March 28, 2024
  • March 28, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் முடிவடைந்தது
February 15, 2019

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் முடிவடைந்தது

By 0 835 Views

விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் ‘ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ்’ தயாரித்து வந்த ‘தயாரிப்பு எண் 2’ படம் படப்பிடிப்பை முடித்திருக்கிறது. திட்டமிட்டதை விடவும் மிக வேகமாகவும், எந்தவித சமரசமும் இன்றி படத்தை முடித்திருப்பது தயாரிப்பாளர் இர்ஃபான் மாலிக் உட்பட ஒட்டுமொத்த குழுவையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

“இந்த செய்தியைக் கேட்கும் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். நான் கூட அதற்கு விதிவிலக்கல்ல.  நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குழுவுடன் குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பை எப்படி முடிப்பார்கள் என்பதை பார்க்க காத்திருந்தேன். இருப்பினும், படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்றபோதுதான் குழுவில் உள்ள ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பை நான் உணர முடிந்தது. டப்பிங் பணிகளை விரைவில் ஆரம்பிப்போம்..!

விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி ஆகியோரின் புரிதலும், ஒருவருக்கொருவர் என்ன தேவை என்பதை மிகச்சரியாக புரிந்து வைத்திருப்பதும் படத்தை மிக வேகமாக முடிக்க காரணமாக இருந்தது. விஜய் சேதுபதி மட்டுமல்லாமல், ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்ப கலைஞர்களும் சீனு ராமசாமி என்ன எதிர்பார்ப்பார் என்பதை தெரிந்து வைத்துள்ளனர்.

பத்ம விபூஷன் இசைஞானி இளையராஜா மற்றும் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் பாடல்கள் மற்றும் அருமையான பின்னணி இசையைக் கேட்க ஒரு ரசிகனாக காத்திருக்கிறேன். ஒளிப்பதிவாளர் சுகுமார் சார் ஒவ்வொரு இயக்குனருக்கும் வரம். அவர் சீனு ராமசாமி சாரின் திரைப்படங்களுக்கு மிகச்சிறப்பான காட்சிகளை தருவார். இந்த படமும் விதிவிலக்கல்ல என உறுதியாக நம்புகிறேன்” என்றார் தயாரிப்பாளர் இர்ஃபான் மாலிக்.

‘ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸி’ன் முதல் தயாரிப்பான ‘பியார் பிரேமா காதல்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படமும் முடிந்துவிட ‘ரைஸா வில்சன்’ நடிப்பில் உருவாகும் மூன்றாவது தயாரிப்பான ‘ஆலிஸ்’ மிக விரைவில் தொடங்க இருக்கிறது.