April 19, 2024
  • April 19, 2024
Breaking News
February 28, 2019

லைக்கா புரடக்‌ஷன்ஸின் அடுத்த படம் பன்னி குட்டி

By 0 928 Views

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் ” பன்னிக்குட்டி” .
இந்த படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரு.சுபாஷ்கரன் அவர்கள் தயாரிக்கிறார்.

இப்படத்தில் கருணாகரன் , யோகிபாபு , சிங்கம் புலி , திண்டுக்கல் லியோனி , T.P கஜேந்திரன் , லக்ஷ்மி ப்ரியா, ராமர் , ‘பழைய ஜோக்’ தங்கதுரை  ஆகியோர் முக்கிய  கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஆண்டவன் கட்டளை , 49-0 , கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘K’ என்கிற கிருஷ்ணகுமார் 
இப்படத்திற்கு இசையமைக்கிறார். கிருமி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் அனுசரனுடன் இணைந்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் சதிஷ் முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கம் N .R சுகுமாரன் , படத்தொகுப்பினை M.அனுசரண் மேற்கொள்கிறார்.