தமிழர் இடம் பெற்ற ஆஸ்கர் விருதுப் படம் பாருங்க
ஜெயலலிதா படத்தில் பாகுபலி எழுத்தாளர்
விஜய்யை வைத்து ‘தலைவா’ என்ற படத்தை இயக்கியவர் இயக்குநர் விஜய். அதனாலேயே அந்தப்பட வெளியீட்டில் நிறைய சிக்கல் எழுந்தது. அப்போதைய முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா.
நிற்க… இப்போது அதே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற தலைப்பில் இயக்கவிருக்கிறார் அதே விஜய். காலம் எப்படி சுழன்றடிக்கிறது என்ற கருத்துடன் இயக்குநர் விஜய் சொல்வதைக் கேளுங்கள்.
“தலைவி என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக…
Read More
ஒரே காட்சியில் விரியும் முழுநீளத் திரைப்படம்
ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ள இயலாத, உடலால் அறத்தை மதிப்பீடு செய்கிற ஒரு ஆண் மனதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தானும் தன் காதல் நினைவுகளுமாய் தன்னந்தனியே படுத்த படுக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிற கதாநாயகியை அவளின் காதலன் ஒரு மழைநாளில் சந்திக்கிறான்.
அவள் வசிக்கும் குடிலில் அவன் நுழைகிற போது அடைமழை அடித்துக் கொட்டுகிறது. காதலின் பரவசத்தை உறிஞ்சிக் கொள்கிற மழை. அந்த ஒற்றை அறைக்குள்ளான, அந்த ஒற்றை சந்திப்பை உயிரோட்டமான திரைக்கதையின் வாயிலாக விறுவிறுப்பாக,…
Read More
கார்த்தி ஜோடியாக கீத கோவிந்தம் புகழ் ரஷ்மிகா மண்டன்னா
கார்த்தி நடிக்கும் புதிய படம் விரைவில் ஆரம்பமாகிறது.’கே19′ (K19) என்கிற பெயர் சூட்டப்படாத இப்படம், எமோஷன், ஆக்ஷன் கலந்த காமெடி கதையாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக உருவாகவுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், தமிழ்நாடு உட்பட ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. கார்த்தியின் ‘சிறுத்தை’, ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் போன்று இப்படமும் அனைவரையும் கவரும் என்று இப்படத்தை S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு இணைந்து தயாரிக்கும்…
Read More
கமல் ரஜினிக்கு தேவை பணம் எனக்குத் தேவை இனம் – சீமான்
‘தம்பி திரைக்களம்’ மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய இரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பல சர்வதேச விருதுகளை குவித்த ’டுலெட்’ படத்தின்…
Read More
குண்டு வெடிப்பு கதையில் ஜெய் நடிக்கும் பிரேக்கிங் நியூஸ்
‘ஜெய்’ நடிப்பில் உருவாக உள்ள புதிய படமான ‘பிரேக்கிங் நியூஸ்’ தொடக்கவிழா சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோஸ் நடைபெற்றது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் படங்களில் பணிபுரிந்த கிராபிக்ஸ் வல்லுனரான ஆண்ட்ரூ பாண்டியன் இயக்க உள்ள இந்த படத்தை ராகுல் பிலிம்ஸ் சார்பாக கே. திருக்கடல் உதயம் தயாரிக்கிறார். படத்தின் நாயகியாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமான பானு அறிமுகமாக உள்ளார்.
மேலும் இப்படத்தில் தேவ்கில், வேதாளம் வில்லன் ராகுல் தேவ், மந்திரா…
Read More
நான்கு காதல் கதைகளின் தொகுப்பு சில்லு கருப்பட்டி
கள்ளக்காதலை திசை திருப்ப என் மீது புகார் கொடுத்த அதிதி மேனன் – அபி சரவணன்
கடந்த வாரம் நடிகர் அபி சரவணனை யாரோ கடத்தியதாக அவரது தந்தை ராஜேந்திர பாண்டியன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் மனைவியாக நம்பப்பட்ட நடிகை அதிதி மேனன் ஆட்களை வைத்து கடத்தியதாகவும் கூறப்பட்டது. இதன்பின்னர் காவல்நிலையத்தில் நேரில் ஆஜரான அபி சரவணன் தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து நடிகை அதிதி மேனன், அபி சரவணன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிதி மேனன்,…
Read More
அமேசான் பிரைமில் விஸ்வாசம் 50 வது நாள் அமர்க்களம்
பொங்கல் வெளியீடாக வெளியான அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பியது. இதுவரை அஜித் நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக அமைந்தது ‘விஸ்வாசம்’.
இன்னும் 10 தினங்களில் 50வது நாளை எட்டவிருக்கிறது ‘விஸ்வாசம்’. அதைச் சிறப்பாகக் கொண்டாட முடிவெடுத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். தொடர்ந்து 100வது நாள் விழாவையும் கொண்டாடத் திட்டமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வந்திருக்கிறது. அதாவது அமேசான் பிரைம் ஆன்லைனில் படம் வெளியான 50வது நாள் வெளியிட்டுக்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதுதான்…
Read More
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 2வது படம் இறுதிக் கட்டத்தில்…
‘கனா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தற்போது ‘தயாரிப்பு எண் 2’ படத்தை மிக வேகமாக முடித்து வருகிறது. ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியுள்ளன.
படம் பற்றி இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, “எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி தெரிவிப்பதை தவிர வேறு எதையும் என்னால் சிந்திக்க…
Read More