June 20, 2025
  • June 20, 2025
Breaking News
February 26, 2019

தல க்கு போட்டியாக துப்பாக்கி ஏந்தும் நடிகை

By 0 1004 Views

இப்போது திரைக்கு வரும் நடிகர்களும் சரி, நடிகைகளும் சரி… பல துறைகளில் திறமைசாலிகளாகவே இருக்கிறார்கள். இவர்களில் வடக்கே இருந்து வரும் ‘அடா ஷர்மா’ அடடே போட வைக்கும் அளவுக்கு திறமைசாலி.

இவர் கயிறை வைத்து விளையாடும் ‘மல்லகம்ப்’ விளையாட்டில் சூரி (‘சூரர்’க்கு பெண்பால் ‘சூரி’தானே..?) என்பதை கடந்த முறை அவரே ட்வீட் செய்த வீடியோவில் போட்டிருந்தோம். இந்த முறையும் ஒரு வீடியோ போஸ்ட் செய்திருக்கிறார் அவர்.

Adah Sharma

Adah Sharma

அதில் துப்பாக்கி சுடுவதில் ‘ரிவால்வர் ரீட்டா’ போல அட்டகாசமாக மிளிர்கிறார். கடந்த ‘வேலன்டன்ஸ் டே’வில் நடந்த இந்த நிகழ்வில் இரு பலூன்களை விட்டுவிட்டு (ஒன்று ரசிகர்களுக்காக இன்னொன்று அவரது மனம் கவர்ந்தவருக்காகவாம்…)  மற்றவற்றை ‘பட் பட்’டென்று சுட்டு அசத்தி விட்டார்.

சமீபத்தில் தல அஜித்தின் துப்பாக்கி ஏந்திய படங்கள் வலம் வந்தது நினைவிருக்கலாம். விட்டால் ‘தல’க்கு போட்டியாக இவரும் தன் துப்பாக்கித் திறமையை சேலஞ்ஜுக்கு விட்டாரோ தெரியவில்லை. 

அப்படியாவது ‘தல’ படத்தில் நடிக்க சான்ஸ் கிடைக்குமா என்பதால் இருக்கலாம்..! நல்ல ‘குறி’ தான்..!