வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கிய மகளிர் ஆளுமை விருதுகள் 2018
ஆன்ட்ரியா எழுதி பாடி நடித்த வீடியோ பாடலைப் பாருங்கள்
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆன்ட்ரியாவுக்கு நல்ல இசைத்திறமை இருப்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். அவர் அவ்வப்போது யுவன் சங்கர் ராஜா ,ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்து வருகிறார்.
இப்போது தன் ‘தி ஜெர்மையா புராஜக்ட் எங்கிற தன் இசை கம்பெனிக்காக ‘ஹானஸ்ட்லி’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார். இதன் சிறப்பு இதில் இடம்பெற்ற பாடலுக்கு ஆண்ட்ரியாவே பாடல் வரிகளை எழுதியும்,பாடியும் நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மற்றும் கெபா…
Read More
இந்திய கிரிக்கெட்டில் தோனி நிகழ்த்திய புதிய சாதனை
ஐக்கிய அரபு அமீரகத்தில் 14வது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், நேற்று (23 செப்டம்பர் 2018) நடந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்ட நிலையில் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
இந்த போட்டியில் தன் 505வது ஆட்டத்தை விளையாடியதன் மூலம் இந்தியாவிற்காக டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளையும் சேர்த்து அதிக அளவிலான போட்டிகளில்…
Read More
ஹாலிவுட் விநியோக அங்கீகாரம் பெற்ற ஈழத்தமிழர் திரைப்படம் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’
உலகில் உள்ள மக்களை உலுக்கிய, விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா இருவரின் கொடூர கொலை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கபட்ட திரைப்படம் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’.
இத்திரைப்படத்தை ஆஸ்திரேலியவாழ் ஈழத்தமிழரான, திரைப்பட இயக்குநர் ஈழன் இளங்கோ இயக்கி இருந்தார். இத்திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்படடது அனைவரும் அறிந்ததே.
பொதுவாக புலம்பெயர்ந்த தமிழர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில்…
Read More
காந்தி லலித்குமார் ஒரு சைக்கோ- டிவி நடிகை நிலானி பேட்டி வீடியோ
Courtesy – Puthiya Thalaimurai TV
Read More
75000 திருமணங்களுக்கு சமைத்த அறுசுவை அரசு நடராஜன் மறைந்தார்
திருமண விருந்துகள் என்றாலே தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவில் பெயர் பெற்றவர் ‘அறுசுவை அரசு’ என்று புகழப்பட்ட நடராஜன். தன் 90வது வயதில் அவர் நேற்று (17-09-2018) இயற்கை எய்தினார்.
1950ம் வருடம் திருமணங்களுக்கு சமையல் கான்ட்ராக்ட் எடுத்து கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இதுவரை 75,000 திருணங்களுக்கு நடராஜன் விருந்து படைத்திருக்கிறார் என்பது வியப்பான செய்தியாக இருக்கிறது.
முன்னாள் குடியரசுத்தலைவர் வி.வி.கிரியின் மகள் திருமணத்துக்கு விருந்து படைத்தபோது கிரி அவர்களால் ‘அறுசுவை அரசு’ பட்டம் தரப்பட்டதாக அவரது…
Read More
பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை அறிவிப்பு
அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டு அனைத்து வணிக நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
இந்தநிலையில் இன்று முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை…
Read More
நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டதால் நித்தியானந்தா தப்பி ஓட்டம்
பரபரப்புகளுக்குப் பெயர் போனவர் நித்யானந்தா. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகில் உள்ள பிடதியில் நடத்தி வரும் ஆசிரமத்தில் பெண் பக்தர்களை பாலியல் பலாத்காரம் செய்வதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று நித்யானந்தாவின் சீடர் லெனின் 2010-ம் ஆண்டு போலீசில் புகார் செய்தார்.
பிடதி போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் ராம்நகர் மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
சென்ற வாரம் 6-ந்தேதி இந்த வழக்கு…
Read More
பாரத் பந்த் – ஆளும் கட்சி ஆதரிக்காததால் தமிழகத்தில் பிசுபிசுத்தது
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பிற்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான மாநிலங் களில் எதிர்க்கட்சிகள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.
ஆனால், தமிழகத்தில் தி.மு.க உள்பட எதிர்க்கட்சிகள் பந்த்தை ஆதரித்தும் ஆளும்கட்சியான அ.தி.மு.க. பந்த்தை ஆதரிக்காதநிலையில் இன்றைய முழு அடைப்பால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை.
சென்னையைப் பொறுத்தவரை வழக்கம் போல பஸ்-ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள், தனியார் பள்ளி வேன்கள் வழக்கம் போல ஓடின….
Read More
காக்கிவாடன்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் பலி
ஒவ்வொரு வருடமும் நாம் தீபாவளி கொண்டாட சில உயிர்களைப் பலி கொடுக்க வேண்டியுள்ளது. அவ்வளவு அபாயகரமான தொழிலாக இருக்கிறது பட்டாசு தயாரிக்கும் தொழில்.
அப்படி இன்று காலை சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் செயல்படும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்க, உள்ளே இருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர். புகை மூட்டத்தில் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை அணைக்கப்…
Read More