March 10, 2026
  • March 10, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

கப்புள் பிரண்ட்லி (Couple Friendly) திரைப்பட விமர்சனம்

by by Feb 15, 2026 0

நிலையற்ற வாழ்க்கைத் தன்மையை அதன் போக்கில் சொல்லிச் செல்லும் படம். நாளை என்ன நடக்கும் என்று தெரியாத வாழ்க்கை எப்படி எல்லாம் மனிதனை அதன் போக்கில் இழுத்துக் கொண்டு போகிறது என்பதை அப்பட்டமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர். 

இன்டீரியர் டெக்கரேட்டராக தொழிற்கல்வி பயின்று ஆனால் அதில் நிலைபெற முடியாமல் தவிக்கும் நாயகன் சந்தோஷ் சோபன், வருமானத்துக்காக பைக் டாக்ஸி ஓட்டுகிறார். 

அதன் மூலம் நாயகி மானசா வாரணாசியின் நட்பு ஏற்பட அது அவர்கள் இருவரையும் காதலுக்குள்…

Read More

ட்ரீம் கேர்ள் திரைப்பட விமர்சனம்

by by Feb 14, 2026 0

கனவில் கண்ட ஒரு முகத்தை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்? அதுவும் கனவில் வந்த ஒரு பெண்ணை காதலித்து… அவள் இறந்து போக, அதன் தொடர்ச்சியாக அவள் நேரிலும் வந்தால்..?

இப்படி ஒரு கற்பனைக் கதையைப் படமாக்கி அதை ‘பாலு மகேந்திரா டச்’சில் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் எம்.ஆர்.பாரதி.

கதைப்படி நாயகனாக நடித்திருக்கும் புதுமுகம் ஜீவா திரைப்பட இயக்குனராகும் முயற்சியில் இருக்கிறார். அதில் நாயகியாக நடிக்க ஒரு புதுமுகத்தை தேடிக் கொண்டிருக்கும் போது அவர் மனதில் இருந்த உருவத்தில்…

Read More

பூக்கி திரைப்பட விமர்சனம்

by by Feb 13, 2026 0

பூக்கி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஜென்z கிட்ஸ்களை அணுகவும்.

அதன் பொருள் தெரியாவிட்டாலும் பரவாயில்லை படம் முடிவதற்குள் ஒரு மாதிரி புரிந்து கொள்வீர்கள்.

படத்தின் ஆரம்பமே நாயகன் அஜய் திஷனுக்கும் ஆர்.கே.தனுஷாவுக்குமான பிரேக்கப்பில் தொடங்குகிறது. அதற்குப்பின் என்ன ஆனது என்கிற ஒரு வரிதான் கதையே.

ஆனால், இந்த ஒரு வரிக் கதைக்குள் இன்றைய இளைஞர்களின் எண்ணம், செயல், போக்கு எல்லாவற்றையும் படம் பிடித்து காட்ட முயற்சித்து இருக்கிறார் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கணேஷ் சந்திரா.

நாயகனாக நடித்திருக்கும் அஜய் திஷன்,…

Read More

ஸ்வீட்டி நாட்டி கிரேசி திரைப்பட விமர்சனம்

by by Feb 13, 2026 0

நல்லவேளை… இது அடல்ட் காமெடி படம் என்று தெரிந்து கொண்டேதான் படத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறோம்…

தன் ஹாஸ்டல் நண்பர்களிடம் தன் காதல் லீலைகளை சொல்ல ஆரம்பிக்கிறார் நாயகன் த்ரிகுண்.

அதன்படி தன் கல்லூரி ஜூனியர் நாயகி ஶ்ரீ ஜித்தா கோஷுக்கு கல்வியில் சந்தேகம் தீர்த்து அது கலவியில் முடிகிறது. முடிந்ததும் ஓவென்று அழுகிறார் த்ரிகுண்.

அதற்குக் காரணம் கேட்கும் ஶ்ரீ ஜித்தாவிடம், தான் படித்த டியூஷன் ஆசிரியை இனியாவுடன் ஏற்கனவே படுக்கையைப் பகிர்ந்து கொண்டதைச் சொல்ல அவர்களுக்குள் பிரேக் அப்…

Read More

மை லார்ட் திரைப்பட விமர்சனம்

by by Feb 11, 2026 0

‘மனிதர்கள் இறக்கிறார்கள் – ஆனால் மனிதம்  மரிப்பதில்லை.! என்பதுதான் படத்தின் அடிநாதம். அதைச் சொல்வதற்கு தமிழ்ப்படவுலகில் சசிகுமாரை விட்டாலும் ஆளில்லை.

தலைப்பைப் பார்த்து இது ஏதோ நீதி மன்றம் சம்பந்தப்பட்ட கதை என்று நினைத்துவிட வேண்டாம். அதிகார மமதையில் ஆதிக்கம் செலுத்த நினைப்பவர்களுக்கு ஒரு சாமானியன் தீர்ப்பு எழுத வாய்ப்புக் கிடைத்தால் அந்தத் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதுதான் கதை.

அப்படி அதிகார போதை கொண்ட மத்திய மந்திரியான ஆஷா சரத்துக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதாக, மாற்று சிறுநீரகம்…

Read More

வித் லவ் திரைப்பட விமர்சனம்

by by Feb 7, 2026 0

முதல் முத்தத்தையும் முதல் காதலையும் மறக்க முடியாது என்பார்கள். அதை அடிநாதமாக கொண்ட புதுமையான காதல் கதை இது.

நாயகன் அபிஷன் ஜீவிந்த்துக்கு திருமணம் செய்து வைக்க அவரது அக்கா ஒரு பெண்ணை பார்த்து அவளை சந்திக்க சொல்கிறார். 

அங்கே அபிஷனுக்காக காத்திருக்கும் நாயகி அனஸ்வரா ராஜன் அபிஷன் படித்த அதே பள்ளியில் ஜூனியர் ஆக இருந்திருப்பது தெரிகிறது.

அதனால் எளிதாக புரிந்து கொள்ளும் இருவரும் இயல்பாக தங்கள் முதல் காதலைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார்கள். 

அதன் முடிவில் தங்களது பழைய…

Read More

ரெட் லேபில் திரைப்பட விமர்சனம்

by by Feb 7, 2026 0

புதுமுக ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பான விஷயம். எனவே ஹீரோவாக விரும்புவார்கள் அவர்களே தயாரிப்பாளரானால்தான் உண்டு. 

அந்த வகையில் தானே தயாரித்து இந்த படத்தின் ஹீரோ ஆகியிருக்கிறார் லெனின். புது முகத்துக்குரிய பட்ஜெட்டில் நேர்த்தியாகப் படத்தை தர முடிவெடுத்த அவர் இயக்குனர் கே.ஆர்.வினோத் திறமையில் தன் முயற்சியில் வெற்றி அடைந்தாரா என்று பார்க்கலாம். 

ஒரு கல்லூரிதான் கதைக்களம். அந்தக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவரான லெனின், படித்த காலத்தில் அடிதடி வம்பு வழக்கு என்று போய் அந்த…

Read More

காந்தி டாக்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Jan 31, 2026 0

இந்த காந்தி தேசத்தில் முழுவதும் காந்திதான் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது எப்படி என்பதுதான் படத்தின் அடிநாதம்…

மும்பையில் நடக்கிறது கதை. குடிசைப் பகுதியில் பரம ஏழையாக வாழ்ந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கும், அதே முமபையில் கோடீஸ்வரராக வாழ்ந்து கொண்டிருக்கும் அரவிந்தசாமிக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை பணம்தான். 

கொள்ளையடித்தாவது பணத்தை சம்பாதித்தாக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் விஜய் சேதுபதியையும், இருக்கும் அத்தனை சொத்தும் கைவிட்டு போன நிலையில் தனது பங்களாவும் ஏலத்துக்கு வந்து நிற்கும் அரவிந்தசாமியையும் தேவை…

Read More

லாக்டவுன் திரைப்பட விமர்சனம்

by by Jan 30, 2026 0

மானம் போனால் உயிர் வாழ்ந்து எந்த பயனும் இல்லை என்ற எண்ணம் கொண்ட சாமானிய  தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்த நாயகி அனுபமா பரமேஸ்வரன் நல்ல வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறார். 

அப்படி வேலை விஷயமாக தோழியை பார்க்க செல்லும் போது மது விருந்தில் கலந்து கொள்ள நேர்கிறது. சும்மா ஒரு ஜாலிக்காக குடிக்கப் போய் அது எல்லை மீறிப் போனதில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்று விடு கிறது.

அவரது சுயநினைவு இல்லாத நிலையில் நடைபெற்ற அந்த சம்பவம்…

Read More

க்ராணி திரைப்பட விமர்சனம்

by by Jan 30, 2026 0

“அதென்ன க்ராணி..?” என்று தலைப்பிலேயே அச்சப்பட வேண்டாம். பாட்டி என்பதை ஆங்கிலத்தில் Granny என்று சொல்வார்கள் இல்லையா..? அதுதான் இது..! 

வழக்கமாக நாம் அறிந்த பாட்டிகள் எல்லோருமே குழந்தைகள் மீது அன்பு  கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இதில் வரும் க்ராணி ஒரு கிராதகியாக இருக்கிறாள்.

கதை இப்படி போகிறது…

ஐடி துறையில் செய்த வேலை போர் அடித்து போய் தங்களுடைய முன்னோர்கள் வாழ்ந்த காட்டுக்குள் இருக்கும் பழைய அரண்மனை போன்ற பங்களாவில் தங்கி விவசாயத்தை பார்க்க நினைக்கிறார் நாயகன் ஆனந்த்…

Read More