August 9, 2026
  • August 9, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

சினிமாவை செப்பனிட வரும் தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம்

by by Feb 7, 2019 0

திரைப்பட துறையில், அதிகமாக முதலீடு செய்பவர்களான சினிமா பைனான்சியர்களுக்காக ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் இன்று உதயமானது. தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association – SIFFA) என்று பெயரிடப்பட்ட இந்த சங்கத்தின் அறிவிப்பு விழா 06-02-2019 அன்று நடைபெற்றது.
 
தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களுடனும் ஒற்றுமையுடன் பேசி, திரைப்படத்துறை நன்கு வளர பாடுபடும் என்று இச்சங்கத்தின் தலைவர் திரு. திருப்பூர் சுப்ரமணியம் விழாவின் போது அறிவித்தார்.
 
தென்னிந்திய…

Read More

திருமுருகன் காந்தி பாராட்டில் விஜய்சேதுபதி

by by Feb 5, 2019 0

மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன்  ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையில் நடந்தது.
 
அவ்விழாவில் விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி பிரேம்குமார்  , இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணீதரன், பி எஸ் மித்ரன், லெனின் பாரதி மற்றும் சமூக போரளியும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர்…

Read More

சிம்பு பிறந்தநாள் பார்ட்டி யில் தனுஷ் வீடியோ

by by Feb 3, 2019 0

ஹீரோயினை பேய்னு நினைச்சுட்டீங்க – தன் கதாநாயகியை தானே கலாய்த்த சந்தானம்

by by Feb 2, 2019 0

சந்தானத்தை எங்கே ஆளையே காணோம் என்று பார்த்தால் ‘தில்லுக்கு துட்டு இரண்டாம் பாக’த்தை எடுத்து முடித்துவிட்டு பிரஸ்மீட்டில் சந்தித்தார்.

ஆள் அடையாளமே தெரியாமல் மாறியிருந்தார். அதற்கு படத் தயாரிப்பாளரானதே காரணம் என்றவர் விழாவில் பேசியதிலிருந்து…

“நீண்ட நாள் கழித்து அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ‘தில்லுக்கு துட்டு’ முதல் பாகத்தில் கடைசி 20 நிமிடம் ரசிகர்கள் இடைவிடாமல் சிரித்தார்கள். அண்ஹ்த 20 நிமிடம் போல இப்படம் முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் கலந்து பேசி படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.

‘லொள்ளு…

Read More

சிவகார்த்திகேயனின் மிஸ்டர். லோக்கல் பட சிறப்பு

by by Feb 2, 2019 0

ஆச்சு… சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் அறிவிச்சாச்சு… ஸ்டூடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கவிருக்கும் அந்தப்படத்தின் டைட்டில் ‘மிஸ்டர். லோக்கல்’.

ஆனால், அதை இப்படி எழுதாமல் ஆங்கிலத்தில் Mr என்றும் தமிழில் லோக்கல் என்றும் எழுதுகிறார்கள். இதுதான் இந்தப்படத்தின் சிறப்பா என்று கேட்டு விடாதீர்கள். இதைவிட சிறப்பு இருக்கிறது.

‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த நயன்தாரா இதில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இதில் இணைவதும் சிறப்பாக இருக்கலாம். முதல்முறையாக சிவா படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா…

Read More

ரஜினி தலைவர் என்றால் பிரபாகரன், காமராஜர், கக்கன் யார் – சீமான்

by by Jan 31, 2019 0

‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.

கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ள படத்தில் இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.

‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுத, இஷான் தேவ்…

Read More

காற்றுள்ளபோதே வீட்டைக் கட்டிய யோகிபாபு

by by Jan 30, 2019 0

சென்னையில் குடியேறிய அனைவருக்குமே இங்கு ஒரு வீட்டைக் கட்டிவிட வேண்டுமென்ற கனவு இருக்கும். அதில் சினிமாக் காரர்களின் கனவு கொஞ்சம் பிரமாண்டமாகவே இருக்கும்.

வடிவேலுவும், சந்தானமும் விட்ட கேப்பில் ‘மள மள’வென்று முன்னேறியவர்கள் சூரியும், யோகிபாபுவும். இதில் சூரி சொந்த வீட்டைக் கட்டிவிட்டார். அவரைவிட கொஞ்சம் பின்னால் வந்தாலும் யோகிபாபுவின் வளர்ச்சி அபரிமிதமானது. அவர் இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்கிற அளவில் முன்னேறியவர் வளர்ச்சிக்குத் தக்கவாறு சம்பளத்தையும் சமீபத்தில் உயர்த்திக் கொண்டிருக்கிறாராம்.

Read More

இளையராஜா 75 க்கு தடை கேட்ட வழக்கு ஒத்தி வைப்பு

by by Jan 30, 2019 0

இளையராஜாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் நிதி தவறாகக் கையாளப்படுகிறது என்ற குற்றச்சாட்டு கூறி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்திரம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, துணைத் தலைவர் செங்குட்டுவேல் ஆஜராகினார். அவர் சார்பில் வழக்கிறஞர்கள் கிருஷ்ணா ரவிந்திரன், சார்லஸ் டார்ன் ஆஜராகி வாதிட்டனர்.

அவர்கள் கூறுகையில், தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலும், அடிப்படை ஆதாரங்கள் இன்றி உத்தேசமாக…

Read More

பாண்டி முனி கதைக் கேட்டுட்டு ஜாக்கி ஷெராப் என்ன செஞ்சார்? கஸ்தூரி ராஜா விளக்கம்!

by by Jan 29, 2019 0

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் பாண்டி முனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. படப்பிடிப்பில் அகோரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜாக்கி ஷெராப் .. சாதாரண நடிகர்கள் கூட தன்னை மிக உயர்ந்தவர்களாக காட்டிக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் மிக உயர்ந்த இடத்தில் மதிக்கக் கூடிய நிலையில் இருக்கும் ஜாக்கி சாதாரண மனிதனாக எல்லோ ருடனும் பழகிக் கொண்டிருந்தது ஆச்சர்யம் தான்.. எல்லோருடனும் செல்பி எடுத்துக் கொண்டிருந்த அவரை மடக்கி, ‘ இந்த…

Read More

நான்கு ‘கன்னி’கள் இணைந்து நடிக்கும் கன்னித் தீவு!

by by Jan 29, 2019 0

த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு அடுத்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’.

தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலட்சுமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு கூறுகையில், கன்னித்தீவு என்ற பெயர் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பெயர் அதோடு கன்னித்தீவு என்றாலே அட்வெஞ்சர் என்பதாலும் இந்தப்பெயரை படத்திற்கு வைத்தோம்.

அதோடு படத்தில் நான்கு…

Read More