October 5, 2026
  • October 5, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

நேற்று வனிதாவை மணந்த பீட்டர் பால் மீது முதல் மனைவி போலீஸில் புகார்

by by Jun 28, 2020 0

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா தன் இரண்டு திருமணங்கள் தோல்வியில் முடிய, பீட்டர் பால் என்பவரை நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். 
 
சரி… இந்தத் திருமணமாவது அவர் வாழ்க்கைக்கு கை கொடுக்கட்டும் என்று அனைவரும
 வாழ்த்தினார்கள்.
 
அந்த வாழ்த்துகள் அடங்குவதற்குள் பீட்டர் பால் மீது வடபழனி காவல் நிலையத்தில், அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் அளித்துள்ளார்.
 
பீட்டருடன் திருமணமாகி தமக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் முறையாக விவாகரத்து அளிக்காமல், அவர் வனிதாவை திருமணம் செய்ததாக…

Read More

யோகிபாபுவின் காக்டெய்ல் ஓடிடி ரிலீஸ்… தப்பித்தார் முருகப் பெருமான்

by by Jun 27, 2020 0

இயக்குநர் விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் படத்திற்கு காக்டெய்ல் என்று பெயர் வைத்ததுடன் நில்லாமல் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் வேலுடன் கடவுள் முருகன் கெட்டப்பில் யோகி பாபு போஸ் கொடுத்தார்.

அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே இப்படக் குழு எதிர்பார்த்த அளவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதே சமயம் தமிழ்க்கடவுள் முருகன் கெட்டப்பில் உள்ள யோகிபாபு- தோற்றத்துக்கு டீம் விளக்கம் கொடுத்தாலும், படத்திற்கு காக்டெய்ல் என மதுவின் பெயரை வைத்திருப்பதும் சர்ச்சையைக் கிளப்பி அடங்கியது.

சரி……

Read More

தற்கொலை செய்து மாண்ட சுஷாந்த் சிங் பெயரில் அறக்கட்டளை

by by Jun 27, 2020 0

இளம் திறமைகளை ஊக்குவிப்பதற்காக சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்த சுஷாந்த் சிங் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சுஷாந்த் சிங்கின் இழப்பு எங்கள் குடும்பத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதை எப்போதும் யாராலும் நிரப்ப முடியாது.

அவருடைய நினைவாக சுஷாந்த் சிங் அறக்கட்டளையைத் தொடங்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளோம். திரைப்படம், அறிவியல் விளையாட்டு ஆகிய துறைகளில் உள்ள இளம் திறமைகளை ஊக்குவிக்க உதவுவோம்.

பாட்னாவில் அவர் சிறுவயதில் வசித்த வீடு, நினைவு இல்லமாக…

Read More

200 ரூபாய்க்கு பிட்டு படம் காட்டும் ராம்கோபால் வர்மா மீது நடவடிக்கை பாயுமா? (Video only for Adults)

by by Jun 26, 2020 0

சில நாள்களுக்கு முன்புதான் பீகார் முதல்வர் ott திரையிடல்களுக்கு சென்சார் வேண்டும் என்று கேட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். 

அதை துரிதப்படுத்தும் போலிருக்கிறது பாலியலை மட்டுமே நம்பி படமெடுக்க தொடங்கிவிட்ட ராம்கோபால் வர்மாவின் அடுத்த பிரைவேட் சேனல் படம்.

இதில் முன்பு கிளைமாக்ஸ் என்ற படத்தை வெளியிட்டு கல்லா கட்டியவர் அந்த ருசியில் அடுத்து நேக்கட் என்ற படத்தை வெளியிடுகிறார். 

இது தொடர்பாக அவர், “ஒரு படம் முதல் வார இறுதியில் வசூல் செய்ய வேண்டும் என்று அதற்காக…

Read More

அமெரிக்க காதலியை கைப்பிடித்தார் கும்கி அஸ்வின்

by by Jun 25, 2020 0

பாஸ் என்கிற பாஸ்கரன், ஈட்டி, ஜாக்பாட், கணிதன் உள்பட பல படங்களில் நடித்துள்ள  நகைச்சுவை நடிகர் கும்கி அஸ்வின், விக்ரம் பிரபுவின் கும்கி படத்தில் நடித்து பிரபலமானார்.

இவர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் சுவாமிநாதன் மகன் ஆவார். கும்கி அஸ்வினுக்கும் சென்னை கே. கே.நகரை சேர்ந்த ராஜசேகர் மகள் வித்யாஸ்ரீக்கும்…

Read More

கார்த்தி ஆர்யா மோகன்லால் ராணா யாஷ் வெளியிடும் விஷாலின் சக்ரா டிரைலர்

by by Jun 24, 2020 0

விஷால் நடித்து வரும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர் வரும் சனிகிழமை வெளியாகிறது.

தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை தென்னகத்தின் நான்கு மாவட்டங்களில் நான்கு பிரபல நடிகர்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்கள்.தமிழில் கார்த்தி, ஆர்யா, தெலுங்கில் ராணா, மலையாளத்தில் மோகன்லால்,கன்னடத்தில் யஷ் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.

படத்தின் ட்ரெய்லர் வரும் சனிகிழமை வெளியாக இருக்கிறது.இதற்கு முன் வெளியான ‘சக்ரா’வின் க்ளிம்ப்ஸ் என்கிற குறு முன்னோட்டம் லட்சக்கணக்கான பார்வையாளர்களால் வரவேற்கப்பட்டுள்ளது.

இந்த குறு முன்னோட்டத்தை பார்த்தவர்கள் இது இரும்புத்திரை…

Read More

பாக்ஸர் படம் தொடங்கும் முன்பே தொடங்கிய குஸ்தி

by by Jun 24, 2020 0

‘அக்னிச் சிறகுகள்’, ‘சினம்’, அறிவழகன் இயக்கி வரும் படம் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அருண் விஜய்.

ஆனால் இந்தப் படங்களுக்கெல்லாம் முன்பு தொடங்கப்பட்ட படம் ‘பாக்ஸர்’. இதன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை.

ஆனால், இந்தப் படத்தின் கதைக்காக ஃபாரினுக்கெல்லாம் போய் ஏதேதோ கலைகள் எல்லாம் கற்று உடலமைப்பை முழுமையாக மாற்றினார் அருண் விஜய்.

ஆனாலும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கப்படாததால், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிட்டார் அருண் விஜய். ‘

Read More

பெண்குயின் புரமோஷனில் கீர்த்திக்கு பதிலாக நாய் – அப்செட்டில் அமேசான்

by by Jun 24, 2020 0

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகக் குறைந்தோரால் பார்க்கப்பட்டு தோல்வியடைந்த படம் பெண்குயின்.

இப்படத்துக்காக கீர்த்தி சுரேஷ் ஆறேழு நாள் சூமில்  மீடியா பேட்டி கொடுத்தும் பிக் அப் ஆகாத நிலையில் இப்போது ‘பெண்குயின்’ படத்தில் ‘சைரஸ்’ என்ற ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நாய் பற்றிய செய்தியை அப்டேட் செய்து புரொமோட் செய்ய முயன்றுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் பேங்க் எம்ப்ளாயீ-யும், பெண் குயின் மூலம் டைரக்டர் என்று சொல்லிக்…

Read More

சமந்தாவின் தோழிக்கு கொரோனா உறுதி… அவர் சொல்வதை கேளுங்க – வீடியோ

by by Jun 23, 2020 0

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவின் நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டி.

மாடலிங் துறையில் பிரபலமான இவர் உடற்பயிற்சி ஆர்வலரும் கூட. இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஷில்பா ரெட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவில் தானும் தனது கணவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், எந்த அறிகுறிகளும் இல்லாமல் மருத்துவர்களின் சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் கொரோனா பாதித்தாலும் அதை வெல்வது எப்படி என்று அவர் ஒரு வீடியோ…

Read More

தமிழகத்தை மீட்க வந்த இரண்டாம் பிரபாகரன் விஜய் – மதுரை போஸ்டரால் சர்ச்சை

by by Jun 23, 2020 0

நேற்று நடிகர் விஜய்யின் பிறந்த நாள் இந்த கொரோனா காலத்திலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

வசூலில் ரஜினியை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் விஜய் இருப்பதால் அவரது பலம் தெரிந்த அத்தனை சினிமாக்காரர்களும் அவரை வாழ்த்த தயங்கவில்லை.

சினிமா பிரபலங்களே அப்படி என்றால் ரசிகர்களை பற்றி சொல்லத்தேவையில்லை. அதில் எல்லாவற்றிலும் உச்சமாக மதுரை பீ பீ குளத்தைச் சேர்ந்த ரசிகர் நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள போஸ்டர் புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

தமிழின தலைவர் வே பிரபாகரன் அவர்களுடன் விஜய் அமர்ந்திருப்பது போல்…

Read More