October 5, 2026
  • October 5, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

சிக்மா திரைப்பட விமர்சனம்

by by Oct 3, 2026 0

சினிமாவைப் பொருத்தமட்டில் எல்லாத் துறைகளைச் சேர்ந்த கலைஞர்களின் வாரிசுகளும் ஹீரோவாக புகழ் பெறவே விரும்புகிறார்கள். இதற்கு பல உதாரணங்கள் உண்டு. 

ஆனால் ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் விஜயின் மகன் அப்படி எளிதாக கிடைக்கக்கூடிய சொர்க்க வாசலை விட்டுவிட்டு ஒரு இயக்குனராக வேண்டும் என்கிற வேட்கையுடன் களம் இறங்கி இருப்பதால் அவரது முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து இந்த படத்தை விமர்சிக்க தொடங்கலாம். 

அப்பா பட்ட கடனுக்காக பொறுப்பேற்று தானும் கடனாளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகன் சந்தீப் கிஷன்…

Read More

அன்பில் அவன் திரைப்பட விமர்சனம்

by by Oct 2, 2026 0

காதல் எத்தனை வலிமையானது… தன் காதலிக்காக ஒரு காதலன் எந்த அளவுக்கு அன்பு வைப்பான் என்று சொல்லும் கதை.

காதலின் காரணத்தால் தன் வசதியான குடும்பத்தை உதறிவிட்டு காதலன் அசோக் செல்வனை கைப்பிடித்து போதாமையில் வாழ்ந்து வருகிறார் பிரீத்தி முகுந்தன்.

அவரது ஆசை ஒன்றே ஒன்றுதான். ஒரு மலை வாசஸ்தலத்தில் வீட்டை வாங்கி அதை ஹோம் ஸ்டேவுக்கு வாடகைக்கு விட்டு வசதியாக வாழ வேண்டும் என்பது. எனவே இந்த பற்றாக்குறை வாழ்க்கையை விட்டு அவரை அவரது கனவு வாழ்க்கைக்குள்…

Read More

சிக்மாவுக்கு பிறகுதான் நடிப்பா இயக்கமா என்பதை முடிவு செய்வேன்..! – இயக்குனர் ஜேசன் சஞ்சய்

by by Oct 2, 2026 0

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.

நடிகை மகாலக்‌ஷ்மி, ” இந்த திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் சஞ்சய்க்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை”.

கலை இயக்குநர் பெஞ்சமின்,…

Read More

பத்தா திரைப்பட விமர்சனம் (4/5)

by by Oct 1, 2026 0

விஜய் சேதுபதியை பெரிய திரையில் பார்த்து எவ்வளவு நாளாகிறதென்ற எதிர்பார்ப்புகளுக்கு வடிகாலாக அமைந்த படம். அவருக்கென்றே எழுதப்பட்ட கதை போல் இருக்கிறது.

சிறுவயதில் நாம் படித்திருக்கும் அரக்கன் கோலியாத்தை எதிர்கொண்டு வென்ற சிறுவன் டேவிட்டின் கதையை ஒற்றிய லைன். இங்கே அடங்க மறுக்கிற தாதாவாக இருக்கும் விஜய் சேதுபதியை எளிய சிறுவன் சாய் பிருத்விராஜ் எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை.

தன் பெயரை கேட்டாலே அலரும் ஏரியாவை கலங்கடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை ஒரு கட்டத்தில் பார்த்து பயம்…

Read More

கிட்டி திரைப்பட விமர்சனம்

by by Sep 30, 2026 0

மர்டர் மிஸ்டரி கதைகளில் கொஞ்சம் புதுவிதமான கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் நெடுமாறன் மோகன்தாஸ். படத்தொடக்கமே இரண்டு கொலைகளில் தொடங்குகிறது.

ரவுடி ஒருவரும் இளம்பெண் ஒருத்தியும் அடுத்தடுத்து கொல்லப்பட, அந்தக் கொலைகளை செய்தவன் நான்தான் என்று நாயகன் அசோக் போலீசில் சரணடைகிறார். 

அவரை போலீஸ் கோர்ட்டில் ஆஜர் படுத்த, குற்றத்தின் பின்னணியை ஆராய்ந்து கோர்ட்டில் சமர்ப்பிக்க சொல்கிறார் நீதிபதி. 

அதற்காக களம் இறங்கும் காவல் அதிகாரி யுவனுக்கு அடுத்தடுத்து விசாரணையில் ஏற்படும் திருப்பங்கள் மிகப்பெரிய தலைவலியை தருகின்றன.

தான் இரண்டு கொலைகளை…

Read More

ஃபஹத் பாசில் இமேஜுக்குள் சிக்கிக் கொள்வதில்லை..! – சூர்யா

by by Sep 30, 2026 0

அர்கா மீடியா ஒர்க்ஸ் ( Arka Media Works) – ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா – எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் – அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம்…

Read More

தமிழ் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கக் கட்டத்துக்கு நிதி திரட்ட பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி..!

by by Sep 29, 2026 0

தமிழ் திரைப்பட இசை சங்கம் & ட்ரஸ்ட்,  மாயா பஜார் ஹப் நிறுவனம் நடத்துகிறது..!

தமிழ் திரைப்பட இசை கலைஞர்களின் சங்கம் இந்தியாவின் முதல் திரை துறை சங்கம் என்று பெருமைமிகு சங்கமாக விளங்குகிறது. இந்த சங்கத்தின் பல ஆண்டு கனவு தங்களது இடத்தில் ஒரு பிரமாண்டமான கட்டிடம் அமைத்து, அதில் வரும் வருமானத்தில் தங்களது உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான். அதற்காக இன்றைய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள்…

Read More

டோரதி திரைப்பட விமர்சனம்

by by Sep 28, 2026 0

படத்தின் யுஎஸ்பி இளையராஜா. இந்தப்படத்துக்கு ஏன் இளையராஜா என்பது படம் தொடங்கியவுடன் புரிந்து விடுகிறது. அது, 80 களில் தொடங்கி 90களில் தொடரும்  கதை என்பது.

அது ஏன் அப்போது நடக்கிறது என்பதற்கும் படத்தில் விஷயம் இருக்கிறது.

அத்துடன் இது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் கனவுப்படைப்பு என்று முன்னமே அறிந்து வைத்திருந்ததும், படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டி இருந்தது.

வழக்கமாக ஆரம்பிக்கிறது படம். சின்ன வயதில் இருந்தே நண்பர்களாக பழகி வருகிறார்கள் சனந்த் மற்றும் ரிஷிகாந்த். ஆளுக்கு ஒரு காதலில்லாத…

Read More

மீசைய முறுக்கு 2 திரைப்பட விமர்சனம்

by by Sep 27, 2026 0

மூன்று தலைமுறைக் கதை. மூன்று தலைமுறைகளிலும் இளைய பருவத்தில் ஹிப் ஹாப் ஆதியே இடம் பெறுகிறார். 

கானா பாடல்கள் கவனம் பெறாத காலக்கட்டத்தில் தொடங்குகிற கதை. அப்போது கோலோச்சிக் கொண்டிருந்த பாரம்பரிய இசைக்குப் போட்டியாக கானாவையும் கொண்டு வர முயற்சித்த முதல் தலைமுறை ஆதி தோற்றுப் போக, அடுத்த தலைமுறையில் அவர் மகனின் முயற்சியும் பலனற்றுப் போக, இந்தத் தலைமுறையில் அது முடிந்ததா என்பதுதான் கதை.

மூன்று தலைமுறைகளிலும் இளைய பருவத்தை கையில் எடுத்துக் கொண்டதால்  ஆட்டம், பாட்டம்,…

Read More

தி பேரடைஸ் திரைப்பட விமர்சனம்

by by Sep 27, 2026 0

இன்றைய காலகட்டத்தில் பிரம்மாண்ட படம் என்றால் கோடிகளைக் கொட்டி எடுப்பது மட்டுமில்லாமல் நம்மை புதிய அனுபவத்துக்குள் தள்ள வேண்டும் என்று இயக்குனர்கள் எண்ணுவதாக இருக்கிறது. 

கதையைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை. இதுவும் அப்படி ஒரு நம்ப முடியாத உலகத்தில்தான் நடக்கிறது.

சுதந்திர இந்தியாவின் அடிமைகளாக தங்கள் இனத்துக்கு மட்டும் குடியுரிமை கிடைக்காமல் போராடும் சவாரி என்ற இனத்தைப் பற்றிய கதை இது. 

ஓலா, ஊபர்  எல்லாம் சவாரி அனுமதி கிடைத்த விட இந்த சவாரி இன மக்களுக்கு மட்டும்…

Read More