February 15, 2025
  • February 15, 2025
Breaking News
September 15, 2018

பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை அறிவிப்பு

By 0 1114 Views

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டு அனைத்து வணிக நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

இந்தநிலையில் இன்று முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்…

“அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். அதற்கு மாற்றாக உள்ள பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளிவளாகம் என்ற பெயர் பலகை வைக்க வேண்டும்..!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.