ஐஸ்வர்யா லக்ஷ்மியின் பாத்திரம் சிறியதாக இருந்தாலும் நெஞ்சில் நிறைகிறது. அங்கங்கே நடக்கும் அட்டூழியங்களை முடிவுக்கு கொண்டு வர அவர் எடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. அவரது ஆப்பிள் கன்னத்துக்கேற்றவாறு கிளைமாக்ஸ் அமைந்திருப்பது சுவையான திருப்பம்.
 
ஒரு பக்கம் போலீஸ் தரப்பிலும் இன்னொரு பக்கம் இரண்டு தாதாக்களின் புட்பால் மேட்டாகவும் இருக்கும் சப் இன்ஸ்பெக்டர் ஆக வரும் கோகுல் சுரேசுக்கு சொல்லிக் கொள்ள முடிகிற பாத்திரம். 
 
துல்கர் தங்கையாக அனிகா சுரேந்திரன்,  அம்மாவாக சாந்தி கிருஷ்ணா, அப்பாவாக ஷம்மி திலகன் நிறைவாக செய்திருக்கிறார்கள்.
 
ஷபீரின் அம்மா சஜிதாவின் பாத்திரம் சென்டிமென்ட்டுக்கு உதவுகிறது.
 
நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு நிமிர்ந்து நிற்கிறது. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படம் முடிந்தும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.