May 20, 2024
  • May 20, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

பூமராங் திரைப்பட விமர்சனக் கண்ணோட்டம்

by by Mar 8, 2019 0

பணம் போட்டுப் பணம் எடுக்கும் தொழில்களில் பிரதானமானதும், துரிதமான லாபம் பார்க்கும் தொழிலும் சினிமா மட்டும்தான். அதனால்தான் பல கார்ப்பரேட் கம்பெனிகள் கூட படமெடுக்க முன்வருகின்றன.

அப்படி லாபம் பார்க்கக் கூடிய சினிமாவில் தொண்ணூற்றுக்கும் அதிகமான பேர் லாபத்தை மட்டுமே முக்கியமாகக் கொண்டு மக்களுக்கு இதுதான் பிடிக்கும் என்கிற வகையில் அவர்கள் கிறங்கிச் சரிகிற செல்வாக்கு பெற்ற ஒரு ஹீரோ, ஒரு காதல், மூன்று ஃபைட், நான்கு பாடல்கள் என்று ஃபார்முலாவில் படமெடுத்தது போக இன்று டாஸ்மாக்கில்…

Read More

திருமணம் திரைப்பட விமர்சனம்

by by Mar 2, 2019 0

தமிழ் சினிமாவில் சேரன் படங்களுக்கு என்று தனியிடம் உண்டு. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் எப்படிப் பட்டதென்று வரும் காலத்துக்குச் சொல்லும் வரலாறாய் அமைவது அவரது படங்களின் தனிச்சிறப்பு.

அப்படி காலம் காலமாய் நம்மிடையே நிலவி வரும் ‘திருமணம்’ என்ற இருமனம் இணையும் சடங்குகள் சரியாகத்தான் நடைபெறுகின்றனவா என்று ஒரு உரைகல்லாக இந்தப்படத்தைத் தந்திருக்கிறார்.

இருக்கிறதோ இல்லையோ பிடிக்கிறதோ இல்லையோ ஊருக்காக உறவுக்காகவென்று மகளின் திருமணத்தை ஊரறிய நடத்தி கடைசிக்காலம் வரை கடனாளியாக தவிக்கும் எத்தனையோ பெற்றோரை நாம்…

Read More

எல்கேஜி திரைப்பட விமர்சனம்

by by Feb 23, 2019 0

லால்குடி கருப்பையா காந்தி என்ற பெயரின் சுருக்கம்தான் இந்த எல்கேஜி. அந்தப் பாத்திரத்தில் வருகிறார் ஆர்ஜே பாலாஜி. அரசியல் விமர்சகரான ‘சோ’ பாணியில் தற்கால அரசியலை நையாண்டியுடன் தூர் வாரி சுத்தப்படுத்தும் ஒரு முயற்சிதான் இந்தப்படம்.

அரசியலுக்குள்ளேயே வாழ்ந்தும் தம்படி தேராமல் வாழ்வை சேதாரப்படுத்திக்கொண்ட தன் அப்பா போல் ஆகிவிடாமல் வெற்றிகரமாக அரசியல்வாதியாக மாற முடிவெடுத்து ஏரியா கவுன்சிலராகும் ஆர்ஜே பாலாஜி, அதே தகிடுதித்த வேலைகளால் எப்படி மாநில முதல்வர் வரை உயர்ந்தார் என்று சொல்லும் கதைதான்…

Read More

டு லெட் திரைப்பட விமர்சனம்

by by Feb 22, 2019 0

உங்களுக்கு, எனக்கு ஏன் எல்லோருக்குமே தெரிந்த ஊரறிந்த… உலகறிந்த கதைதான். மனிதனின் அவசியத் தேவைகளான உணவு, உடை, வீடு இவற்றில் மத்திய மற்றும் அதற்கும் கீழான நடுத்தர வர்க்கத்தின் நிலை எப்போதும் மோசம்தான். அதிலும் அடுத்தவரை நம்பியிருக்கும் வாடகை வீட்டுப் பிரச்சினை அலாதியானது.

அதை இயல்பு கெடாமல் துயரங்களைத் துருத்தாமல் கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் – இயக்குநர் செழியன் பாராட்டுக்குரியவர். அத்துடன் நில்லாமல் 32 உள்நாட்டு, வெளிநாட்டுப் பட விழாக்கள் பாராட்டி விருது வழங்கியிருப்பதே அதற்குச் சான்று. அந்தப்…

Read More

ஒரு அடார் லவ் திரைப்பட விமர்சனம்

by by Feb 15, 2019 0

கல்வியும் கற்றலும் சார்ந்த இடமான பள்ளிக்கூடத்தை காதல் பயிலும் கூடமாகவே நினைத்துக் காதல்கள் எப்படி வளர்கின்றன, தேய்கின்றன, அழிகின்றன என்ற கதையை (கதைகளை..?) ‘திறம்பட’ எடுத்திருக்கிறார் இயக்குநர் ஓமர் லுலு.

காதல்தான் எல்லாம் என்று முடிவு செய்துவிட்டு ஸ்கிரிப்ட் எழுத உட்கார்ந்து விட்டதால் பள்ளி தொடங்கும் முதல் நாளிலிருந்தே காதலையும் தொடங்கிவிடுகிறார் இயக்குநர். முதல் நாள்… முதல் பார்வை… உடனே முதல் காதல்..!

பிரேயரில் கண்ணடித்து பிரேக்கில் ‘கிஸ்’அடித்து (அதுவும் லிப் டூ லிப்)… இந்த ஸ்கூல் எங்கே…

Read More

தேவ் திரைப்பட விமர்சனம்

by by Feb 14, 2019 0

காதல் கதைகளில் பெரும்பாலும் ஏழைக்கும் பணக்காரனுக்குமான காதலே முதலிடம் பிடிக்கும். ஆழமான காதல் என்றால் அது பெரும்பாலும் ஏழைகளுக்கிடையில் வருவதாகவே இருக்கும். உலகம் முழுக்க சினிமாவில் இதுவேதான் நிலை.

ஆனால், இந்தப்படத்தில் பணக்காரர்களுக்கான காதலைச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர்.

பெரிய தொழிலதிபரின் மகன் கார்த்திக்கு தன் மனம் போல் வாழப் பிடித்திருக்கிறது. கூடவே சாதிக்க வேண்டுமென்ற ஆவலும் இருக்கிறது. இன்னொரு பக்கம் தன் தந்தையின் மீதான வெறுப்பால் ஆண்கள் மேல் நம்பிக்கையில்லாமல் இருக்கும் இளம் தொழிலதிபரான…

Read More

சித்திரம் பேசுதடி 2 திரைப்பட விமர்சனம்

by by Feb 13, 2019 0

கதை ஒரே லைன்தான் – ‘நல்லவர்கள் வாழ்வார்கள், கெட்டவர்கள் வீழ்வார்கள்…’ ஆனால், இதைத் திரைக்கதைப் படுத்துவதற்கு இயக்குநர் ராஜன் மாதவ் ரொம்பவே மெனக்கட்டிருக்கிறார். அப்படி என்ன மெனக்கெடல் என்கிறீர்களா..? வாருங்கள்… பார்க்கலாம்.

விதார்த், அஜ்மல், அசோக், நந்தன் லோகநாதன், நிவாஸ் ஆதித்தன், பிளேட் சங்கர், வெற்றி, ஆடுகளம் நரேன், பஞ்சு சுப்பு, அழகம்பெருமாள், ஐசக், செவ்வாளை… ராதிகா ஆப்தே, காயத்ரி, நிவேதிதா, பிரியா பானர்ஜி… உஸ்… அப்பாடா..!

இத்தனைபேரும் படத்தில் வரும் கேரக்டர்கள். அத்தனி பேருக்கும் தனித்தனியாக கதை…

Read More

நேத்ரா திரைப்பட விமர்சனம்

by by Feb 10, 2019 0

நட்பையும், காதலையும் சரியாகச் சொல்லும் படங்கள் ரசிகர்களை ஏமாற்றுவதில்லை. அந்த வகையில் இந்த ‘நேத்ரா’ படமும் அதையே சொல்லி களம் இறங்கியிருக்கிறது.
 
கடந்த சில ஆண்டுகளாக நடிகராகிவிட்ட  இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படம் அவரது வழக்கமான பாணியிலிருந்து விலகி அவருக்கு வித்தியாசமான களத்தைத் தந்திருக்கிறது.
 
கதை முழுவதும் வெளிநாட்டில்தான் நடக்கிறது. ஆனால், வெளிநாடு போகிறோம் என்றாலே அதுவே…

Read More

தில்லுக்கு துட்டு 2 திரைப்பட விமர்சனம்

by by Feb 7, 2019 0

சரவணபவனில் என்னதான் மட்டன் பிரியாணி செய்து போட்டாலும் அங்கே வருபர்கள் மசால் தோசைக்கும், சாம்பார் வடைக்கும்தான் முக்கியத்துவம் தருவார்கள். அதுதான் இயல்பு. அப்படித்தான் என்னதான் சந்தானம் ஹீரோவாகி விட்டாலும் அவரிடம் நாம் எதிர்பார்ப்பதென்னவோ ‘காமெடி’யைத்தான்.

அப்படி இப்போது வந்திருக்கும் அவரது சொந்தப்படமான ‘தில்லுக்கு துட்டு 2’ நம் எதிர்பார்ப்பை எதிர்பார்த்ததற்கு மேல் நிறைவு செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இது ஆவி சம்பந்தப்பட்ட படம் என்பதால் அப்படியே ஆரம்பிக்கிறது. ஒரு மருத்துவ மனையில் நர்ஸாக வேலை பார்க்கும் நாயகி…

Read More

வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

by by Feb 1, 2019 0

அண்டா பாலாபிஷேக பிரச்சினை எல்லாம் ஒருவழியாக ஓய்ந்து காலைக்காட்சியில் சின்ன கட்டவுட், பால் பாக்கெட் அபிஷேகம் என்று கையடக்க கோலாகலத்துடன் இன்று சிம்பு நடித்திருக்கும் இந்தப்படம் ரிலீசாகி விட்டது.

சுந்தர்.சி படம் எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் சிம்பு நடிக்கும் படம் எப்படியும் அவரது வாழ்க்கையை ஒட்டியே திரைக்கதை எழுதப்படும். இரண்டையும் சேர்த்தால் எதிர்பார்க்கப்பட்ட அதே டெம்ப்ளேட்டில் இந்தப்படம்.

மிகப்பெரிய செல்வந்தரான நாசரின் 80-வது வயது பிறந்த நாளுக்கு அவரது பேரன் தருவதாக சொல்லியிருக்கும் பிறந்தநாள்…

Read More