September 21, 2026
  • September 21, 2026
Breaking News
March 4, 2026

முஸ்தபா முஸ்தபா திரைப்பட விமர்சனம்

By 0 317 Views

தலைப்பே நண்பர்களுக்கான ஒரு குறியீடுதான். அப்படியான நண்பர்களின் கதைதான் இது. அத்துடன் நம்ம சதீஷ் கதாநாயகனாக ஆனதால் இதைக் காமெடியான ட்ரீட்மெண்டுள்ள படம் என்றும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம்.

அப்படி ஐடி துறையில் வேலை பார்க்கும் சதீஷும், சுரேஷும் நண்பர்களாக இருக்கிறார்கள். சதீஷ் தன்னுடன் வேலை பார்க்கும் மோனிகா சின்னகோட்லாவைக் காதலித்து மனக்கவிருக்கிறார். 

அதற்கான பேச்சுலர் பார்ட்டியில் நடந்த மது விருந்தில் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருந்த சதீஷ் அடுத்த கூத்தைக் கேள்விப்பட்டு காதலை பிரேக் அப் செய்கிறார் மோனிகா.

பிறகு படாதபாடு பட்டு அவள் காதலைத் திரும் பப் பெற்று திருமண ரிசப்சனுக்கு ரெடியாகும் வேளையில் ஐஸ்வர்யா தத்தாவுடன் சதீஷ் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் வீடியோ வைரலாக… அதற்குப் பின் என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை.

சதீஷ் வழக்கம்போல் எந்த மெனக்கெடலும் இல்லாமல் நடித்துவிட்டுப் போகிறார். அங்கங்கே அவரது வழக்கமான நாடகபாணிக் காமெடியை பயன்படுத்துகிறார்.

நியாயப்படி பார்த்தால் இரண்டாவது நாயகனாக வரும் சுரேஷ்தான் ஹீரோவை போல் இருக்கிறார். அதற்கு நியாயம் சேர்க்கும் விதமாக அமைகிறது கிளைமாக்ஸ் திருப்பம்.

மோனிகாவுக்கு பெரிய வேலை இல்லை. 

ஐஸ்வர்யா தத்தாவை கிளாமர் ஏரியாவில் இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்.

நாம் இதுவரை பார்த்திருக்கும் ரொமான்டிக் காமெடி வகைப் பட டெம்ப்ளேட்தான். கிளைமாக்ஸ் திருப்பம் மட்டும் ‘அட ‘ போட வைக்கிறது.

முஸ்தபா முஸ்தபா – டோண்ட் ஒரி முஸ்தபா..!

– வேணுஜி