July 27, 2024
  • July 27, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 200 ரூபாய்க்கு பிட்டு படம் காட்டும் ராம்கோபால் வர்மா மீது நடவடிக்கை பாயுமா? (Video only for Adults)
June 26, 2020

200 ரூபாய்க்கு பிட்டு படம் காட்டும் ராம்கோபால் வர்மா மீது நடவடிக்கை பாயுமா? (Video only for Adults)

By 0 3897 Views

சில நாள்களுக்கு முன்புதான் பீகார் முதல்வர் ott திரையிடல்களுக்கு சென்சார் வேண்டும் என்று கேட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். 

அதை துரிதப்படுத்தும் போலிருக்கிறது பாலியலை மட்டுமே நம்பி படமெடுக்க தொடங்கிவிட்ட ராம்கோபால் வர்மாவின் அடுத்த பிரைவேட் சேனல் படம்.

இதில் முன்பு கிளைமாக்ஸ் என்ற படத்தை வெளியிட்டு கல்லா கட்டியவர் அந்த ருசியில் அடுத்து நேக்கட் என்ற படத்தை வெளியிடுகிறார். 

இது தொடர்பாக அவர், “ஒரு படம் முதல் வார இறுதியில் வசூல் செய்ய வேண்டும் என்று அதற்காக விளம்பரம் செய்கின்றனர். இசை வெளியீட்டு விழா நடத்துகின்றனர். இதன் பிறகு விநியோகஸ்தருக்கான பணம், திரையரங்குக்கான பணம் என்று செலவு செய்கின்றனர்.

இவை அனைத்துக்குமான செலவு போகத்தான் தயாரிப்பாளருக்குப் படத்தில் வசூல் பணம் வருகிறது. அதை நேரடியாக மக்களிடமே எடுத்துச் சென்றால் கூடுதல் செலவுகள் குறையும், பணம் நேரடியாக தயாரிப்பாளருக்கே வரும். ரசிகர்கள் ஓடிடியில் படம் பார்க்க மாட்டேன் என்று சொல்லவில்லை. இப்போது அதை நிரூபித்தும் இருக்கிறார்கள்.

நான் எனது ‘க்ளைமேக்ஸ்’ திரைப்படத்தை எனது சொந்த இணையதளத்தில் வெளியிட்டேன். என்னைப் பிடிக்கும் என்பவர்கள், நான் எடுக்கும் சினிமா பாணி பிடிப்பவர்கள் என அவர்கள் மட்டுமே வரப்போகிறார்கள். அவர்களுக்காக எனது (இணையதள) திரையரங்கில் நேரடியாகப் படத்தைத் திரையிடுகிறேன்.

எனது படத்தை ஒரு நாளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பணம் கொடுத்துப் பார்த்திருக்கிறார்கள். இத்தனைக்கும் எங்கள் தளத்தில் சில பிரச்சினைகள் வந்து என் படத்தின் கள்ளப் பிரதி சில இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுவிட்டது.

அப்படியுமே நான் நிர்ணயித்த டிக்கெட் விலைக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள் என்றால் திரையரங்கு எதற்கு. அதற்கு அர்த்தம் என்ன?

அடுத்து ‘நேக்கட்’ என்ற படத்துக்கான டிக்கெட் விலையை 200 ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறேன். அதன் மதிப்பு 200 ரூபாயா, 100 ரூபாயா, 50 ரூபாயா என்பதை யார் முடிவு செய்ய வேண்டும்? பிடித்திருந்தால் மக்கள் வாங்குவார்கள், இல்லை வாங்க மாட்டார்கள், அவ்வளவுதானே.- என்றெல்லாம் சொன்னவர் இன்று நேக்கட் படத்தின் டைட்டில் சாங் என்ற பெயரில் ஒரு பிட்டு படத்தை அதையும் சர்ச்சைக்குரிய இசைக் கோர்வையுடன் ரிலீஸ் செய்திருக்கிறார்.

ஏற்கெனவே ஆன் லைன் கல்வி மொபைலில் போய்க்கொண்டிருக்கும் நிலையில் குழந்தைகள் கையில் இருக்கும் மொபைலில் இந்த காம சைத்தான் இயக்குநரின் படங்கள் படுவது நல்லதல்ல.

இதன் மீது நடவடிக்கை நிச்சய தேவை…