January 23, 2025
  • January 23, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • குடும்பத்திடம் சொல்லாமல் விஜய் யிடம் சொல்லி விட்டு காஷ்மீர் சென்ற ராணுவ வீரர்
March 1, 2019

குடும்பத்திடம் சொல்லாமல் விஜய் யிடம் சொல்லி விட்டு காஷ்மீர் சென்ற ராணுவ வீரர்

By 0 937 Views
தமிழ் செல்வன் என்பவர் தீவிர விஜய் ரசிகர். இவர் தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர். 2002 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து இப்போது வரை 17 ஆண்டுகள் நாட்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறார். 
 
காஷ்மீரில் நிலவி  வரும் பதட்டமான சூழ்நிலையின் காரணமாக இவர் காஷ்மீர் செல்ல வேண்டி இருந்தது. இந்த செய்தியை தன் மனைவி , குழந்தைகள் , தாய் -தந்தை யாருக்கும் சொல்லாமல் போருக்கு செல்ல தயார் ஆனார்.
 
Vijay Fan

Vijay Fan

இந்த தகவலை தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் Left பாண்டி என்பவரிடம் பகிர்ந்துள்ளார். தமிழ் செல்வன் மீதுள்ள பாசத்தால் பாண்டி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு .புஸ்ஸி N ஆனந்த் அவர்களிடம் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

 
இதை அறிந்த தளபதி விஜய் தொலைபேசியில் தமிழ் செல்வனை தொடர்பு கொண்டு ”நீங்கள் ஒன்றும் கவலை படாதீர்கள் .உங்களுக்கு எதுவும் ஆகாது.வெற்றியுடன் திரும்புவீர்கள் .திரும்பி வந்தவுடன் உங்களை நான் சந்திக்கிறேன்..!” என பேசியுள்ளார்.
 
தளபதி விஜய் அவர்களுடன் பேசிய தமிழ் செல்வன் தான் மகிழ்ச்சியுடன் எல்லை காக்க காஷ்மீர் செல்ல இருப்பதாக கூறியுள்ளார்.
 
மேலும்  எனக்கு ஏதாவது நேரிட்டால் என் போட்டவை காட்டி அவருடன் புகைப்படம் எடுங்கள் . நான் திரும்பி வெற்றியுடன் வந்தால் உண்மையாகவே அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன்  என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
இப்படியும் ரசிகர்கள்..!