November 8, 2024
  • November 8, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • அதிநவீன நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் புதிய மருந்தியல் சிகிச்சைகளுடன் அப்போலோ அமைத்த சிகிச்சை மையம்
March 5, 2024

அதிநவீன நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் புதிய மருந்தியல் சிகிச்சைகளுடன் அப்போலோ அமைத்த சிகிச்சை மையம்

By 0 1025 Views

அப்போலோ மருத்துவமனை, கல்லீரல் நோய்கள் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை மையத்தில் கொழுப்பு கல்லீரல் சிகிச்சை மையத்தை அமைத்துள்ளது: அதிநவீன நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் புதிய மருந்தியல் சிகிச்சைகளுடன் இந்த சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது!

 முதல் 75 பதிவுகளுக்கு அறிமுக சலுகையாக இலவச நோயறிதல் சோதனை மற்றும் ஆலோசனை வசதி வழங்கப்படுகிறது

சென்னை, 4 மார்ச் 2024: கொழுப்பு கல்லீரல் நோய் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இது ஒரு பெரிய சுகாதார கவலையாக மாறி வருகிறது. கொழுப்புக் கல்லீரல் நோய் இந்திய மக்கள்தொகையில் கணிசமானவர்களைப் பாதிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை இருக்கக் கூடும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன், நீரிழிவு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவை கொழுப்பு கல்லீரலுக்கு பெரிதும் காரணமாகின்றன. ஆரம்ப கட்டங்களில் பெரும்பாலும் அறிகுறியற்றதாகவே இது இருக்கும். ஆல்கஹால் அல்லாத கொழுப்புக் கல்லீரல் (NAFLD) கவனிக்கப்படாவிட்டால் கல்லீரல் இழைநார் வளர்ச்சி மற்றும் கல்லீரல் செயலிழப்பு போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும். சரியான உடல் எடையை நிர்வகிக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த கொழுப்புக் கல்லீரல் நோயைத் தடுக்கலாம்.

சுகாதாரப் பராமரிப்பில் சிறந்து விளங்கும் அப்போலோ மருத்துவமனை அதன் கல்லீரல் நோய் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை மையத்தில் கொழுப்பு கல்லீரல் சிகிச்சை மையத்தைத் தொடங்குவதாக இன்று (04-03-2024) அப்போலோ மருத்துவமனை அறிவித்து அதனைத் தொடங்கியுள்ளது. இந்த அதிநவீன வசதி இப்பிரிவில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும். நோய் கண்டறிதலுக்கு மிகச் சிறந்த ‘ஃபைப்ரோஸ்கேன் எக்ஸ்பர்ட் 630’ அறிமுகப்படுத்துகிறது. இது கல்லீரல் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும். ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயை (NAFLD) சமாளிக்கவும் தயார் நிலையில் இந்த சிகிச்சை மையம் உள்ளது. இந்த மையத்தை நடிகர் பிரசாந்த் தியாகராஜன் திறந்து வைத்தார். இது அப்போலோ மருத்துவமனையின் மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்துள்ளது.

அப்போலோ கொழுப்பு கல்லீரல் சிகிச்சை மையம் உலகின் மிக மேம்பட்ட நோய் கண்டறியும் கருவிகளைக் கொண்டுள்ளது. அத்துடன் கொழுப்பு கல்லீரலை நிர்வகிப்பதற்கான புதிய மருந்தியல் சிகிச்சைகளையும் வழங்குகிறது.

முக்கிய சிறப்பம்சமாக ஃபைப்ரோஸ்கேன் எக்ஸ்பர்ட் 630 [ ‘FibroScan Expert 630’] என்ற கருவி சாதாரண நிலைக்கு அப்பாற்பட்ட ஒரு அதிநவீன நோய் கண்டறியும் கருவியாகும். இந்த மேம்பட்ட உபகரணம், புதிய மண்ணீரல் விறைப்பு-வீக்க அளவீடு, உட்பொதிக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதல் அமைப்பு மற்றும் நாள்பட்ட கல்லீரல் நோய் நோயாளிகளின் ஆபத்து தொடர்பான துல்லியமான தகவல் ஆகிய வசதிகளை வழங்குகிறது. இது நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைக்கான நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகும்.

அப்போலோ மருத்துவமனைகயின் மூத்த கல்லீரல் நிபுணர் டாக்டர் என் முருகன் (Dr. N Murugan, Senior Consultant Hepatologist, Apollo Hospitals) கூறுகையில், “மாறிவரும் வாழ்க்கை முறை, உடல் உழைப்பு இல்லாத அமர்ந்த நிலையிலான வேலை முறைகள், அதிகரித்து வரும் மன அழுத்தம் போன்றவை காரணமாக கொழுப்பு கல்லீரல் நோய் நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. வயது வந்த நபர்களில் சுமார் 35 முதல் 40 சதவீதம் பேர் கொழுப்பு கல்லீரலைக் கொண்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நோயாளிகளில் கால் பகுதியினர் மேம்பட்ட கல்லீரல் நோயால் பாதிக்கப்படக்கூடும். ஃபைப்ரோஸ்கேன் 630 போன்ற தொழில்நுட்பங்கள், கல்லீரல் சேதத்தின் ஆரம்ப அறிகுறிகளை அல்லாமல் துல்லியமாக மதிப்பிட உதவுகிறது. மேலும் இதன் மூலம் இந்த நோயாளிகளுக்கு கல்லீரல் நோய் அதிகரிப்பதைத் தடுக்க உரிய சிகிச்சை அளிக்க முடியும்” என்றார்.

நடிகர் பிரசாந்த் பேசுகையில், “கல்லீரல் நோய் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை மையத்தில் கொழுப்பு கல்லீரல் சிகிச்சை மையத் திறப்பு விழாவை முன்னிட்டு அப்போலோ மருத்துவமனைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று மக்களிடையே கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருவதை உணர்ந்து, முன்கூட்டியே நோய் கண்டறிதல் மற்றும் உடனடி சிகிச்சையை நோக்கமாகக் கொண்ட இது போன்ற முயற்சிகள் அபாயத்தைக் குறைக்கும். ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சையளிப்பதன் மூலம் நோய்த் தடுப்பு குறித்த அப்போலோவின் செயலூக்கமான முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. இந்த சிக்கலான நோய் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான அப்போலோவின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது.” என்றார்.

இந்த மகத்தான தொடக்க நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில், அப்போலோ மருத்துவமனை சமூக அக்கறையுடன் ஒரு சேவையை வழங்குகிறது. இதன்படி இந்த நோய் தொடர்பான சிகிச்சைக்கு வரும் முதல் 75 நபர்கள் மருத்துவமனையில் இலவச பரிசோதனை வசதிகளைப் பெறுவார்கள். இது மேம்பட்ட கல்லீரல் சுகாதார மதிப்பீடுகளைப் பெறவும் முன்னணி நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறவும் ஒரு பிரத்யேக வாய்ப்பை வழங்குகிறது.

கல்லீரல் நோய் மற்றும் மாற்று சிகிச்சை மையத்தில் உள்ள கொழுப்பு கல்லீரல் சிகிச்சை மையம், கல்லீரல் நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதில் மிகச் சிறந்த நிபுணத்துவம் பெற்றது. ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் (NAFLD) நோயாளிகளுக்கான சிகிச்சையை மேலும் மேம்படுத்துவதில் இந்த மையம் தனித்துவமான கவனம் செலுத்துகிறது. விரிவான மற்றும் சிறப்பு சுகாதார சேவைகளை வழங்குவதற்கான அப்போலோ மருத்துவமனையின் நோக்கத்தை உள்ளடக்கியதாக இது அமைந்துள்ளது. இந்த முயற்சி நோய்களுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி சுகாதார சேவையில் சிறந்த எல்லைகளைத் தொடுவதை மையமாகக் கொண்டதாகும்.

அப்போலோ மருத்துவமனை பற்றி:

1983-ம் ஆண்டில், டாக்டர் பிரதாப் சி ரெட்டி இந்தியாவின் முதல் பெரு நிறுவன (கார்ப்பரேட்) மருத்துவமனையான அப்போலோ மருத்துவமனையை சென்னையில் தொடங்கியதன் மூலம் ஒரு முன்னோடி முயற்சியை மேற்கொண்டார். இப்போது, ஆசியாவின் முதன்மையான நம்பகமான ஒருங்கிணைந்த சுகாதாரக் குழுவாக அது உள்ளது. 72 மருத்துவமனைகளில் 12,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. 5000 மருந்தகங்கள், 400-க்கும் மேற்பட்ட ஆரம்ப பராமரிப்பு கிளினிக்குகள், 1228 நோய் கண்டறிதல் மையங்கள், 700-க்கும் மேற்பட்ட தொலை மருத்து மையங்கள், 15-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி மையங்கள் மற்றும் உலகளாவிய மருத்துவப் பரிசோதனைகளை மையமாகக் கொண்ட ஒரு ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகிய பலவற்றுடன் அப்போலோ குழுமம் செயல்பட்டு வருகிறது. அண்மையில் தென்கிழக்கு ஆசியாவின் முதல் புரோட்டான் தெரபி மையம் சென்னையில் தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும், அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் 10 லட்சம் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் மருத்துவ சேவைகளை வழங்குகிறது. சர்வதேசத் தரத்திலான சுகாதாரம், ஒவ்வொரு தனிநபருக்கும் கிடைக்கூடியதாக மாற்றுவதே அப்போலோவின் பணியாகும். அப்போலோவின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு நினைவு தபால்தலையை வெளியிட்டுள்ளது. இவ்வாறு ஒரு சுகாதார நிறுவனத்திற்கு தபால் தலை வெளியிடப்பட்டது இதுவே முதல் முறையாகும். அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டிக்கு 2010-ம் ஆண்டில் மதிப்புமிக்க பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

40 ஆண்டுகளாக, அப்போலோ மருத்துவமனைகள் குழுமம், மருத்துவ கண்டுபிடிப்புகள், உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவைகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றில் தொடர்ந்து சிறந்து விளங்கி, இத்துறையில் தமது முன்னணி நிலையைப் பராமரித்து வருகிறது. மேம்பட்ட மருத்துவ சேவைகளுக்காக நாட்டின் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக அப்போலோ மருத்துவமனைகள் தொடர்ந்து தரவரிசைப்படுத்தப்பட்டு வருகின்றன.

For more information, please contact:

APOLLO HOSPITALS I Suganthy S 9841714433

ADFACTORS PR| Timothy J 9962629240