June 25, 2026
  • June 25, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

ஐரா படத்தின் திரை விமர்சனம்

by by Mar 28, 2019 0

தேவலோகத்தின் தலைவன் இந்திரன் பவனி வரும் யானை ‘ஐராவதம்’ என்று புராணங்களில் கதைகள் குறிப்பிடுகின்றன. அந்த யானைக்கு பழிதீர்க்கும் குணம் அதிகமாம்.

அப்படி இந்தப்படத்தில் அதற்கு நேரெதிராக கருப்பு நிறத்தில் வரும் நயன்தாராவும் தன் வாழ்க்கை சீரழியக் காரணமானவர்களை இரக்கமின்றி பழிவாங்குகிறார். அதனால்தான் இந்தப்படத்துக்குத் தலைப்பு ‘ஐரா’.

சரி… எதற்காகப் பழி தீர்க்கிறார்..? அது பிளாஷ்பேக் விஷயம்.

நேரடியாகத் தொடங்கும் கதையில் ஒரு ‘பளிச்’ நயன்தாரா பத்திரிகையாளராக வந்து தனக்குப் பார்க்கும் திருமணத்தில் நாட்டமில்லாமல் கிராமத்தில் பாட்டி வீட்டுக்கு வருகிறார்….

Read More

எம்பிரான் திரைப்பட விமர்சனம்

by by Mar 24, 2019 0

இந்த ஆன்மாக்களின் சீசனில் இது வேறு வகையான ஆன்மா கதை மட்டுமல்லாமல் காதலிலும் புதுவழி கண்ட படம் என்று சொல்லலாம். அப்படியொரு நூல் பிடித்து இந்தப்படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா பாண்டி.

டாக்டராக வரும் ரெஜித் மேனனுக்கு ஒரு வினோதமான கனவு தொடர்ந்து வருகிறது. அதையறியும்போழுது அவரைக் காதலிக்கும் ராதிகா ப்ரீத்தி பற்றித் தெரிய வருகிறது. அவர்களின் காதலைச் சேர்த்து வைக்க ராதிகாவின் இறந்து போன் தாத்தா மௌலியின் ஆன்மா செய்யும் லீலைகள்தான் அந்தக் கனவு மேட்டர்…

Read More

நெடுநல்வாடை திரைப்பட விமர்சனம்

by by Mar 19, 2019 0

இன்றைய நகரத்துப் பின்னணி கொண்ட வாழ்க்கையில் தாத்தா பாட்டி உறவுகளெல்லாம் அர்த்தமற்றுப் போய்விட… ஏன் அறிமுகமில்லாமலேயே போய்விட, தமிழ்க்குடியின் அத்தியாவசிய உறவாக அமைந்த மூன்றாம் மூத்த உறவின் பெருமையைச் சொல்லியிருக்கிறது இந்தப்படம்.

கூடவே எந்த உறவுகளும், உறவு மறுப்புகளும் குடும்ப உறுப்பினர்களின் நன்மைக்காக மட்டுமே என்ற கருத்தையும் ஆழமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் செல்வக்கண்ணன்.

கிராமத்து வாழ்க்கையில் பெரும்பாலும் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு பாட்டி தாத்தாமார்களுக்கே இருக்கிறது. அப்படி பாட்டிக்கும், பேத்திக்குமான ஒரு உறவை கடந்த தலைமுறையில் ‘பூவே பூச்சூடவா’…

Read More

கிரிஷ்ணம் திரைப்பட விமர்சனம்

by by Mar 18, 2019 0

பக்திப்படங்கள் வருவது அருகிவிட்ட இக்காலத்தில் மீண்டும் கடவுள் பக்தி கொண்டவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட நவீனப் படம்.

வழக்கமாக பக்திப்படம் என்றாலே அது கற்பனைக் கதைகளை அடியொற்றிதான் இருக்கும். யாரோ சொன்னது, யாருக்கோ நடந்தது என்கிற அளவிலேயே அவை தயாரிக்கப்படும்.

ஆனால், தன் வாழ்வில் நடந்த… இன்னும் சொல்லப்போனால் தன் மகனுக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை அப்படியே படமாகத் தயாரித்திருக்கிறார் பி.என்.பலராம். இதுவே இந்தப்படத்தின் மீதான நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம்.

அத்துடன் அப்படித் தயாரான படத்தில் தன் மகனையே ஹீரோவாக்கியிருப்பதும் உலக சினிமாவில் ஒரு…

Read More

ஜூலை காற்றில் திரைப்பட விமர்சனம்

by by Mar 16, 2019 0

ஒருத்தி ஒருவனையோ அல்லது ஒருவன் ஒருத்தியையோ உருகி உருகிக் காதலித்த காலம் சினிமாவில் வழக்கொழிந்து போய் விடுமோ என்று அஞ்ச வைக்கின்றன சமீபத்திய காதல் படங்கள்.

இந்தத் தலைமுறையில் காதலுக்கான இலக்கணங்களை மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள் ‘நெக்ஸ்ட் ஜென்’ இயக்குநர்கள் என்பதைத் தெளிவாகப் புரிய வைக்கிறது இந்தப்படம். வரும் வருடங்களில் கல்யாணம் எல்லாம் வெற்று மாயையாகிப் போய்விடும் அச்சமும் இந்தப்படத்தைப் பார்த்தால் புரிகிறது.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் ‘அனந்த் நாக்’ ஒரு திருமணத்தில் அஞ்சு குரியனைப் பார்த்து…

Read More

கபிலவஸ்து திரைப்பட விமர்சனம்

by by Mar 8, 2019 0

திரைப்படங்களில் ஒன்று ஏழைகளின் பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படும்… இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது நடுத்தர வர்க்க பிரச்சினை. அவ்வப்போது பணக்காரர்களின் வாழ்வியல் படங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதில் தெருவோரம் வாழும் மனிதர்களைப் பற்றி சிந்திக்க யாருக்கு நேரம் இருக்கிறது..?

அதற்கு நான் இருக்கிறேன் என்று கிளம்பியிருக்கிறார் இயக்குநர் ‘நேசம் முரளி’. அவரே நாயகனாகவும் நடித்திருக்கும் படத்தின் களம் ஒரு பொதுக் கழிப்பிடம்.

பொதுக்கழிப்பிடத்திலேயே பிறந்த அவருக்குத் தாய் தந்தை யாரென்றே தெரியாது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்து அங்கேயே பாதுகாவலராக வாழ்க்கையை…

Read More

பூமராங் திரைப்பட விமர்சனக் கண்ணோட்டம்

by by Mar 8, 2019 0

பணம் போட்டுப் பணம் எடுக்கும் தொழில்களில் பிரதானமானதும், துரிதமான லாபம் பார்க்கும் தொழிலும் சினிமா மட்டும்தான். அதனால்தான் பல கார்ப்பரேட் கம்பெனிகள் கூட படமெடுக்க முன்வருகின்றன.

அப்படி லாபம் பார்க்கக் கூடிய சினிமாவில் தொண்ணூற்றுக்கும் அதிகமான பேர் லாபத்தை மட்டுமே முக்கியமாகக் கொண்டு மக்களுக்கு இதுதான் பிடிக்கும் என்கிற வகையில் அவர்கள் கிறங்கிச் சரிகிற செல்வாக்கு பெற்ற ஒரு ஹீரோ, ஒரு காதல், மூன்று ஃபைட், நான்கு பாடல்கள் என்று ஃபார்முலாவில் படமெடுத்தது போக இன்று டாஸ்மாக்கில்…

Read More

திருமணம் திரைப்பட விமர்சனம்

by by Mar 2, 2019 0

தமிழ் சினிமாவில் சேரன் படங்களுக்கு என்று தனியிடம் உண்டு. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் எப்படிப் பட்டதென்று வரும் காலத்துக்குச் சொல்லும் வரலாறாய் அமைவது அவரது படங்களின் தனிச்சிறப்பு.

அப்படி காலம் காலமாய் நம்மிடையே நிலவி வரும் ‘திருமணம்’ என்ற இருமனம் இணையும் சடங்குகள் சரியாகத்தான் நடைபெறுகின்றனவா என்று ஒரு உரைகல்லாக இந்தப்படத்தைத் தந்திருக்கிறார்.

இருக்கிறதோ இல்லையோ பிடிக்கிறதோ இல்லையோ ஊருக்காக உறவுக்காகவென்று மகளின் திருமணத்தை ஊரறிய நடத்தி கடைசிக்காலம் வரை கடனாளியாக தவிக்கும் எத்தனையோ பெற்றோரை நாம்…

Read More

எல்கேஜி திரைப்பட விமர்சனம்

by by Feb 23, 2019 0

லால்குடி கருப்பையா காந்தி என்ற பெயரின் சுருக்கம்தான் இந்த எல்கேஜி. அந்தப் பாத்திரத்தில் வருகிறார் ஆர்ஜே பாலாஜி. அரசியல் விமர்சகரான ‘சோ’ பாணியில் தற்கால அரசியலை நையாண்டியுடன் தூர் வாரி சுத்தப்படுத்தும் ஒரு முயற்சிதான் இந்தப்படம்.

அரசியலுக்குள்ளேயே வாழ்ந்தும் தம்படி தேராமல் வாழ்வை சேதாரப்படுத்திக்கொண்ட தன் அப்பா போல் ஆகிவிடாமல் வெற்றிகரமாக அரசியல்வாதியாக மாற முடிவெடுத்து ஏரியா கவுன்சிலராகும் ஆர்ஜே பாலாஜி, அதே தகிடுதித்த வேலைகளால் எப்படி மாநில முதல்வர் வரை உயர்ந்தார் என்று சொல்லும் கதைதான்…

Read More

டு லெட் திரைப்பட விமர்சனம்

by by Feb 22, 2019 0

உங்களுக்கு, எனக்கு ஏன் எல்லோருக்குமே தெரிந்த ஊரறிந்த… உலகறிந்த கதைதான். மனிதனின் அவசியத் தேவைகளான உணவு, உடை, வீடு இவற்றில் மத்திய மற்றும் அதற்கும் கீழான நடுத்தர வர்க்கத்தின் நிலை எப்போதும் மோசம்தான். அதிலும் அடுத்தவரை நம்பியிருக்கும் வாடகை வீட்டுப் பிரச்சினை அலாதியானது.

அதை இயல்பு கெடாமல் துயரங்களைத் துருத்தாமல் கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் – இயக்குநர் செழியன் பாராட்டுக்குரியவர். அத்துடன் நில்லாமல் 32 உள்நாட்டு, வெளிநாட்டுப் பட விழாக்கள் பாராட்டி விருது வழங்கியிருப்பதே அதற்குச் சான்று. அந்தப்…

Read More