரி, கலையரசன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கிறார்கள்.   கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக இந்தப் படம் […]

Read More

ஜோதிகா மாதிரி ராட்சசிங்க வந்தே ஆகணும்

by on June 13, 2019 0

ஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் ‘ராட்சசி’. ‘ராட்சசி’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விரைவில் படம் திரைக்கும் வர இருக்கும் நிலையில் அதனை இயக்கியுள்ள இயக்குநர் சை.கௌதம்ராஜ் அவர்களிடம் படத்தைப் பற்றிக் கேட்ட போது அவர் சொன்னார்… “ஒவ்வொரு பையனோட முதல் ஹீரோயினும் ஒரு டீச்சராத் தான் இருப்பாங்க.. எனக்கு என்னோட நாலாங்கிளாஸ் “நிர்மலா […]

Read More

சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் உறியடி விஜய்குமார்

by on September 20, 2018 0

’36 வயதினிலே’, ‘பசங்க-2′, ’24’, ‘மகளிர்மட்டும்’ ஆகிய படங்களை தொடர்ந்து, சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் வரை சமூக நோக்கிலான படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம். இந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ‘உறியடி’ பட இயக்குனர் விஜய்குமார் இயக்கவுள்ளார். ‘உறியடி’ படம் மூலம் திரையுலகையும் ரசிகர்களையும் கவனிக்க வைத்த இவர், தற்போது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்திருப்பது படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. மேலும் இந்த படத்தின் […]

Read More
  • 1
  • 2