June 22, 2026
  • June 22, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

கிங் ஆஃப் கொத்தா திரைப்பட விமர்சனம்

by by Aug 26, 2023 0

மலையாளத்தில் மட்டுமே சிறந்த படங்கள் வருகின்றன என்று தமிழ் இயக்குனர்கள் எல்லாம் மலையாளப் படம் போன்ற நல்ல படங்களை எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தது ஒரு காலம்.

ஆனால் காசு… பணம்… துட்டு… மணி… மணி… என்றாகிப்போன சினிமா உலகில் ஆக்ஷன் படங்களுக்கே வருமானம் பெரிய அளவு வருகிறது என்பதற்காக மலையாளப் படங்களும் தமிழ் படங்களைப் பார்த்து ஆக்ஷன் சூடு போட்டுக் கொள்ள ஆரம்பித்து விட்டன. அதன் ஒரு வடுதான் இந்தப் படம்.

அருமையான படங்களில் அற்புதமான பாத்திரங்களை ஏற்று…

Read More

அடியே திரைப்பட விமர்சனம்

by by Aug 24, 2023 0

டைம் டிராவல், டைம் லூப், பேரல்லல் யூனிவர்ஸ் போன்ற சயின்ஸ் ஃபிக்ஷன் கற்பனைகளை எல்லாம் ஹாலிவுட் திரையுலகம், அற்புதமான படைப்புகளாக மாற்றித் தந்திருக்கிறது. 

ஆனால் அவற்றையெல்லாம் அறிவியல் பூர்வமாக தமிழில் சொல்வது என்பது மிகவும் சிக்கலான விஷயம். 

ஆனாலும் அதை நமக்கு புரியும் வடிவில் கமர்சியலாக சொன்னால் வெற்றி பெறக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்பதை மாநாடு போன்ற படங்கள் நிரூபித்திருக்கின்றன.

அந்த வகையில் பேரல்லல் யூனிவர்ஸ் என்ற இரண்டாம் உலகக் கதையைக் கொண்ட இந்தப் படமும் சேர்ந்து விடும் என்று…

Read More

புரோக்கன் ஸ்கிரிப்ட் திரைப்பட விமர்சனம்

by by Aug 18, 2023 0

சினிமா ஆசை பலரையும் பல வகையிலும் பாடாய்ப் படுத்துகிறது. பெரிய பட்ஜெட்டைப் போட்டு படம் எடுப்பவர்கள் வித்தியாசமாக சிந்திக்க பயந்து கொண்டு வழக்கமாக அரைத்த மாவை அரைத்துக் கொண்டு இருக்க சிறிய பட்ஜெட்டுடன் வருபவர்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு எப்படியும் படம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் இது. ஒரு குறும்படத்துக்கான சாத்தியத்தில் இருக்கும் இந்த பெரும் படத்தின் கதை என்னவென்பதை கிறிஸ்டோபர் நோலன் படத்தைப் புரிந்து கொள்பவர்கள் கூட புரிந்து…

Read More

ஜெயிலர் திரைப்பட விமர்சனம்

by by Aug 12, 2023 0

ஒரு காலத்தில் நம் ஹீரோக்கள் எல்லாம் தன் பெற்றோரைக் கொன்றவர்களைப் பழி தீர்த்துக் கொண்டிருந்தார்கள். இது ஹீரோக்களின் (வயதான) சீசன் 2 என்பதால் மகன்களைக் கொன்றவர்களைப் பழி தீர்க்க அதே ஹீரோக்கள் புறப்பட்டருக்கிறார்கள்.

இதிலும் ரஜினி அப்படி நேர்மையாக வளர்த்த தன் பிள்ளையை அந்த நேர்மைக்காகவே பறிகொடுக்க நேர, அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து பழி தீர்க்கும் கதைதான்.

இந்தக் கதை எல்லாம் தேவையே இல்லை – ரஜினி ஒரு படத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு தனி பிராண்ட் வேல்யூ…

Read More

வான் மூன்று திரைப்பட விமர்சனம்

by by Aug 10, 2023 0

எப்படிப்பட்ட காதலுக்கு ஆழம் அதிகம் என்று கேட்டால் இந்த பூமியில் அதற்கு பதிலே கிடைக்காது. அப்படி தோல்வியுற்ற காதல், ஜெயித்த காதல், முதுமையிலும் நிலைக்கும் காதல் என்று மூன்று பருவங்களில் மூன்று விதமான காதல்களைத் தொட்டுக்காட்டி இருக்கிறார் இயக்குனர் ஏ.எம்.ஆர்.முருகேஷ்.

பட ஆரம்பத்திலேயே தன் காதல் தோற்றுப் போனதால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று நினைவற்ற நிலையில் அனுமதிக்கப்படுகிறார் ஆதித்யா பாஸ்கர். அதே மருத்துவமனையில் காதல் தோல்வியால் பாதிக்கப்பட்டு அம்மு அபிராமியும் தற்கொலை முயற்சிக்காக அனுமதிக்கப்படும்போது இவர்கள்…

Read More

பிரியமுடன் ப்ரியா திரைப்பட விமர்சனம்

by by Aug 8, 2023 0

அன்புக்காக ஏங்கும் மனிதனுக்கு ஒற்றை  ஆளாய் அன்பு காட்டுவது கூட எத்தனை ஆபத்து என்று உணர்த்தி இருக்கும் படம்.

ஒரு எஃப் எம் ஒரு ரேடியோ நிலையத்தை சுற்றிய அமைக்கப்பட்டிருக்கும் கதை. அதில் புகழ்பெற்ற ஆர்.ஜே.வாக இருக்கும் லீஷா, தன்னுடைய கடைசி நிகழ்ச்சியை நிகழ்த்தவிருக்கிறார். அதற்குப்பின் அவர் திருமணம் ஆகி செட்டில் ஆகப் போகிறார் என்பது ஒரு வசனத்தின் மூலம் உணர்த்தப்படுகிறது.

அவரது ரசிகர்கள் அந்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு மூலையில் ஏங்கிக் கிடக்க லீஷா வசிக்கும் அவரது அக்காவின்…

Read More

வெப் திரைப்பட விமர்சனம்

by by Aug 6, 2023 0

நட்டி நடராஜ் நடிக்க ஒத்துக் கொள்ளும் கதைகளுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கும் என்பது பொதுவான மதிப்பீடு. அப்படி இந்த படத்துக்குள்ளும் ஒரு விஷயம் இருக்கும் என்று எதிர்பார்த்துதான் படத்தைப் பார்க்க ஆரம்பித்தோம்.

இருந்தாலும் அவர் நடித்த சில படங்களில் அந்த விஷயம் கேள்விக்குறியானதும் உண்டு.

இந்தப் படத்தில் அவரை அப்படி நடிக்க ஒத்துக் கொள்ள வைத்த விஷயம் என்ன என்பதைக் கடைசி பாராவில் பார்ப்போம்.

கதைப்படி படத்தின் நாயகியான ஷில்பா…

Read More

கல்லறை திரைப்பட விமர்சனம்

by by Aug 2, 2023 0

கல்லறை என்று தலைப்பு வைத்து விட்டதாலோ என்னவோ கொடைக்கானலில் தொடங்கும் முதல் காட்சியில் ஒரு கல்லறையைக் காட்டி விடுகிறார் இயக்குனர் ஏ.பி.ஆர்.

தன் இரு மகள்களோடு கொடைக்கானல் வருகிறார் புதுப் பணக்காரர். சொந்தமான  சொகுசு பங்களாவில் மூவரும் தங்கி, தன் இளைய மகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்.

அந்தப் பெண்ணுக்கு நோய் என்று எதுவும் இல்லை. ஆனால் போதைப் பழக்கத்துக்கு அடிமையானதால் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார் அந்தப் பெண். அதற்கு அங்கிருக்கும் மருத்துவர்…

Read More

பீட்ஸா 3 தி மம்மி திரைப்பட விமர்சனம்

by by Jul 29, 2023 0

ஒரு படத்தினுடைய வெற்றி அதே தலைப்பில் இன்னும் சில படங்களைத் தயாரிக்க வைத்து விடுகிறது. அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் ‘பீட்ஸா 3 – தி மம்மி.’

தமிழ்த் திரையுலகில் எந்தப் பெரிய தயாரிப்பாளரும் செய்யாத சாதனையாக தயாரிப்பாளர் சி.வி.குமார் பல திறமையான இயக்குனர்களைத் தந்தார். அவரது பிராண்ட் வேல்யூ அதுதான்.

அப்படித்தான் மோகன் கோவிந்த் இயக்கி இருக்கும் இந்தப் படத்தையும் அதிக எதிர்பார்ப்புடன் பார்க்க நேர்ந்தது.

பட ஆரம்பத்தில் ஒரு மம்மி பொம்மையைக் காட்டுகிறார்கள். அந்த பொம்மை இருக்கும்…

Read More

எல்ஜிஎம் திரைப்பட விமர்சனம்

எல் ஜி.எம் என்றால்..? ‘லெட்ஸ் கெட் மேரிட்..!’ அப்படி என்றால்… “நாம கல்யாணம் கட்டிக்கலாம்..!” என்பதுதான். தலைப்பில் இவ்வளவு காம்ப்ளிகேஷன் இருந்தாலும் கதை என்னவோ சிம்பிளான லைன்தான்.

ஐடி துறையில் வேலை பார்க்கும் அம்மா பிள்ளையான ஹரிஷ் கல்யாணும், இவானாவும் காதலர்களாக இருக்க, திருமணம் செய்து கொள்ள ஒரு கட்டத்தில் முடிவெடுக்கின்றனர். அப்போதுதான் இவானா ஒரு ஹீலியம் குண்டைத் தூக்கிப் போடுகிறார்.

அதாவது கல்யாணம் ஆன பின் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள தனியாகத்தான் வாழ வேண்டும்…

Read More