April 15, 2021
  • April 15, 2021
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 10 கஜா புயல் பாதிப்பு பள்ளிகளைத் தத்தெடுக்கிறோம் – ஆர்ஜே பாலாஜி
February 28, 2019

10 கஜா புயல் பாதிப்பு பள்ளிகளைத் தத்தெடுக்கிறோம் – ஆர்ஜே பாலாஜி

By 0 396 Views
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார், மயில்சாமி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருந்தார்.
 
பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு நன்றியை தெரிவித்து கொண்டனர்.
 
அதில் அவர்கள் பேசியதிலிருந்து…
 
இப்படி ஒரு இடத்துக்கு வருவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. என் நிலைமையை தெரிந்து கொண்டு பாலாஜி என்னை தேடி வந்தது போல இருந்தது. 9 நாள் படப்பிடிப்பு புது அனுபவமாக இருந்தது. ரோகிணி திரையரங்கில் nமுடிந்து வெளியே வந்தபோது, என்னை சூழ்ந்த இளைஞர்களை கண்டபோது புதிதாக பிறந்தது போல உணர்ந்தேன். என் 32 ஆண்டு பொது வாழ்வில் எனக்கு கிடைத்த மிகச்சிறப்பான வரவேற்பு எல்கேஜி ரிலீஸுக்கு பிறகு நான் சொந்த ஊருக்கு சென்றபோது தான். பாலாஜி எனக்கு இன்னொரு பிள்ளை என்றார் நடிகர் நாஞ்சில் சம்பத்.
 
கடந்த சில ஆண்டுகளாக நான் தமிழ் படங்களில் நடிக்கவில்லையே என்ற குறை எனக்கு இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த ஐசரி கணேஷ், பாலாஜி ஆகியோருக்கு நன்றி. மயில்சாமி சார் சமைத்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறோம். பாலாஜி நீங்கள் இந்த படத்தின் ரியல் ஹீரோ என்றார் நடிகை பிரியா ஆனந்த்.
 
பாலாஜி எழுதிக் கொடுத்த கதையை நாங்கள் ஒரு குழுவாக இணைந்து திரையில் கொண்டு வந்திருக்கிறோம். துக்ளக் மாதிரி படம் இருக்கும் என படத்தை ரிலீஸ் செய்த சக்திவேலன் சொல்லியிருந்தார். இன்று மக்கள் துக்ளக் படத்தை விட மிகப்பெரிய வெற்றியை படத்துக்கு தந்திருக்கிறார்கள் என்றார் இயக்குனர் கேஆர் பிரபு.
 
வியாபாரத்தை தாண்டி இது எனக்கு மிக நெருக்கமான ஒரு படம் என்ற விநியோகஸ்தர் சக்திவேலன் அதே மேடையில் ஒட்டுமொத்த குழுவுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
 
RJ Balaji

RJ Balaji

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் முதல் படம் எல்கேஜி பெரிய வெற்றியை பெறும் என நாங்கள் ரிலீஸுக்கு முன்பே எதிர்பார்த்தோம். அடுத்து ஜெயம்ரவி படம், ஜீவா படம், தேவி 2 (ஏப்ரல் 5), பப்பி உள்ளிட்ட 5 படங்களை தயாரித்து வருகிறேன். இவை அடுத்தடுத்து இதே பேனரில் வெளியாகும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் மிக முக்கியமான படம். என் தந்தை பெயரில் தயாரித்த முதல் படமே பெரிய வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி என்றார் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ்.

 
என் மேல் நான் வைத்த நம்பிக்கையை என்னுடன் இருந்தவர்கள் கூட வைக்கவில்லை, ஐசரி கணேஷ் சார் நம்பிக்கை வைத்தார். இதுவரை பட்ஜெட் விஷயத்தில், செலவு செய்த விஷயத்தில் அவர் தலையிட்டதே இல்லை. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர் ஜேகே ரித்தீஷ்.
 
சிவாஜி சார் குடும்பத்தில் இருந்து இந்த படத்தை பார்த்து விட்டு, சிவாஜி ஃபிலிம்ஸிக்கு படம் பண்ண சொன்னார் ராம்குமார் சார். அவர் கேட்டது என் பாக்கியம். நாஞ்சில் சம்பத் சார் மீது இருந்த கறை இந்த படத்தின் மூலம் துடைத்தெறியப்பட்டது எனக்கு மகிழ்ச்சி. அடுத்தடுத்து 4 படங்களில் நடித்து வருகிறார். 45 நாட்கள் திட்டமிட்ட படத்தை 37 நாட்களில் முடித்தோம். முதல் பட ஹீரோவுக்கு 310 ஸ்கிரீன்ஸ் கிடைத்திருப்பதும், அதில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதும் மகிழ்ச்சி. அதை சாத்தியப்படுத்திய சக்திவேலன் சாருக்கும் நன்றி.
 
படத்தின் ரிலீஸுக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் ஐசரி கணேஷ் சார் விரும்பினால் அடுத்த படத்தை அவருக்கே செய்ய விரும்புகிறேன். இந்த படத்தின் வெற்றியின் மூலம் வரும் பணத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 10 பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த இருக்கிறோம் என்றார் நடிகர் ஆர்ஜே பாலாஜி.